ஹஜ் -புனிதப் பயணம்

ஹஜ் -புனிதப் பயணம்
 ‘எப்பொருளையும் என்னோடு இணையாக்காதீர்;

‘எப்பொருளையும் என்னோடு இணையாக்காதீர்;

நாம் இப்ராஹீமுக்கு (கஅபா எனும்) இந்த ஆலயத்தின் இடத்தை பின்வரும் கட்டளையுடன் நிர்ணயம் செய்து கொடுத்த சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள்: ‘எப்பொருளையும் என்னோடு இணையாக்காதீர்; மேலும் தவாஃப் சுற்றி வருவோர்க்காகவும் நின்றும் குனிந்தும் தரையில் சிரம் வைத்தும் வணங்குவோர்க்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!’  ஹஜ் செய்திட மக்களுக்குப் பொது அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் வெகு தூரமான இடங்களில் இருந்தெல்லாம் நடந்தும் ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வரட்டும்; அவர்களுக்காக அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நன்மைகளை அவர்கள் காணட்டும் மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய கால்நடைகளை சில குறிப்பிட்ட நாட்களில் அவனது பெயர் கூறி(அறுத்தி)ட வேண்டும்; அவற்றிலிருந்து அவர்களும் உண்ண வேண்டும்; வறியவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் அளிக்க வேண்டும்; பிறகு தங்களுடைய அழுக்குகளை நீக்க வேண்டும்; இன்னும் தங்களுடைய நேர்ச்சைகளை நிறைவேற்ற வேண்டும்! மேலும், தொன்மையான ஆலயத்தைச் சுற்றி வரவேண்டும்!  இதுதான் (கஅபா ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதன் நோக்கமாகும்!) மேலும், எவரேனும் அல்லாஹ்வினால் ‘புனித மானவை’ என்று நிர்ணயிக்கப்பட்டவைக்கு கண்ணியம் அளித்தால், அது அவருடைய அதிபதியிடத்தில் அவருக்கே பலனளிக்கத் தக்கதாகும். மேலும், உங்களுக்கு (கூடாதெனச்) சொல்லப்பட்டவற்றைத் தவிர, இதர கால்நடைகள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. எனவே, விக்கிரஹங்கள் எனும் அசுத்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். பொய்யான பேச்சுகளிலிருந்து விலகியிருங்கள்.  அல்லாஹ்வுக்கு ஒருமனப்பட்ட அடிமைகளாகத் திகழுங்கள். அவனோடு எதனையும் இணை வைக்காதீர்கள்! யாரேனும் அல்லாஹ்வுக்கு இணை வைப்பாராயின் அவர் வானத்திலிருந்து விழுந்து விட்டவரைப் போன்று ஆகிவிடுகின்றார். இனி அவரைப் பறவைகள் இறாஞ்சிக் கொண்டு செல்லும் அல்லது காற்று அவரைத் தூக்கிச் சென்று ஏதேனும் அதலபாதாளத்தில் எறிந்துவிடும்; அங்கு அவர் சின்னாபின்னமாகி விடுவார்.  உண்மை நிலவரம் இதுதான். (இதனைப் புரிந்து கொள்ளுங்கள்) மேலும், யாரேனும் அல்லாஹ் ஏற்படுத்திய புனிதச் சின்னங்களுக்கு கண்ணியம் அளிப்பாராயின் திண்ணமாக, அது இதயங்களில் உள்ள இறையச்சத்தால் விளைவதாகும். 22:33 (பலிப் பிராணிகளாகிய) அவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் பயன் பெற உங்களுக்கு அனுமதியுண்டு. பின்னர், அவற்றி(னைப் பலியிடுவத)ற்கான இடம் தொன்மையான ஆலயத்தின் அருகிலாகும்!
இறைக்கட்டளையா..? பகுத்தறிவா..?
ஹஜ்ஜுப் பெருநாள் என்றால் அங்கே அதிகம் யாபகப்படுத்தப்படும் இறைத்தூதர் நபி இப்ராஹீம் அலை அவர்கள் தான் காரணம் ஹஜ் கிரிகைகள் அனைத்தயும் அவரின் வாழ்கையில் நிகழ்ந்த சோதனை சம்பவங்களுடன் அல்லாஹ் தொடர்புபடுத்தி உள்ளமையாகும்.
அதனால் தான் குறிப்பாக துல் ஹஜ் மாசம் வந்துவிட்டால்
#இப்ராஹீம் அலை அவர்களின் கொள்கை உறுதியும் மார்க்க பிரச்சாரமும்
# இப்ராஹீம் அலை அவர்கள் வாழ்கையில் எதிர்கொண்டு வெற்றி பெற்ற சோதனைகள் தரும் படிப்பினைகள்.
போன்ற இன்னும் பல தலைப்புகளில் உலமாக்கள் உரை நிகழத்தி மக்களுக்கு தெளிவு வழங்குவதை நாம் காணலாம்.
