இஸ்லாத்தில் இறைத்தூதுத்துவம்..!–1

 
முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.--திருக் குர்ஆன்

முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.–திருக் குர்ஆன்

-அர்ரரஹீம் பிளாக்

முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.–திருக் குர்ஆன்

 பெருங்கருணையாளனான அல்லாஹ், இந்த உலகில் மனிதனுக்கு என்னவெல்லாம் தேவைப்படுகின்றதோ அவையனைத்தையும் அவனுக்கு வழங்கியிருக்கின்றான். புதிதாக பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் பார்ப்பதற்குக் கண்களுடனும், கேட்பதற்கு காதுகளுடனும், முகர்வதற்கும், மூச்சு விடுவதற்கும் மூக்குடனும் தொடுவதற்குக் கரங்களுடனும், நடப்பதற்கு கால்களுடனும், சிந்திப்பதற்கு மூளையுடனும் தான் இந்த உலகிற்கு வருகின்றன. சுருங்கச்சொன்னால், ஒரு குழந்தைக்கு

தற்போது தேவைப்படுகின்ற அல்லது இனி அதனுடைய வளர்ச்சியின் பல்வேறு கால கட்டங்களில் அதற்குத் தேவைப்படக்கூடிய திறமைகள் ஆற்றல்கள் வலிமைகள் அனைத்துமே நுனுக்கமாக, கவனத்துடன் முன் கூட்டியே அக் குழந்தையின் சின்னஞ் சிறு உடலில் வைக்கப்பட்டு வளர்ச்சிக்கு தக்கவாறு மாறுதல்கள் அடைகின்றன.

மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த உலகமும் இப்படிப்பட்டதுதான், மனிதன் இந்த பூமியில் உயிர் வாழ்வதற்கு அத்தியாவாசியமானவையாக விளங்கும் ஒவ்வொரு பொருளும் மிகுந்த கவனத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. எடுத்துக்காட்டாக, காற்று, நீர், ஒளி, வெப்பம் ஆகிய இன்றியமையாப் பொருள்கள் ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதன் தான் படைக்கப்பட்டிருப்பதற்கான குறிக்கோள், இந்த உலகின் உண்மை நிலை அதில் அவன் இயங்க வேண்டிய முறை ஆகியன பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தேவையுயைடயவனாயிருக்கிறான். பண்டைக்காலந்தொட்டே மனிதன் இந்த அறிவைத் தேடிப்பெற்றிட முயற்சி செய்து வந்திருக்கின்றான். ஆனால் எந்தத்துணையும் உதவியும் இன்றி அந்த அறிவைப் பெறுவது சாத்தியமற்றதாயிருப்பதைக் கண்டான்.

இந்த பிரபஞ்சம் என்பது என்ன. நமது வாழ்க்கை எப்படி தொடங்கியது. நமது முடிவு என்னவாயிருக்கும் என்பதையெல்லாம் அறிந்து கொள்ள மனிதன் விரும்புகிறான். எது நன்மை, எது தீமை, அவற்றின் உண்மை இயல்புகள் என்ன. மனித இனம் எவ்வாறு கட்டுக்கோப்பாக இயங்க முடியும்.என்பனவற்றை புரிந்து கொள்ள முயல்கின்றான். இந்த பல்லாண்டு கால வினாக்களுக்கு விடை காண்பதற்காக மனிதன் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் அப்பட்டமான் தோல்வியையே தழுவின.

சற்றே ஒப்பு நோக்கும் போது இந்தப் பரம் பொருள் உலகைக்குறித்து பரந்த ஒரு அறிவைப் பெற்றிட நமக்கு குறுகிய காலமே பிடித்திருக்கின்றது. ஆனால் மனித வாழ்வியல் துறையில் மட்டும் மிகச்சிறந்த மூளையுடைய மனிதர்களின் மிக நீண்ட கால முயற்சிகள் கூட அதன் அடிப்படைக் காரணிகளைக்கூட நிச்சயிக்க முடியவில்லை. இந்த துறையில் நாம் இறைவனின் வழிகாட்டுதலும் உதவியும் தேவையுடையவர்களாக இருக்கின்றோம் என்பதற்கு இதைவிடப் பெரிய சான்று வேறென்ன இருக்க முடியும்?

