தனிப்பட்ட வாழ்வில் நடுநிலைமை சித்தாந்தம்..!

தனிப்பட்ட வாழ்வில் நடுநிலைமை சித்தாந்தம்..!

– மு.அ அப்துல் முஸவ்விர்

தனிப்பட்ட வாழ்வில் நடுநிலைமை சித்தாந்தம்..!

தனிப்பட்ட வாழ்வில் நடுநிலைமை சித்தாந்தம்..!

சாலையில் பயணிக்கும் வாகனம் ஒன்று தன் நிலையில் சரியானபடி பயணித்து செல்ல ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள விளக்கப் பலகைகள் போக்குவரத்து விதிமுறை அம்சங்கள் மற்றும் சிக்னல்கள் ஆகியன வாகன ஓட்டுநருக்கு உதவுகின்றன. அதன் மூலம் அவர் அந்த நெடுஞ்சாலைப் பயணத்தில் பாதுகாப்பாக செல்லுவதற்கு இயலும். அதேபோன்று வாழ்க்கை நெடுஞ்சாலையில் பயணித்து செல்லும் தனிப்பட்ட ஒரு மனிதர் தனது வாழ்க்கைப் பயணித்தினூடே பாதுகாப்பாக பயணித்து வெற்றிகரமாக தனது இலக்கை அடைய வேண்டுமெனில் அவருக்கு இதுபோன்ற சரியானதொரு எச்சரிக்கை அம்சங்கள் தேவைப்பபடுகின்றன. அவை கடுமை நிறைந்தவைகளாகவோ அல்லது ஒட்டுமொத்தமாக அவருக்கு பிறவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இலகுவைத் தருவதாகவோ அமையுமாயின் அந்தப் பயணம் அவருக்கு மட்டுமல்ல, அந்த நெடுஞ்சாலையில் பயணிக்கும் ஏனையோருக்கும் பாதுகாப்பாக அமையும் என உத்தரவாதம் தர இயலாது. தனது உண்மையதன இலக்கு எது அதனை அடையக்கூடிய சரியான வழிப்பாதை எது என்பதையும் இந்த நடுநிலை சார்ந்த பயணத்தில் அவர் உணர்ந்துகொள்ளவும் வழவகை கிடைக்கும்.

இனி, இந்தப் பயணத்தில் கடுமையான விதிக்கட்டுப்பாடுகள் அல்லது இலகுவான நிறையவே கண்டுகொள்ளப்படாத அணுகுமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டால் அந்தப் பயணத்தில் எவரும் சுமூகமான நிலையை அடைய இயலாது.

முதலில் தீவிரத்தன்மை ஒருவருடைய வாழ்க்கைப் பயணத்தில் எத்தகைய கடினத்தை ஏற்படுத்தும் என்பதைக் காண்போம். ஓருவர் தனது பயணத்தை துவங்குகின்றார், அப்பயணத்தில் அவர் தனது இலக்கை மட்டுமே குறியாக வைத்து செல்ல வேண்டும். வழியில் உணவு உண்பதோ இயற்கை உபாதைகளைக் கழிப்பதோ அல்லது களைப்பின் காரணமாக ஓய்வெடுப்பது குறித்தோ கவலைப்படக் கூடாது என்று இருக்கின்றது என வைத்துக்கொள்வோம். அவருடைய இலக்கை அடையும் நோக்கம் நிறைவேறுமா..? அல்லது சரியான வகையில் அவர் தனது இலக்கைத்தான் அடைய முடியுமா என்ன..? நிச்யமாக முடியாது.

தனிப்பட்ட வாழ்வில் நடுநிலைமை சித்தாந்தம்..!

தனிப்பட்ட வாழ்வில் நடுநிலைமை சித்தாந்தம்..!

அதேபோன்று மறுகோணத்தில் அவர் அந்த வாழ்க்கை நெடுஞ்சாலையில் பயணிக்கும் மற்ற எவரைப் பற்றியும் கவலைப்படக் கூடாது. தனது இலக்கை அடைய வேண்டும் என்பதை மட்டுமே மூச்சாகக் கொண்டு செலல் வேண்டும். பிறருக்கு  வழிகொடுப்பதோ போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதோ தேவை இல்லை. உணவு ஓய்வு உள்ளிட்ட பிற அவசியத் தேவைகள் குறித்து ஒரு சரியான திட்டமின்றி அவர் பயணிக்கலாம் என்று இருந்தால் அவருடைய பயணம் திருப்திகரமாக அமைய முடியுமா..? அல்லது பிறருடைய பயணத்துக்கும் அவரால் எந்த கடினங்களும் இல்லாமல் இருக்க முடியுமா என்ன..? இருக்காதுதானே..!

எனவே இந்தப் பயணத்தில் அனைவருடைய பயணங்கும் நடுநிலையான பாதை முறைமைகளுடன் அமைந்தால் மட்டுமே தனிப்பட்ட ஒவ்nவருவரும் சரியான பாதயில் பயணிக்க இயலும் அதேபோன்று பாதை தவறியவர்களும் சரியான பாதையில் இருப்பவர்களால் தமது பாதைகளைத் திருத்திக் கொள்ளவும் இயலும்..!

Related Post