நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.,!

Coupleல்லறம் என்றும் தென்றல் வீசும் நல்லகம்..!அதன் வளர்ந்தோங்கலுக்கு என்றும் வேண்டும் நல் அகம்..!பரஸ்பர புரிதலும் அழகிய பழகுதலுமே அதன் உன்னத அத்தியாவசியம்..!இறைவழிகாட்டுதலே இல்லறம் பேண வேண்டிய சந்நிதானம்..!! 2006,பிப்ரவரி 22-ஆம் நாள் கேரளா, கோழிக்கோடு மாவட்ம்,குற்றியாடி எனும் ஊரில் நடந்த ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அங்கு வந்திருந்த ஒரு சகோதரியிடமிருந்து, ஒரு நீண்ட கண்ணீர்க் கடிதம் என் கைக்குக் கிடைத்தது.குடும்பத்தில் தான் அனுபவித்து வரும் துயரங்களை வேதனையோடு அதில் குறிப்பிட்டிருந்தார். அவர் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார்.இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு மாத விடுமுறையில் ஊருக்கு வருவார்.மீதமுள்ள 22 மாதங்களும் தனிமை-விரகதாபம்-துயரங்கள்தாம்..! குழந்தைகள் மாமியாருடன் கணவரின் வீட்டில்தான்வசித்து வருகின்றார்.வீட்டிலோ, மாமியாரின் ஆட்சிதான்! குழந்தைகளைப் பராமரித்து மாமியாரையும் கவனிக்க நாள்தோறும் கடுமையாக உழகை;க வேண்டும்.தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்தால் இரவு பத்து மணி வரை ஓயாத வேலை.சமைக்க வேண்டும்.மாமியாருக்கு குளிக்க வெந்நீர் காய்ச்ச வேண்டும்.துணி துவைக்க வேண்டும்.எல்லாம் ஒழுங்காகச் செய்தாலும் மாமியார் எப்போதும் திட்டிக் கொண்டேயிருப்பார்.எதிலும் குற்றம்,குறை சொல்லிக் கொண்டே இரப்பார்.ஒரு நல்ல வார்த்தை பேசியதே கிடையாது.நல்ல உடல்நலமும்,வணக்க வழிபாடுகளில் தீவிர ஈடுபாடும் கொண்டவர்.எந்த வணக்கத்தையும் தவறாமல் செய்து வருபவர்.ஆனால்,தகாத வார்த்தைகளால் திட்டுவதற்கும் துன்புறுத்துவதற்கும்,அவரது இறைபக்தி ஒரு தடையே அல்ல.!கணவரும் உடன் இல்லாத தனிமை வாழ்க்கை, அத்துடன் மாமியாரின் இந்தப் பொக்கும் சேர்ந்துகொள்ள எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.நான் என் செய்யட்டும்?-இதுதான் அக்கடிதத்தின் சாரம்..! அதற்கு முன்தினம்தான், வேறொரு சகோதரி மலப்புரம் மாவட்டத்திலிருந்து தொலைபேசியில் என்னிடம் முக்கால் மணிநேரம் தன் தயரங்களைச் சொல்லி அழுதிருந்தார். பிரசவம் முடிந்து இருபத்தி ஐந்து நாட்கள்தான் ஆகியிருந்தது.இவர் கணவரும் வெளிநாட்டில் இருப்பவர்.அன்று காலை, கணவர் அங்கிருந்தே தொலைபேசியில் அழைத்து கோபமாகப் பேசினார். கடுமையாக எச்சரிக்கவும் செய்துள்ளார்.இதற்கெல்லாம் காரணம் மாமியாரும், சின்ன நாத்தனாரும்தான். அவர்களின் பேச்சைக் கேட்டு அவருக்கு என் மீது தவறான கருத்து ஏற்பட்டள்ளது. என்னைப் பற்றி அவரிடம் எதையெதையோ சொல்லி, நான் சொல்வதைக் கேட்கவோ,புரிந்துகொள்ளவோ முடியாத அளவுக்கு என் மீது வெறுப்பை உண்ணடாக்கி இருக்கின்றார்கள். அழுகையும் குமுறலுமாய் பேசிய அந்த சகோதரிக்கு எவ்வளவு ஆறுதல் சொல்லியும் தேம்பித் தேம்பி அழுதவாறே ரிசீவரை வைத்தார். சமீபகாலமாக எனக்குக் கடிதங்கள் தொலைபேசிகள் பலவற்றிலும் இதுபோன்ற பல சகோதரிகள் தங்களின் துயரங்களைத் தெரிவித்து வருகின்றார்கள்.