எம்மைக் குறித்து..!

குவைத், அந்நஜாத் நிறுவன அறக்கட்டளைக்குச் சொந்தமான மின்னணுசார் அழைப்புத் துறை (Electronic Da`wah Committee-EDC)-இன்  ஒரு திட்ட வரைவு Dawah Focused Network எனும் அழைப்பணிசார் குழுமம் ஆகும்.இதன் ஒரு பகுதியாக செயல்படுவது இந்த புதிய முஸ்லிம்கள் எனும் இணையதளம்!

புதிதாக இஸ்லாத்தின்பால் திண்மைத் தழுவுவோர் மற்றும் புதிய முஸ்லிம்கள், இஸ்லாமிய நெறியைக் குறித்து ஆக்கபூர்வ மற்றும் விலாவாரியான விளக்கங்களைப் பெற்றுக்கொள்வதற்கான, தனித்துவமிக்க ஒரு இணையதளமே ‘புதிய முஸ்லிம்கள்’

புதிதாக இஸ்லாத்தின்பால் திண்மைத் தழுவும் முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய அடிப்படைகள்,ஆன்மிக முன்னேற்றத்துக்கான வழித்துணைச் சாதனங்கள் ஆகியவற்றை தருவதே இதன் தலையாய நோக்கம் ஆகும்.மேலும், அவர்தம் தேவைகளுக்கேற்றவாறு சேவைகள் தந்து அவர்களுக்கு ஆதரவு வழங்குவதும் அதில் அடங்கும். அவர்களுக்கு இஸ்லாத்தின் உண்மை வடிவத்தையும் அதன் ஒப்புவமை இல்லா அழகிய தூதையும் எட்டச் செய்யவும் இந்த இணையதளம் முயற்சிக்கும், இறைநாடின்..!

இரண்டு இணையதளங்களை உள்ளடக்கிய இரு படிநிலைகளைக் கொண்ட பெரும்  திட்ட வரைவின் முதல் பெரிய திட்டவரைவே ‘புதிய முஸ்லிம்’. மற்றொரு இணையதளம் ‘நம்பிக்கை’ என்பதாகும்.இது இஸ்லாத்தைக் குறித்த மிக விரிவான விளக்கங்கள்,சித்தாந்தங்கள்,சீர்திருத்த நடைமுறைகள்,செயல்முறைகள் மற்றும் ஆழமான வியாக்கியானங்கள் கொண்டது.இது அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவான ஒரு தளமாக அமையும்.

E-Dawah Committee Al-Najat Charity Society