புனித ஹஜ் கடமையை கடமையை நிறைவேற்றுபவர் மேற்கொள்ள வேண்டிய கிரியைகள் குறித்து ஒரு சுருக்க விளக்கத்தை இங்கு தருகின்றோம்.!
ஹஜ்-இன் வகைகள்
1.தமத்து: உம்ரா செய்துவிட்டு நிறைவேற்றப்படும் ஹஜ்
2.இஃப்ராத்:ஹஜ் மட்டும் நிறைவேற்றுவது!
3.கிரான்:உம்ரா-வையும் ஹஜ்-ஜையும் ஒருசேர நிறைவேற்றுவது!
ஹஜ்-இன் கிரியைகள்;
இஹ்ராம்
நிய்யத் எனும் எண்ணம்> குளிப்பு>நறுமணம் பூசுதல்,இஹ்ராம் ஆடை அணிதல்,இரண்டு ரக்அத் தொழுதல்
தல்பிய்யா
ஹஜ் தமத்துக்கானது:
லப்பைக் அல்லாஹூம்ம பி உம்ரா-ஆஜராகிவிட்டேன் அல்லாஹ்வே! உம்ரா-வுக்காக (நான் ஆஜராகிவிட்டேன்)
ஹஜ் கிரான்-வகைக்கானது:
லப்பைக் அல்லாஹூம்ம பி ஹஜ்ஜ வ உம்ரா – ஆஜராகிவிட்டேன் அல்லாஹ்வே! உம்ரா மற்றும் ஹஜ்ஜூக்காக (நான் ஆஜராகிவிட்டேன்)
ஹஜ் இஃப்ராத் வகைக்கானது:
லப்பைக் அல்லாஹூம்ம ஹஜ்ஜன்-ஆஜராகிவிட்டேன் அல்லாஹ்வே! ஹஜ்;ஜூ-க்காக (நான் ஆஜராகிவிட்டேன்)
தவாஃப்
புனித கஅபா-வுக்குள் நுழைந்த பின்னர் புனிதப் பயணி ஒருவர் தவாஃப் செய்துவிட்டு> இரண்டு ரக்அத் தொழுகின்றார்.
ஸஈ
தமத்து வகை ஹஜ்-இல்> உம்ரா-வுக்காக ஸஈ செய்யப்பட வேண்டியது கட்டாயம்.ஆனால்> கிரான் மற்றும் இஃப்ராத் வகையில் ஸஈ-ஐ தாமதப்படுத்தலாம்.
தமத்து வகை ஹஜ் மேற்கொள்பவர் பின்னர்> தலைமுடியை மழிக்கவோ> குறைக்கவோ செய்கின்றார்.
இவ்வாறு செய்து முடித்தவுடன்> உம்ரா நிறைவேறுகின்றது. பின்னர்> முழுமையாக இஹ்ராமிலிருந்து வெளியேறிவிடுகின்றார்.
தமத்து வகை ஹஜ் செய்பவர் துல்ஹஜ் 8 அன்று ஹஜ்-ஜூக்கான இஹ்ராம் அணிகின்றார். பின்னர்> லப்பைக் அல்லாஹூம்ம ஹஜ்ஜன்-ஆஜராகிவிட்டேன் அல்லாஹ்வே! ஹஜ்;ஜூ-க்காக (நான் ஆஜராகிவிட்டேன்)
எனும் தல்பிய்யா-வை மொழிகின்றார்.
மினா-வை நோக்கி..!
மினா-வுக்கு செல்லும் புனிதப் பயணி அங்கு ளுஹர்> அஸ்ர்> மக்ரிப்> இஷா மற்றும் ஃப்ஜர் தொழுகின்றார்.
அரஃபா நோக்கி..!
துல் ஹஜ் 9-ஆம் நாள் சூரிய உதயத்தின்போது> புனிதப் பயணி அரஃபா நோக்கி பயணமாகின்றார். அங்கு திக்ர் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபடுகின்றார்.
முஸ்தலிஃபா நோக்கி..!
சூரியன் மறையும்போது> புனிதப் பயணி முஸ்தலிஃபா நோக்கி பயணமாகின்றார். அங்கு இரவைக் கழிக்கின்றார்.
மினா-வுக்குத் திரும்புதல்..!
சூரியன் உதயமாவதற்கு முன்னர், அவர் மினா-வுக்கு செல்கின்றார் அங்கு ஜமராத்-அல்-அகாபா-சாத்தானை கல்லெறிதல் கிரியை மேற்கொள்கின்றார்.
குர்பானீ
துல்-ஹஜ் 10 அன்று பலிப்பிராணியை குர்பானீ செய்கின்றார்.தனது தலைமயிரை மழிக்கின்றார் அல்லது குறைக்கின்றார். இப்போது> தனது துணைவியுடன் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்த்து ஏனைய அனைத்தும் அவருக்கு ஆகுமாகி அனுமதிக்கப்படுகின்றது.
மக்கா-வுக்குத் திரும்புதல்..!
பின்னர் புனிதப்பயணி மக்காவை நோக்கி திரும்பி அங்கு ஹஜ்ஜூ-க்கான தவாஃபும் ஸஈ-யும் செய்கின்றார்.
தவாஃபும் ஸஈ-யும் முடித்துவிட்டு மீண்டும் மினா திரும்பகின்றார். அங்கு அவ்விரு நாட்களிலும்>
மூன்று ஜமராத்-களிலும் சாத்தானை கல்லெறிதல் கிரியை-யை நிறைவேற்றுகின்றார்.
பிரியா விடை தவாஃப்
மேற்சொன்ன அனைத்து கிரியையைகளையும் முடித்த ஒரு புனிதப் பயணி இறுதியாக பிரியா விடை தவாஃப் செய்யாத வரை மக்கா-வை விட்டு வெளியேறுதல் கூடாது.
இது தவிர்த்து, மதீனா சென்று அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலைத் தரிசிப்பதும் மிகவும் விரும்பத்தக்கது.