கணவனால் ஏற்படும் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ள முடியாத.., மனைவி, மாமியாரின் துன்புறுத்தலை சகிக்க முடியாத மருமகள், மருமகளால் புறக்கணிக்கப்பட்ட மாமியார்,நாத்தனார் என்று இம்சைக்கு ஆளானோர் இப்படிப் பலர். இதையெல்லாம் குறித்து ஆழமாகச் சிந்தித்தால், நமக்கு ஒரு விஷயம் புலனாகின்றது.அதாவது மனித மனங்களில் முன்னைக் காட்டிலும் இப்பொழுது சுயநல எண்ணங்கள் அதிகரித்து வருகின்றது.எல்லோருக்கும் தங்கள் சொந்தத் தேவைகளைப் பற்றி மட்டும்தான் கவலை.அதற்கு மேல், சிந்திப்பதற்கு யாரும் தயாரில்லை.பிறருக்காக சொந்த நலன்களைத் தியாகம் செய்து அதனால் ஏற்படும் சிரமங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவமும், பரந்த மனப்பான்மையும் கொண்டவர்களைக் காண்பது அரிதாகிவிட்டது. மற்றவர்களுக்காக சுய சவுகரியங்களை விட்டுக் கொடுப்பதிலும் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வதிலும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்வதில் கிடைக்கும் நன்மைகளையும்,அதன் மகத்துவத்தையும் இன்று பெரும்பாலோர் மறந்துவிட்டனர்.அதனால்,நெருங்கிய உறவுகளுக்குக்கூட தன் தேவைகளை அர்ப்பணிக்க யாரும் முன்வருவதில்லை. தாய்,மகன்,மகள்,தந்தை,தமயன்,கணவன்,மனைவி,சகோதர-சகோதரிகள் இப்படி எந்த உறவுமே யாரும் யாருக்காகவும் எதையும் விட்டுக் கொடுத்து சின்னச் சின்ன கஷ்டங்களைக்கூடப் பொறுத்துக் கொள்வதில்லை.அதை ஒரு பாரமாகத்தான் நினைக்கின்றார்கள். கருணை,இரக்கம்,பணிவு.வாஞ்சை,அன்பு,நேசம் போன்ற நற்பண்புகளை மனித மனங்களிலிருந்து அகன்றுவிட்டதுதான் இதற்குக் காரணம்.அதுவோ,உலகத் தேவைகளின்பால் ஏற்பட்டுவிட்ட அளவு கடந்த மோகத்தினால் உண்டானது. மேற்கத்திய புதுமை நாகரிகத்தின் தாக்கமும் முதலாளித்துவ வாழ்க்கை முறையும் ஏற்படுத்திய விளைவுகள்தான் இது! இந்த நோய் நம் நாட்டில் பரவுவதற்குக் காரணம் செய்தி ஊடகங்கள்! இன்று பெண்களுக்கு எதிரி பெண்களே.,! வேட்டைக்காரர்களும் அவர்களே..!வோட்டையாடப்படுவதும் அவர்களே.,!! இத்தகையச் சூழலில் நாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான அந்த முகம் தெரியாத சகோதரிகளின் துக்கமும் வேதனைக் கண்ணீரும் கண்டு உள்ளத்தில் பொங்கிய துயரத்தோடு எழுதப்பட்டதுதான் இந்த ஆக்கம்! நுகர்வுக் கலாச்சாரம் இன்று உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது.எல்லாக் காரியங்களும் வியாபாரக் கண்ணோட்டத்திலேதான் பார்க்ப்படுகின்றது.இலாப நோக்கமே மேலோங்கி நிற்கின்றது.இத்தகைய வணிகவியல் கலாச்சாரத்தின் பிடியிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்பவர்கள் மிகக் குறைவு.