பெண் வன்கொடுமைக்கதிராக போர்..!

-மு.அ.அப்துல் முஸவ்விர்

 

பெண் வன்கொடுமைக்கதிராக போர்..!

பெண் வன்கொடுமைக்கதிராக போர்..!

மூகத்தில் ஆண், பெண் இடையே நிலவும் ஏற்றத்தாழ்வே, பெண்களுக்கு எதிரான வன்முறையாக வெளிப்படுகிறது. இதனால் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு, சமூகம் எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை. ஐ.நா., சபை, 1993ம் ஆண்டு பெண்கள் மீதான வன்முறை, மனித உரிமையை மீறும் செயல் என அறவித்தது. இதை தொடர்ந்து 1999 முதல், நவ., 25ம் தேதி உலக பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்திய சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என கருதப்படும் கட்டுப்பாடுகள், உண்மையில் அவர்களுக்கு எதிராகவே அமைந்துள்ளன. இது அவர்களின் சுயமுன்னேற்றத்துக்கு எதிராக இருப்பதோடு, பாதிக்கப்படும் போது எதிர்த்து போராட முடியாமல் செய்து விடுகிறது.இன்றைய சூழலில் பெண்கள் ஓரளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளனர். வேலைக்கு சென்று குடும்பத்தின் பொருளாதார சுமையை, ஆண்களுடன் சேர்ந்து பங்கிட்டுக் கொள்கின்றனர். இருப்பினும் பெண்களை சமமாக ஏற்றுக்கொள்ள ஆண்கள் முன்வருவதில்லை.

அதிகரிக்கும் வன்கொடுமைகள்:

வரதட்சிணை, பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை, சிசுக்கொலை என பெண்கள் மீதான வன்முறை பல வடிவங்களில் நிகழ்த்தப்படுகிறது. மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தை விட, பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களின் வளர்ச்சி வீதம் அதிகம். கல்வியறிவு பெற்றவர்களும் குற்றத்தில் ஈடுபடுவதுதான் வேதனைக்குரியது.

எப்படி தடுப்பது:

பெண்கள் மீதான வன்முறையை முற்றிலுமாக தடுப்பதற்கு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் அவசியம். இதற்கு அதிகார மையங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் அப்போதுதான் இது சாத்தியம். ஆட்சி அதிகாரங்களில் பெண்களுக்கு சம அதிகாரம் வழங்க வேண்டும். பெண்களை பாதுகாக்க நாட்டில் பல சட்டங்கள் இயற்றப்பட்டும், பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் புகார் கூற முன்வருவதில்லை என்பது வருந்தத்தக்கது. பாதிக்கப்படும் பெண்கள் எதிர்த்து நின்று போராடும் போது தான், அவர்களுக்கு தீர்வு ஏற்படும்.

 

Related Post