இறை வழிகாட்டுதலும் இறையுதவியுமின்றி நாம் எந்த அடிப்படைக் கோட்பாடுகளின்படி இவ்வுலகில் வாழ்க்கை நடத்திட கடமைப் பட்டிருக்கின்றோமோ அவற்றை அடைந்திட நம்மால் முடியாது மார்க்கம் வாழ்க்கை நெறி என்றால் என்ன என்று நம்மால் அறிந்து கொள்ள முடியாது சத்தியம் என்றால் என்னவென்று நிச்சமாக நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

வாழ்க்கை என்பது இன்னும் கூட விடுவிக்க முடியாத ஒரு புதிராக இருந்து வருகிறது என்பதனை நவீன மனிதன் ஒப்புக் கொள்கிறான். இருந்தும் நிச்சயம் ஒரு நாள் இந்தப் புதிருக்கான விடையை நாம் கண்டுபிடித்தே தீருவோம் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றான். மனித வாழ்வியல் துறைகளில் மூழ்கி ஆய்வு செய்த பலரும் இன்னும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாமல் தமது சொந்தக் கற்பனைகளின் உலகில் திசை தெரியாமல் தடுமாறி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏனெனில் நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தால் உருவாகியிருக்கின்ற தற்காலச் சூழ்நிலை மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு படைப்பு என்கிற ரீதியில் அவனுடன் ஒத்துப் போவதாய் இல்லை. ஆகவே இறை உவப்பைப் பெறுவதற்கு சாதகமான சூழ்நிலை அவனுக்கு வாய்ப்பதில்லை. இயற்பியல் மற்றும் பருப்பொருள் தொடர்பான அறிவியல் துறைகள் அளப்பரிய வளர்ச்சியை அடைந்து விட்டிருக்கின்றன. ஆனால் பூமியில் உயிர் வாழும் மாந்தர்கள் பற்றிய இயல்கள் மட்டும் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவரும் நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர். அலெக்ஸிஸ் கேரல் (னுச.யுடநஒளை ஊயசசநட) எனும் அறிஞர் கூறுகிறார்.

‘பிரெஞ்சுப் புரட்சிக்கு அடிப்படையாய் அமைந்த கொள்கைகளும், மார்க்ஸ், லெனின் ஆகியோரின் கருத்துக்களும் வெற்றுருத் தத்துவமாயுள்ள (வெறும் கருத்தாயுள்ள – உண்மையில் நடைமுறையில் இல்லாத) கற்பனை மனிதர்களுக்க மட்டுமே பொருந்துவனவாகும். மனித உறவுகளுக்கான சட்டங்கள் இன்னும் அறியப்படாமலே இருக்கின்றன என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றைய சமூகவியலும் பொருளியலும் வெறும் அனுமானத்தின் – ஊகத்தின் அடிப்படையிலான இயல்களேயாகும். அதாவது போலி அறிவியல்களாகும்’ (ஆதாரம்: நூல் ஆயுN வுர்நு ருNமுNழுறுN யுரவாழச: னுச.யுடநஒளை ஊயசசநட.)

