பொன்னிற தகிப்புடன் எம் புதுவாழ்வு.,!

மில்லினியத்தின் ஆரம்பம் நவஉலகின் புதிய விடியலுக்கு அச்சாரமாய் அமையும் என்றுதான் ஒவ்வொரு சமூகத்தின் அவாவாய் இருந்தது. ஆனால், உலகம் முழவதும் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளைக் கருத்தில் கொள்ளும்போது, நம்மை அடக்கியாளும் சூழல்கள் புரியாத புதிர்களாய் இருக்கின்றன.

 

பொன்னிற தகிப்புடன்..!

பொன்னிற தகிப்புடன்..!

எம் ஆன்மா எனும் புத்தகத்தினுள் எமக்குத் தெரியாமலே மறைந்திருக்கும் பொற்பக்கங்களை…. நுல்லுணர்வுகளின் வைரவரிகளைப் புரட்டி எடுத்தோமேயானால்.., நேர்மறை எண்ணங்களும், எங்களின் நியாயமான ஆசைகளுக்குரிய வியாக்கியானங்களும் தென்படும்.
சுமூகத்தின் இன்றைய இற்றுப் போன சூழலை இனிய நந்தவனமாய் மாற்றும் வல்லமை தனிமனித ஆளுமையுடன் வெறுமனே பார்வையாளனாக இருக்கும் பொதுஜனத்தைவிட, துறை சார்ந்த வல்லாளர்களுக்கும், சிந்திக்கும் அறிவாளிகளுக்கும் உண்டு!
மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் நபருக்கு பிராண வாயு எத்துணை அவசியமோ.., எவ்வளவு அவசரமோ.., அத்தகைய அவசிய… அவசர யுக்தியுடன் சூழலை நன்முறையில் வார்த்தெடுக்க வேண்டும்.எண்ணங்களைக் கட்டிப்போட்டு இயலாமைகளின் இறுக்கத்தில் எம் வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் நகர்த்திக் கொண்டிருப்பது என்பது,எம்மைச் சார்ந்த சமூகத்துக்கு நாம் தரும் தண்டனையைவிட.., நமக்கு நாமே தரும் தண்டனையாகத்தான் இருக்கும்.
செல்லிடைப்பேசியின் அதிர்வலை எவ்வாறு அதன் அமைதி நிலையிலும் (ளுடைநவெ ஆழனந) அழைப்பை நமக்கு அறிவிக்கின்றதோ..,அதேபோல், உங்கள் சூழலைச் சுற்றி, எவ்வளவு நேர்மறை அதிர்வலைகளை ஏற்படுத்த முடியுமோ… அவற்றை அழகாக ஏற்படுத்த செய்யுங்கள்!
அதற்கு உசாத்துணையாக இருப்பவையே ஏகஇறைமையின் ஈடுஇணையில்லா கொள்கைக் கோட்பாடுகள்! எனவே.., அவற்றையே சாரந்திருப்பொம்! புதிய ஆண்டின் விடியல் பொன்னிற தகிப்புடன் எம் வாழ்வை மிளிரச் செய்யட்டும்!அதற்கு இறையருள் என்றும் துணைநிற்கட்டும்!!

Related Post