அந்த வரிசையில் இப்ராஹீம் நபி அவர்களின் வாழ்கை வழிமுறை எமக்கு கற்றுத்தரும் பாடங்களில் மிக முக்கிய பாடம் தான் இறைக் கட்டளைகளுக்கு அடிபணிதல் எனும் பகுதி இதனூடாகவே ஒருவன் முஸ்லிமாக, முஃமினாக மாறுகின்றான்.
இன்றைக்கு ஒரு சிலர் தங்களை ஏகத்துவத்தின் தந்தை இப்ராஹீம் நபி அவர்களின் வாரிசுகளாக கூறிக்கொண்டு அதே இப்ராஹீம் அலை அவர்களின் வாழ்கை வழி முறைக்கு மாற்றமாக இறைக்கட்டளை என்றாலும் ஆய்வு செய்தே அதை செயல்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். இவ்வழிகேட்டிலிருந்து இவர்கள் மீள வேண்டும்.
இறைக்கட்டளைகளும்… நபி இப்ராஹீம் அலை அவர்களும்…
1) தனது மனைவி ஹாஜர் மற்றும் பச்சிளம் பாலகன் இஸ்மாயீல் அலை ஆகிய இருவரையும் மனித நடமாட்டம் இல்லாத பாலைவனத்தில் தனிமையில் விட்டு விட்டு வர வேண்டும் என்ற இறைக்கட்டளை வந்தது..
இறைவன் இப்படி சொல்வானா..? மனித நடமாட்டம் அற்ற பாலைவனத்தில் தனிமையில் என் குடும்பத்தை விட்டு விட்டு வருவதில் எந்த நலவும் இல்லையே..? என்று மண்டையை போட்டு யோசிக்க வில்லை..
இறைக்கட்டளைக்கு உடன் கட்டுப்பாட்டார்கள்
2) தனது குழந்தை இஸ்மாயீல் அலை அவர்களை அறுத்துப் பலியிட வேண்டும் என்ற இறைக்கட்டளை கனவில் வந்தது…
குழந்தையை அறுப்பது எப்படி வஹியாக இருக்கும்..? அது கொலையிலும் ஈனஇறக்கமற்ற கொலையல்லவா..? என்று அவர் மண்டையைப் போட்டு யோசிக்க வில்லை..
இறைக்கட்டளைக்கு கட்டுப்பட்டார்கள்
அல்லாஹ் சொன்னாலும் ஆய்வு செய்து தான் நம்ப வேண்டும் என்ற கொள்கையை நபி இப்ராஹீம் அலை அவர்கள் தனது வாழ்க்கையில் உடைத்தெரிந்து வஹி என்றால் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்த வேண்டும் அதை நம்ப வேண்டும் என்பதை தனது வாழ்கையில் செயல்படுத்தி காட்டினார்கள்.
உயிர்ப்பிப்பது பற்றிய சந்தேகம் எழுப்பிய இப்ராஹிம் நபி இவற்றை கேள்வி கேட்கவில்லை
வஹி என்று வந்து விட்டால் அது நிதர்சன உண்மைக்கு புறம்பான காரியமாக தெரிந்தால் கூட அதை நாம் நம்ப வேண்டும்,
உதாரணமாக:
1) இப்ராஹீம் அலை அவர்கள் சிலைகளை உடைத்து நொறுக்கி சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் தான் என்ற ஏகத்துவ கொள்கையை வீரியமாக சொன்னார்கள்..
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் தூக்கி எறியப்பட்டார்கள் நெருப்பு அவர்களை சுட்டெரிக்க வில்லை அது அவர்களுக்கு குளிர்ச்சியாக சுகமாகனதாக மாறியது நடைமுறைக்கு மாற்றமாக நிதர்சன உண்மைக்கு மாற்றமாக நெருப்பு எப்படி குளிரானதாக மாறியது..? என்று நாம் மண்டையைப்போட்டு யோசிக்க வில்லை..
வஹி என்று இருந்தால் அவை பிற மதகலாச்சாரங்களை ஒத்ததாக மூட நம்பிக்கை போல் எமக்கு தெரிந்தால் கூடி அதை நாம் செயல்படுத்த வேண்டும்.
2) ஹஜ் வணக்கம், தவாப், ஸபா மர்வாக்கு இடையே ஓடுவது, ஹஜருல் அஸ்வதை முத்தமிடுதல், ஷைத்தானுக்கு கல் எரிதல், அறுத்து பலியிடல் போன்ற வணக்கங்களை மாற்று மத கலாச்சாரங்களுக்கு ஒத்ததாகவே நாம் கண்டால் கூட இறைக்கட்டளை என்ற ஓரே காரணத்துக்காக மண்டையை போட்டு யோசிக்காமல் கட்டுப்பட்டு நாம் செயல்படுத்துகின்றோம்.
قَدْ كَانَتْ لَـكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِىْۤ اِبْرٰهِيْمَ وَالَّذِيْنَ مَعَهٗ‌ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰٓؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَآءُ اَبَدًا حَتّٰى تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗۤ اِلَّا قَوْلَ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ لَاَسْتَغْفِرَنَّ لَـكَ وَمَاۤ اَمْلِكُ لَـكَ مِنَ اللّٰهِ مِنْ شَىْءٍ ‌ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَـبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏
 ‘எப்பொருளையும் என்னோடு இணையாக்காதீர்;

