பாதாளத்தில் தள்ளும் பெரும்பாவங்கள்! 2

பாதாளத்தில் தள்ளும் பெரும்பாவங்கள்! 2

மகா நாசத்தை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைவிட்டும் விலகிக் கொள்ளுங்கள்.

மகா நாசத்தை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைவிட்டும் விலகிக் கொள்ளுங்கள்.

11. ஒழுக்கமுள்ள இறை நம்பிக்கைக் கொண்ட அப்பாவி பெண்கள்மீது பழி சுமத்துவது.
(மகா நாசத்தை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைவிட்டும் விலகிக் கொள்ளுங்கள். அவை: அல்லாஹ்விற்கு இணைவைப்பது, சூனியம் செய்வது, அல்லாஹ் புனிதமாக்கிய உயிரைக் கொல்வது, வட்டி வாங்கி உண்பது, அனாதையின் சொத்தை பயன்படுத்துவது, போரில் புறமுதுகுக் காட்டுவது, ஒழுக்கமான இறை நம்பிக்கைக் கொண்ட அப்பாவி பெண்கள்மீது பழி சுமத்துவது- புகாரி, முஸ்லிம்)
சுவனம் செல்வதற்குத் தடையான பாவங்கள்
12. இறை நம்பிக்கையின்றி இருப்பது.
(இறை நம்பிக்கையாளரைத் தவிர மற்றவர் சுவனம் புகமாட்டார். நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாதவரை சுவனம் புக மாட்டீர்கள்- முஸ்லிம்)
13. அண்டை வீட்டாருக்கு தொந்தரவு தருவது.
(அண்டை வீட்டாருக்கு தீங்கிழைப்பவர் சுவனம் புகமாட்டார்- முஸ்லிம்)
14. பெருமை கொள்வது.
(அணுவளவும் பெருமை உள்ளவர் சுவனம் புகமாட்டார்- முஸ்லிம்)
15. கோள் சொல்வது – இரட்டை முகம் காண்பிப்பது.
(கோல் சொல்பவர் சுவனம் புகமாட்டார். அல்லாஹ்வின் முன்னிலையில் மறுமையில் மிகக் கெட்டவர்களில் இரு முகமுடையவனும் ஒருவன் ஆவான்- முஸ்லிம்)
16. தற்கொலை செய்தல்.
(யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறானோ அவன் அதே விஷத்தைக் குடிப்பது கொண்டு நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக வேதனை அனுபவிப்பான்- புகாரி, முஸ்லிம்)
(யார் எப்படி தற்கொலை செய்து கொள்கிறாரோ…. அவ்வாறே நரகத்தில் தண்டனை கொடுக்கப்படுவார்).
17. உறவுகளைத் துண்டிப்பது.
(உறவுகளைத் துண்டிப்பவர் சுவனம் புகமாட்டார்- முஸ்லிம்)
18. தடுக்கப்பட்ட வழிகளில் பொருள் சம்பாதித்து, உண்பது.
(ஹராமில் வளர்ந்த உடல் சுவனம் நுழையாது- அஹ்மது, இப்னு ஹிப்பான்)
19. செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுவது.
20. மது அருந்துவது.
21. சூனியத்தை நம்புவது.
22. குறி பார்ப்பது.
23. விதியை மறுப்பது.
(செய்த உபாகரத்தை சொல்லிக் காண்பிப்பவர், மது அருந்துபவர், சூனியத்தை நம்புபவர், குறி பார்ப்பவர், விதியை மறுப்பவர் ஆகிய இவர்கள் சுவனம் புகமாட்டார்கள் – அஹ்மது)
24. கடனை அடைக்க வழியில்லாமல் இறப்பது.
(இறந்தவரை தொழ வைப்பதற்காக நபியிடம் கொண்டு வரப்படும். அவர்மீது கடன் இருப்பின் ”இவர் கடனை நிறைவேற்ற ஏதும் வழி செய்துள்ளாரா?” என்று விசாரிப்பார்கள். அவருக்குக் கடனை அடைக்கும் அளவு சொத்து உள்ளது என்று கூறப்பட்டால் தொழவைப்பார்கள். அவருக்கு சொத்து இல்லையெனில் ”உங்களின் தோழருக்கு நீங்கள் தொழுது கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிடுவார்கள். மார்க்கப் போரில் உயிர் நீத்தவருக்கு அனைத்தும் மன்னிக்கப்படும். ஆனால், கடனைத்தவிர- முஸ்லிம்)
25. பெண், ஆணைப்போன்று நடந்து கொள்வது.

………………3

Related Post