ஹலால் உணவு விழிப்பு உணர்வு..!

ஹலால் உணவு குறித்த விழிப்பு உணர்வு

ஹலால் உணவு குறித்த விழிப்பு உணர்வு

முஸ்லிமல்லாதமேலை நாடுகளில்கூட குறைந்தபட்சம் உடல் மற்றும் சமூக நலன் கருதி ஹலால் – ஆகுமான உணவுமுறையை ஏற்றுக்கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்’ -இஸ்லாமிய நிலையம்-IPC தமிழ்ப் பிரிவு சார்பாக குவைத் மஸ்ஜித் அல்-கபீர் அரங்கில் நடைபெற்ற ஹலால் விழிப்பு உணர்வு கருத்ததரங்கில் கூறினார், ஹலால் பேரவை – ர்யடயட குழசரஅ தலைவர் முஹம்மத் ஜின்னா அவர்கள்..!
உலக அளவில் ஹலால் உணவு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் முயற்சியின் ஒருமுகமாக குவைத்தில் அண்மையில், ஹலால் விழிப்பு உணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இஸ்லாமிய நிலையம் – ஐPஉ தலைமையக அழைப்புப்பணித் துறை தலைவர் அஷ்ஷெக் பவாஸ் அல்-துவைஜ் அவர்கள் தலைமை வகித்தார்.சகோ. ஷம்ஷூதீன் (எ) ஜேம்ஸ் அவர்களின் திருக் குர்ஆன் ஓதுதலுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது.IPC,தமிழ்ப் பிரிவு பொறுப்பாளரும்,வசந்தம் இதழ் ஆசிரியருமான சகோ.மு.அ.அப்துல் முஸவ்விர் அறிமுக துவக்கவுரை ஆற்றினார்.கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட,ஹலால் பேரவை – ர்யடயட குழசரஅ தலைவர் முஹம்மத் ஜின்னா, சிங்கப்பூர் அவர்களின் காணொளிக் காட்சி நடைபெற்றது.ஆகுமான பொருள்களின் அவசிம்,கண்டறிதல் மற்றும் நடைமுறை சாத்தியங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.நிகழ்ச்சியின் இடையே நிகழ்ச்சி

ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கூனிமேடு மககள் நலச்சங்கம் KEWA- தனது பணிகள் குறித்து எடுத்துரைத்தது.அதன் சார்பாக சகோ. நவ்ஷாத் அவர்கள் பேசினார்.அதேபோல் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான NAFஅமைப்பு சார்பாக பள்ளிப் பாசறைத் திட்டம் எனும் ளுஆயுசுவு ஆயளதனை குறித்த திட்ட வரைவு முன்வைக்கப்பட்டது.அதன் சார்பாக,சகோ.இக்ராம் தவ்ஃபீக் அவர்கள் காணொளிக் காட்சி வழங்கினார்.சகோ. சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கிக் கவுரவித்தார் இஸ்லாமிய நிலையம் – ஐPஉ தலைமையக அழைப்புப்பணித் துறை தலைவர் அஷ்ஷெக் பவாஸ் அல்-துவைஜ் அவர்கள்..!அமானுல்லாஹ் கான் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.கருத்தரங்கில் ஏராளமான முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத ஆடவர்-மகளிர் கலந்துகொண்டனர்.புகழனைத்தும் இறைவனுக்கே..!

Related Post