‘எப்பொருளையும் என்னோடு இணையாக்காதீர்;

இப்ராஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி: “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” என கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்): “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,” (அல்குர்ஆன் : 60:4)
தங்களின் சுய சிந்தனைகளை போட்டு அல்லாஹ் இப்படி சொல்வானா..? அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இப்படி சொல்வார்களா..? செய்வாரா..? என்று ஹதீஸ்களை வெறும் யூகங்களை கொண்டு மனோ இச்சைக்கு கட்டுப்பட்டவர்களாக மறுப்போருக்கு அல்லாஹ் இப்ராஹீம் நபி அவர்களின் வாழ்வில் சிறந்த முன்மாதிரிகளை வைத்துள்ளான்.
நபி இப்ராஹீம் அலை அவர்கள் இறைக்கட்டளைகளுக்கு எப்படி கட்டுப்பட்டு சிரம்பணிந்தாரோ அது போல் இறைக்கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு எம் சுய விருப்பு, வெறுப்புகள் அனைத்தையும் ஓரம் தள்ளி விட்டு உண்மையான முஸ்லிமாக இந்த உலகில் வாழ்ந்து மரணிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் எம் அனைவருக்கும் தந்தருல வேண்டுகிறேன்..
இத்தினத்தில் அல்லாஹ் எமக்கு நேரான பாதையை காட்டியமைக்கு அதிகம் தக்பீர் கூறி அல்லாஹ்வை பெருமை படுத்துங்கள்.
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்
– ஷைய்க் இன்திகாப் உமரீ

Related Post