ஒளூ ..!

நாதியா பலாக்
தமிழில்: அப்துல் முஸவ்விர்

இதுவன்றி, வழிபாடு – தொழுகை ஏற்றுக்கொள்ப்படுவதில்லை.

இதுவன்றி, வழிபாடு – தொழுகை ஏற்றுக்கொள்ப்படுவதில்லை.

ரீஅத்-மார்க்க சட்டத்தில்: ஒளூ எனும் வார்த்தையின் பொருள் வழிபாட்டுக்காக தன்னை தயார்படுத்திக்கொள்ளும் எண்ணத்துடன், உடற்பாகங்களை தண்ணீரால் கழுவுதல்.இதுவன்றி, வழிபாடு – தொழுகை ஏற்றுக்கொள்ப்படுவதில்லை.

ஒளூ எனும் தேகசுத்தியின் முக்கிய பாகங்கள் ஆறு:-

1. எண்ணம்
2. முகத்தைக் கழுவுதல்
3. கரங்கள் மற்றும் முழங்கைகளைக் கழுவுதல்
4. தலை-வகிடுப் பகுதியைத் தடவுதல்
5. கால்கள்-குதிகால்களைக் கழுவுதல்
6. வரிசைக்கிரமப்படி இவற்றை செய்வது பரிந்துரைக்கப்படுகின்றது.

இறைநம்பிக்கை கொண்டவர்களே! தொழுகைக்காகச் செல்லும்போது உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்களுடைய கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்; இன்னும் உங்களுடைய தலைகளை (நீரால்) தடவிக் கொள்ளுங்கள்! மேலும், உங்கள் கால்களை இரு கணுக்கால்கள் வரை கழுவிக் கொள்ளுங்கள்! திருக் குர்ஆன் 5:6

1. எண்ணம்:

வழக்கமான செயல்பாடுகளிலிருந்து வழிபாட்டுக்குரிய செயல்பாட்டு அம்சங்களைப் பிரித்துக் காட்டுவதே இதன் நோக்கம்.எண்ணம் என்பதே ஒரு வகை வழிபாடே என்பதால், ஒருவர் கட்டாயம் எண்ணம் கொள்ளுதல் வேண்டும்.எண்ணம் என்பது மனத்துடன் தொடர்புடையது, மேலும் அதனை வாயால் மொழிவது விரும்பத்தக்கது.

ஆண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் அருளினார்கள்:எந்தவொரு செயலும் அதற்குரிய எண்ணத்தைப் பின்னணியாகக் கொண்டது.ஒவ்வொருவரும் தான் எண்ணியதற்கு ஏற்பவே பெறுகின்றார்.
ஆதாரம்: புகாரி,முஸ்லிம்

எண்ணம் கொள்ளுவது எப்படி?

ஒருவர் தன் மனத்தால் இவ்வாறு நினைத்தல்: (ஒளூ செய்ய நாடுகன்றேன்) அல்லது (ஹதத்திலிருந்து தூய்மையாகுவதற்கு எண்ணிக் கொள்கின்றேன்) அல்லது இவ்வாறு கூறுதல்: (எனது வழிபாட்டை ஆகுமானதாக ஆக்கிக் கொள்ள நாடுகின்றேன்).முகத்தின் முதல் பகுதியை கழுவுவதற்கு முன்னர் ஒருவர் எண்ணம் கொள்ளுதல் வேண்டும்.

2. முகத்தை முழுமையாகக் கழுவுதல் (அதாவது தண்ணீரைப் பாய்ச்சுதல்)

உங்கள் முகங்களையும், (கழுவிக் கொள்ளுங்கள்;).. திருக் குர்ஆன் 5:6

ஒருவர் முடிவளர்ச்சியின் ஆரம்பப் பகுதியிலிருந்து ஆரம்பித்து, கன்னத்தின் அடிப்பகுதி வரை நீளவாக்கிலும்,காது மடல்களின் இருபரப்புக்களில் அகலவாக்கிலும் முகப்பகுதியைக் கழுவுதல் வேண்டும்.முகத்தைக் கழுவும்போது அதில் அடங்குகின்ற அனைத்துப் பகுதிகளையும், அதாவது புருவங்கள்,மீசை,மெல்லிய தாடியின் வெளிப்பகுதியாகத் தெரியும் மெல்லிய பகுதிகள் (அதில் வெளிப்படையாகத் தெரியாத தோல்பகுதி) கழுவ வேண்டும்.நீண்ட தாடியாக இருப்பின் அதன் உள்தோல் பகுதி வரை தண்ணீர் உட்செல்லும் வகையில் கழுவ வேண்டுமு;.

