கொண்டாட்டத்தின் பெயரால்..!

-ஹாஜா சாதிக்

கொண்டாட்டத்தின் பெயரால்..!

கொண்டாட்டத்தின் பெயரால்..!

கொண்டாட்டத்தின் பெயரால்..!

(மற்றொரு புறம்) இறையச்சமுடையோரை நோக்கி வினவப்படும்: “உங்கள் இறைவன் இறக்கியருளியது என்ன?” அதற்கு அவர்கள், “மிகச் சிறந்ததை (இறக்கியருளினான்)” என்று மறுமொழி கூறுவார்கள். இவ்வாறு நற்செயல் புரிந்தவர்களுக்கு இவ்வுலகிலும் நன்மை இருக்கிறது. மறு உலகமோ திண்ணமாக அவர்களுக்கு மிகச் சிறப்புடையதாகவே இருக்கும். மேலும், இறையச்சமுடையவர்களின் இல்லம் மிகவும் சிறப்புடையதாகும். 1

கிரிஸ்தவர்கள் ஈசா (இயேசு) (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா (அலை) அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள். எனவே அந்த நாளை புனித நாளாக கொண்டாடுகின்றார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. இதுதான் புத்தாண்டு கொண்டாட காரணம். அதுவும் கிருஸ்துவ நம்பிக்கை படி,

இதை பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது என்று பார்த்தல் அதற்க்கு மிக அழகான ஒரு ஹதீஸ் புஹாரி மற்றும் அஹ்மத்களில் வருகின்றது :- எவர் ஒருவர் ஒரு சமூகத்தை பின் பற்றுகிராரோ அவர் அதனை சார்ந்தவாராவார்” மற்றும் நமது இந்த மார்கத்தில் இல்லாத ஒன்றை எவன் புதிதாக உண்டாக்குகிறானோ அது நிராகரிக்கப்பட வேண்டும்” . இந்த இரண்டு ஹதீஸ்களிலிருந்து கவனித்தால், கண்டிப்பாக ஒரு இஸ்லாமியன் இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபட கூடாது என்பது விளங்குகின்றது, இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் தான் இதை செய்கிறார்கள், இன்ஷா அல்லாஹ், அவர்களையும் விழிப்படைய செய்வோம்.

வருடத்தின் முதல் நாள் என்பது மற்ற எல்லா நாட்களையும்,போன்றதுதான், அது எப்படி அந்த நாளை மட்டும் சிறப்பாக எண்ணுவது, இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமா தெரியலையா? சரி இனி இந்த புத்தாண்டை கொண்டாடுகிறார்களே இவர்களை பார்போம், புத்தாண்டு கொண்டாடுவது சரி என்றே வைத்து கொள்வோம் ஒரு வாதத்திற்கு, இதிலே ஏதாவது லாஜிக் இருக்கா என்று பார்த்தல், ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. என்ன இப்படி சொல்லிடீங்கனு பார்கறீங்களா?

உலகத்திலே ஏதாவது சாதனையை செய்தோ அல்லது கஷ்டப்பட்டு எதையாவது அடைந்தால் அதில் கொண்டாடுவதற்கு அர்த்தம் உள்ளது. முஸ்லிம்கள் கொண்டாடக்கூடிய இரு பெருநாட்களும் இவ்விதத்திலேயே அமைந்துள்ளன. ஒரு மாதம் இறைவனுக்காக தன்னுடைய பசியையும் தாகத்தையும் இச்சைகளையும் துறந்து இறையச்சம் என்ற உன்னதத்தை அடைந்தோம் என்பதற்காகத்தான் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.இ

இவங்க எல்லாம் அப்படி என்னத்த சாதிச்சுட்டு இப்படி கத்துராங்கனு  தெரியலை.

வருடத்தின் முதல் நாளே லீவ் இப்படி வருடத்தின் முதல் நாளே லீவ் அப்புறம் எப்படி அந்த ஆண்டு விளங்கும், புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில், நல்லா ராத்திரி புல்லா தண்ணிய போட வேண்டியது, பன்னிரண்டு மணிக்கு, ரோட்லே போறவன் கிட்டே எல்லாம் வாழ்த்து சொல்லுகிறேன் என்ற பேரில், வம்பிழுக்க வேண்டியது. அன்னைக்கு மட்டும் எதனைSMS,மொபைல் கால்ஸ், வாழ்த்துமடல், வாணவேடிக்கைகள் இன்னும் இதுபோல எவ்வளவு செலவினங்கள்.

சற்று சிந்தித்து பாருங்கள், புத்தாண்டு அன்றைக்கு, அதை கொண்டாடுற எவனாவது அன்னைக்கு ஒரு நாளைக்காவது ஒரு ஏழைக்கு உணவளிதிருப்பானா? உடுத்திக்கொள்ள உடை வாங்கி குடுத்து இருப்பானா?இவன் மட்டும் நல்லா குடிப்பான், இதுதான் ஒரு ஆறறிவு உள்ள மனிதன் செய்ய கூடியதா? இதுல கொடுமை என்ன தெரியுமா நல்லா படித்த முட்டாள்களும் சேர்ந்துகொண்டு செய்கிறார்கள். காலம் பொன் போன்றது என்று சொல்லிவிட்டு இப்படி கொண்டாட்டம் என்ற பெயரில் அந்த போனான காலத்தை வினடிப்பதற்க்கு பெயர் புத்தாண்டு கொண்டாட்டம்.

இன்னும் சிங்கபூர், அமெரிக்க போன்ற நாடுகளில் பயங்கர கோலாகலத்துடன், அட அவனுங்கள விடுங்க, இந்த துபாய்-லே பாருங்க,அந்த அரசாங்கமே ஒரு கட்டிடத்திற்கு விளம்பரத்துக்காக வேண்டி புத்தாண்டின் கொண்டாட்டமாக வரலாறு காணாத வானவேடிக்கையை நிகழ்த்தியது, அன்று மட்டும் அங்கே எத்தனை கூட்டம் தெரியுமா, எவ்வளவு நெரிச்சல், சாலைகளில் எவ்வளவு போக்குவரத்து பாதிப்பு, இதுலே முக்கியமான விஷயம் என்ன வென்றால், அங்கே குழுமியிருந்த மக்களில் அதிகமானோர் வெளிநாடுகளிலிருந்து வந்து வேலை செய்பவர்கள் தான்,அதுவும் குறிப்பாக நம் தெனிந்திய மக்கள் தான். இவர்களை பார்த்தல் எனக்கு நம்ம கவுண்டர்-செந்தில் காமெடி ஒன்று நினைவுக்கு வருகின்றது “நீ வாங்குற அஞ்சு பத்துக்கு இது தேவையா?” இந்த காமெடி கண்டிப்பாக மேல சொன்னவங்களுக்கு பொருந்தும்,

இதுலே கொடுமைன்னு பார்த்தா ராத்திரி முழுக்க இந்த வருஷம் அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்னு, புல்லா பொழம்புவான் காலைல பார்த்த அவனுக்கு தூங்கவே அந்த நாள் பத்தாது, இவங்களுக்கு எல்லாம் எப்படிங்க அந்த வருடம் விளங்கும்.

எனவே இந்தமாதிரி நம்முடைய உழைப்பையும், பணத்தையும், நேரத்தையும்,  வீணடிக்காமல், அன்றாடம் நல்லறங்களில் ஈடுபட்டு,மக்களுக்கு உதவ கூடிய மக்களாக மாறுவோம்.

 

Related Post