தற்காலத்தில் அறிவியல் பெருமளவிற்கு வளர்ச்சியடைந்து வருவது உண்மையே ஆனால் மனித வாழ்வியல் குழப்பங்களை தீர்த்திட அது நமக்கு உதவிடவில்லை. அறிவியலின் எல்லைகள் குறித்துக் கூறும் போது அறிஞர். து.று.N.ளுரடடiஎயn என்பவர் கூறுகின்றார் : இப் பேரண்டத்தைப் பற்றிய உண்மைகள் பலவற்றைக் கண்டறிய தற்காலத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் அறிவியல் சிந்தனையின் வரலாற்றிலேயே மிகவும் மர்மமான ஒன்றாக பெரும் புதிராக இன்று வரையிலும் விளங்கிக் கொண்டிருப்பது இப் பேரண்டமேயாகும். இயற்கையைப்பற்றி தற்காலத்தில் நாம் பெற்றிருக்கின்ற அறிவு முந்தைய யுகம் எதனையும் விட அதிகமானதே என்றாலும் இதுவும் கூடப் போதுமானதன்று: ஏனெனில் நாம் இப் பேரண்டத்தில் எங்கு திரும்பினாலும் புதிர்களும் முரண்பாடுகளுமாகவே காட்சியளிக்கின்றன.’

வாழ்வின் இரகசியத்தை அறிந்திட உலகியல் அறிவுத்துறைகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பரிதாபகரமான தோல்வியையே தழுவின. இந்தத் தோல்வி, வாழ்வின் இரகசியம் மனிதனால் அறிந்து கொள்ளவே முடியாத ஒன்று எனும் அதிருப்தியான எண்ணத்தை நமக்கு ஏற்படுத்திவிட்டது. வாழ்க்கையின் உண்மை அறியப்படாமலேயே தான் இருக்கும் என்றால் தனி மனிதர்களாகவும் சமுதாயங்களாகவும் நாம் தொடர்ந்து எப்படி செயல்படமுடியும் நமது நுன்மையான உணர்வுகள் வாழ்வின் உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமென்றே விழைகின்றன. நமது மிக உயர்ந்த ஆற்றலாகத் திகழும் பகுத்தறிவு. தணியாத அறிவுத்தாகம் உடையதாக இருக்கிறது.

வாழ்க்கையின் அமைப்பு முழுவதுமே மிக வேகமாக சீர் கெட்டு விடுகின்றது. ஓர் ஒழுங்கமைந்த வாழ்க்கை நெறி இல்லாமல் மனித சமுதாயம் வளர்ச்சியடைவதென்பது முடியாத ஒரு காரியமாகும். ஆயினும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு எதுவும் கிடைப்பதாகத் தெரியவில்லை. அந்தத் தீர்வைக் கண்டறிவதுதான் இன்றைய அவசரத் தேவையாகும். ஆனால் அது நம் சொந்தமாக சாதிக்க முடியாத ஒன்றாகவே இருக்கின்றது. நமது நிலையே மனிதனுக்கு இந்த அறிவு நாமாகக் கண்டறிய முடியாததாக இருப்பதுமே பேருண்மை ஒன்றை நமக்கு உணர்த்துகின்றது. அதாவது இந்த உண்மையை அறிந்திட மனிதனுக்கு இறைவனின் உதவி மிகவும் தேவைப்படுகின்றது.

வெப்பத்தையும் வெளிச்சத்தையும் சூரியக்கதிர்களின் வடிவில் இயற்கை நமக்கு அளித்திருப்பது போலவே இந்த அறிவும் நமக்கு புறத்திலிருந்தே கிடைக்க வேண்டியதாயுள்ளது. மனித வாழவுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கும் பெருங்கருணையாளனான இறைவன். மேற்சொன்ன இன்றியமையாத வாழ்க்கைத் தேவையை. உண்மையைப் பற்றிய அறிவை மனிதனுக்கு அளித்திடாமலே அவனை அறியாமை எனும் இருளில் தடுமாற விட்டிருப்பானா. நிச்சயம் அவ்வாறு விட்டிருக்க மாட்டான் என்று நம் அறிவே கூறுகின்றது.

எனவேதான், அவன் அந்த உண்மை அறிவை மனிதனுக்கு அளித்திடும் பொறுப்பை, தானே எடுத்துக் கொண்டிருக்கின்றான். திருக்குர்ஆன் கூறுகின்றது: ‘ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குறிய படைப்பின் அமைப்பை வழங்கி, அதற்கு வழிகாட்டியவன் எவனோ அவனே எங்கள் இறைவன் ஆவான்.’ (20 : 50)—–2

Related Post