எம்மிடம் இருக்க வேண்டிய நற்குணங்கள்!

தமிழில்: ஸினூஃபா அன்ஸார்

எம்மிடம் இருக்க வேண்டிய நற்குணங்கள்!

இல்லப் பணிப்பெண்களுக்கு ஓர் இனிய வழிகாட்டி! 7

எம்மிடம் இருக்க வேண்டிய நற்குணங்கள்

எம்மிடம் இருக்க வேண்டிய நற்குணங்கள்

வாழ்வு என்பது இன்பத்தையும் துன்பத்தையும் கொண்டது. எனவே எவ்வாறான நிலையிலும் தளர்ந்து விடாது பொறுமையுடனும் சகிப்புதத்தன்மையுடனும் நடந்து கொள்வது அவசியமாகும். இது வாழ்வை பிரகாசிக்கச்செய்வதுடன் தன் பொறுப்புக்களைத் தைரியத்துடன் முன்னின்று நிறைவேற்றச்செய்யக்கூடியது.

ல்ல குணநலன்களை விட மிகச் சிறந்தது எதுவுமில்லை. ‘மக்களில் சிறந்தவர்கள் யார் என்றால், நல்ல குணநலன்களைக் கொண்டவர்களே! மக்களின் மிகக் கெட்டவர்கள் யார் என்றால், கெட்ட குணநலன்களைக் கொண்டவர்களே!’ இங்கே நாம் தரக் கூடிய ஒவ்வொரு வழிமுறைகளும் முஸ்லிம்கள் அனைவரும் நன்றாகச் சிந்தித்துக் கடைபிடிக்க வேண்டிய அம்சங்களாகும்.

பிறரிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள், அகம்பாவத்துடன் நடந்துகொள்ளாதீர்கள்.

நீங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களை நிறைவேற்றுங்கள்.

எப்பொழுதும் உண்மையே பேசுங்கள், நீங்கள் எதனைப் பேசுகின்றீர்களோ அதன்படியே நடக்கவும் செய்யுங்கள்.

முஸ்லிமாக இருப்பினும் அல்லது முஸ்லிம் அல்லாதவராக இருப்பினும் சரியே..! பிறரிடம் கருணை காட்டுபவராக இருங்கள்.
தேவையுடயவர்களுக்கு உதவுபவராகவும், சங்கடங்களில் உழல்பவர்களுக்கு உதவிக்கரம் வழங்குபவராகவும், அவர் உங்களிடமிருந்து உதவியை எதிர்பார்க்காத நிலையிலும் கூட, உதவி தேவைப்படுபவர்களைச் சந்தித்து உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

பிறர் செய்யும் குற்றங்குறைகளை மன்னிக்கும் நிலையில் நீங்கள் அதிகாரம் மற்றும் ஆட்சி செய்பவராக இருப்பின், உங்களுக்கு கீழ் உள்ளவர்கள் செய்யும் குற்றங் குறைகளை மன்னித்து விடுங்கள்.

பிறரது நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

பிறரிடம் நல்ல நட்புக்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், அவர்களது நட்பை நல்லவிதமாக மதித்து நடந்து கொள்ளுங்கள்.

பிறர் உங்களிடம் ஆலோசனை கேட்டால்;, சரியான முறையில் ஆலோசனைகளை வழங்குங்கள். அவருக்குச் சம்பந்தமில்லாதவற்றை அல்லது தொடர்பில்லாதவற்றைக் குறித்து அவரிடம் பேசாது, அவரை விட்டு விடுங்கள்.

தேவை அல்லது அவசரம் ஆகிய அத்தியவசிய நோக்கமின்றி எதனையும், யாரிடமும் கேட்டுப் பெறாதீர்கள்.

உங்கள் வருகையை குறித்து ஒருவருக்கு வாக்குறுதி கொடுத்திருந்தால் அதனை குறித்த நேரத்தில் நிறைவேற்றுங்கள்.
சந்திப்பதற்கான நேரங் குறிப்பிட்டு வாக்குறுதி அளித்திருந்தால், அதனை நிறைவேற்றுங்கள்.

பிறரது கோபம் மற்றும் எதிர் வினைகளிலிருந்தும் நீங்கள் தவிர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

இஸ்லாத்தைத் தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, அதனைப் பின்பற்றுவதிலே கவனம் செலுத்துகின்றவர்களுடன், உங்களது உறவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களிடம் யார் வம்பிழுத்து வலிச்சண்டைக்கு வந்தார்களோ, அவர்களுக்கு ஸலாத்தினைத் தெரிவியுங்கள்.அத்தகையவரது குடும்பம் மற்றும் உறவுகளின் நலன் குறித்து தான் மிகவும் அக்கறை கொண்டவனாக இருக்கின்றேன் என்பதை அவருக்கு உணர்த்துங்கள்.

வெட்கமுடையவராக இருங்கள்.

அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்ற அருட்கொடைகள் குறித்து திருப்தி கொண்டவராக இருங்கள்.

உங்களுக்கிடையில் பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொண்டு, உறவுப் பாலத்தை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறர் உங்களிடம் ரகசியமாக இருக்கட்டும் என்று கூறி வைத்தவற்றையும், இன்னும் பிறரைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்ட ரகசியங்களையும் எப்பொழுதும், பாதுகாப்பாகவே வையுங்கள். அவற்றைப் பிறரிடம் கூறி பிறரது அந்தரங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி விடாதீர்கள்.

முஸ்லிம்களுடைய கண்ணியத்தைக் குலைக்கக் கூடிய காரியத்தை செய்து விட்ட முஸ்லிம் சகோதரருக்காக, அவர் செய்து விட்ட அந்த தவறுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள்.

எம்மிடம் இருக்க வேண்டிய நற்குணங்கள்

எம்மிடம் இருக்க வேண்டிய நற்குணங்கள்

உங்களுக்குத் தீங்கிழைத்தவர்களுக்கு தீங்கையே செய்து விடாமல், உங்களது உற்ற நண்பர்களை எப்படி மன்னிப்பீர்களோ அவ்வாறே அவரையும் மன்னியுங்கள். ஏனெனில் நீங்களும் தீங்கையே செய்தால் உங்களிருவருக்குமிடையில் எந்த வேறுபாடும் இல்லை.

ஒருவர் அந்த இடத்தில் இல்லாத நிலையில், அவரைப் பற்றி பிறர் குறைகூறுவார்களென்றால், அந்த இடத்தில் உங்களது அந்த நண்பர் இருந்தால், எவ்வாறு தனது நியாயங்களைக் கூறி வாதாடுவாறோ அவ்வாறே, உங்களது நண்பருக்காக நீங்கள் பரிந்து பேசுங்கள்.

எப்பொழுதும் சிக்கல் நிறைந்தவராகவே இருக்காதீர்கள், உங்களை அணுகுபவர்களுக்கு எளிதானவராகவே இருங்கள்.
கொடுத்துதவுபவராக இருங்கள், அதற்காக கையை ஒரேயடியாக விரித்தும் விடாதீர்கள்.ஏழை, எளியோருக்காக இரக்கப்படுங்கள், அவர்களது பெற்றோர்கள் மீது அன்பு காட்டுங்கள்.

பிறர் அறிந்தோ அல்லது அறியாமலோ செய்த தவறுக்காக அவர் மீது பழிக்குப் பழி வாங்கத் துடிக்காதீர்கள். அவர் செய்த தவறின் பின்விளைவுகள் பற்றி அவருக்கு எடுத்துச் சொல்வதன் மூலம், அவர் அறியாத ஒன்றை நீங்கள் அவருக்குக் கற்றுக் கொடுங்கள்.

Related Post