3. கரங்கள் மற்றும் முழங்கைகளைக் கழுவுதல்
..முழங்கைகள் வரை உங்களுடைய கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்;.. திருக் குர்ஆன் 5:6

கரங்கள் மற்றும் முழங்கைகளைக் கழுவுதல்

கரங்கள் மற்றும் முழங்கைகளைக் கழுவுதல்

நான் அபூ ஹூரைih (ரலி) அவர்கள் ஒளூ செய்வதைக் கண்டேன்.அவர் தனது முகத்தை நன்றாகக் கழுவினார்.பின்னர் தனது வலக்கையை..,அதன் கரப் பகுதிi உள்பட கழுவினார்.பின்னர் தனது இடக்கையை.., அதன் கரப் பகுதிi உள்பட கழுவினார்.பின்னர் தனது தலையைத் தடவினார்.பின்னர் தனது வலது காலை அதன் முழங்கால் எலும்பு வரையும் பின்னர், தனது இடது காலை அதன் முழங்கால் எலும்பு வரையும் கழுவினார்.பின்னர் கூறினார்: அண்ணலார் (ஸல்) அவர்கள் ‘இவ்வாறுதான் ஒளூ செய்ததைக் கண்டேன்..!’
அறிவிப்பாளர்:நுஐம் பின் அப்துல்லாஹ் அல்-முஜ்மிர் ஆதாரம்: முஸ்லிம்
(கரங்கள் மற்றும் முழங்கைகளில் உள்ள) அனைத்து தோல் மற்றும் முடிப்பகுதிகள் கழுவப்பட வேண்டும்.நகங்களின் உள்ளே தண்ணீர் புகுவதற்குத் தடையாக ஏதேனும ;இருப்பின் உதாரணமாக நகப்பூச்சு அல்லது அழுக்கு) அவற்றை நீக்கிவிட்டு நன்கு உள்வரை கழுவுவது கட்டாயமானதாகும்.

நூங்கள் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனா நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம்.தண்ணீர் இருந்த வழியே வந்தோம். அப்போது எங்களில் சிலர் மதியவேளைத் தொழுகைக்காக, அவசர அவசரமாக ஒளூ செய்தனர்.நாங்கள் அவர்களை அடைந்தபோது அவர்களின் குதிகால்கள் உலர்ந்துவிட்டிருந்தன.அவற்றை தண்ணீர் தொட்டிருக்கவில்லை.அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நரகநெருப்பிலிருந்து உங்கள் (உலர்ந்த) குதிகால்களைக் காத்துக்கொள்ளுங்கள்!’
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

ஒரு மனிதர் ஒளூ செய்துவிட்டு ஒரு நகத்தின் அளவுக்கு இருந்த பகுதியை (நனைக்காமல்) விட்டுவிட்டார்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘திரும்பிச் சென்று மீண்டும் ஒளூவை முழுமையாக நிறைவேற்றுங்கள்.அந்த மனிதர் (மீண்டும்) திரும்பிச் சென்று (ஒளூவை முழுமையாக நிறைவேற்றி) தனது தொழுகையை நிறைவேற்றினார்.
அறிவிப்பாளர்: உமர் இப்னு கத்தாப் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்
மேற்சொன்ன இரண்டு நபிமொழிகளிலிருந்தும் தெரிய வருவது இதுவே: ஒளூவுக்குரிய அனைத்து உடற்பாகங்களும் முழுமையாகக் கழுவப்படாத வரை ஒளூ நிறைவேறழயதாக ஆகாது.

4. தலை-வகிடுப் பகுதியைத் தடவுதல்

இன்னும் உங்களுடைய தலைகளை (நீரால்) தடவிக் கொள்ளுங்கள்!.. திருக் குர்ஆன் 5:6

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒளூ செய்தார்கள்.பின்னர் தலை நடுப்பகுதியையும் தனது டர்பனையும் தடவினார்கள்.
அறிவிப்பாளர்:அல் முகீரா இப்னு ஷூபா (ரலி) ஆதாரம்: முஸ்லிம்
தலையின் ஒரு பகுதியைவிட முழு தலையையும் தடவுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதே.எனினும், தலையின் பகுதியை தடவுவது போதுமானது..,கட்டாயமானது என்பது மேற்சொன்ன நபிமொழியிலிருந்து தெரிய வருகின்றது.

5. கால்கள்-குதிகால்களைக் கழுவுதல்

மேலும், உங்கள் கால்களை இரு கணுக்கால்கள் வரை கழுவிக் கொள்ளுங்கள்! திருக் குர்ஆன் 5:6

பாதங்களின் அனைத்துப்பகுதிகளும் நன்கு கழுவப்பட வேண்டும்.நகங்களின் சிறு பகுதிகூட உலர்வாக விட்டுவிடப்படக்கூடாது.அதேபோன்றுதான் கரங்களுக்கும், அதன் முடிப்பகுதிகள்கூட உலர்வாக விட்டுவிடப்படக்கூடாது.
6. திருக் குர்ஆனில் கூறப்பட்ட வரிசைக்கிரமப்படி இவற்றை செய்வது பரிந்துரைக்கப்படுகின்றது.

திருக் குர்ஆனில் கூறப்பட்ட வரிசைக்கிரமப்படி

திருக் குர்ஆனில் கூறப்பட்ட வரிசைக்கிரமப்படி

அண்ணலார் (ஸல்) அவர்கள் மேற்சொன்ன வரிசைக்கிரமப்டியே ஒளூவை நிறைவேற்pனார்கள் என்பது அன்னாருடைய கிரந்தங்களிலிருந்து தெரிய வருகின்றது.மேற்சொன்ன நபிமொழிகளிலிருந்து ஒளூ அதற்குரிய வரிசைக்கிரமப்படி நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Related Post