நோன்பு ஒரு பார்வை
இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்.

இஸ்லாம் போதிக்கும் அடிப்படையான இபாதத்துக்களில் நோன்பும் ஒன்றாகும். ரமழான் மாதத்தில் நோன்பிருப்பது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும். நோன்பின் மாண்புகளையும் மகத்துவங்களையும் புரிந்து கொள்ள இஸ்லாம் அதற்கு வழங்கியுள்ள சிறப்புக்களை அறிந்து கொள்வது முக்கியமாகும்.
ஆரம்ப காலங்களில் குடும்பத்தில் மூத்தவர்கள் அனைவரும் நோன்பிருப்பதால் சிறுவர்களும் நோன்பு நோற்று வந்தனர். இதனால் நோன்பு என்பது அனைவராலும் கடைப்பிடிக்கப் படும் ஒரு இபாதத்தாக இருந்தது. இந்த நிலை இப்போது குறைந்து வருகின்றது. வளர்ந்தவர்களில் பலரும் தொழிலைக் காரணம் காட்டி நோன்பு நோற்பதைத் தவிர்த்து வருகின்றனர். இளம் சந்ததிகளிடமும் இந்தப் போக்கு வளர ஆரம்பித்துள்ளது. முன்பெல்லாம் தொழாதவர்கள் கூட நோன்பை விடாத அளவுக்கு வாழையடி வாழையாக வந்த வழிபாட்டு முறை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிப்பது ஆபத்தான அறிகுறியாகும். எனவே, இது குறித்து விழிப்புணர்வூட்டுவது அவசியமாகும்.