இந்தக் கலாச்சாரம் மனித உறவுகள்,பந்த-பாசங்களைக்கூட விட்டு வைக்கவில்லை.கூட்டிக் கழித்து கணக்குப் பார்த்து இலாப-நஷ்டங்களை முன் வைத்துதான் புனிதமான திருமண உறவைக்கூட முடிவு செய்கின்றார்கள்.வாழ்நாள் முழுவதும் ஓர் ஆணுக்குத் துணையாய்,தோழியாய்,நிழலாய்,ஆதரவாய் இருக்கப் போகும் இல்லாளைத் தேர்ந்தெடுக்கும்போதுகூட பேரம் பேசப்படுகின்றது.வரவும் இலாபமும் கணக்குப் பார்க்கப்படுகின்றது. ஆனால்,இஸ்லாம் வகுத்தளித்த இல்லற நெறியோ,அன்பு,பாசம்,பரிவு,கருணை எனும் உணர்வுகளின் அடிப்படையில் அமைந்தது ஆகும். திருக் குர்ஆன் கூறுகின்றது: மேலும், அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான்; நீங்கள் அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக! மேலும், உங்களிடையே அன்பையும், கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன. (30:21) அன்பு எனும் சொல்லில்தான் எத்தனை அழகு!கேட்பவரின் உள்ளத்தைக் குதூகலிக்கச் செய்யும் சொல் அது!தனக்கு அது கிடைக்க வேண்டுமென்று ஏங்காத மனம்தான் உண்டா? பிறரிடம் அன்பு செலுத்தத் தெரியாதவர்கூட, தனக்கு அது கிடைக்க வேண்டுமென்றே விரும்பவார். உயிர் வாழ காற்றும் நீரும் எந்த அளவுக்கு அவசியமோ, அந்த அளவுக்கு சமூக உறவுகள் நிலைத்திருக்க மனித மனங்களில் நேச உணர்வு மிக மிக அவசியமாகும். அன்புதான் மனித இதயங்களைத் திறக்கும் சாவிபலமான ஆயுதத்தால் வீழ்தத் முடியாத ஒருவனைக்கூட அன்பினால் அடக்கிவிட முடியும்.அன்பின் வலிமைக்கு எல்லையே கிடையாது.அதனை அளவிடவும் முடியாது. எந்தவொரு பொருளையும் செலவு செய்தால் தீர்ந்து போகும். ஆனால், அன்பின் நிலை அதற்கு நேர்மாற்றமானது.அது கொடுக்கக் கொடுக்க குறைவதில்லை.அதிகரிக்கத்தான் செய்யும் கொடுப்பதைவிட அதிகமாகத் திரும்பக் கிடைக்கும்.மேலும்,இன்னும் அதிகமாகக் கொடுகக்த் தூண்டும்.அதன் பலனாய் எல்லையற்ற அன்பு கிடைத்துக் கொண்டே இருக்கும். தாம் நேசிக்கின்ற ஒன்றிற்காக அனைத்தையும் அர்ப்பணிக்கவே. ஓவ்வொருவரும் தயாராய் இருப்பார்கள்.பிறரின் நேசத்தைப் பெறுவதற்காகக் கடும் முயற்சி செய்யும் ஒருவர் அதில் சோர்ந்து போவதுமில்லை.அந்த முயற்சியே அவருக்கு அளவற்ற ஆனந்தத்தைக் கொடுக்கும்.தான் அதிகமாக நேசிக்கும் தனது அன்பு மழலைக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் அது நலமடையும் வரை எத்தனையோ இரவு-பகல் ஊண் உறக்கமின்றித் தவிக்கும் ஒரு தாயின் உள்ளம் அதற்காக ஒருபோதும் சலிப்படைவதேயில்லை.அத்துடன் அக்குழந்தை நலம் பெற்றுவிட்டால் அந்தத் தாயின் உள்ளம் அடையும் ஆனந்தம் இரக்கின்றதே.., அப்பப்பா..! வார்த்தையால் வருணிக்க முடியாதது..! மனித மனங்களை இணைக்கும் சங்கிலியில் அன்பைப் போலவே, கருணை உணர்ச்சியும் ஒரு முக்கிய கண்ணியாகும்.மனித உணர்ச்சிகளிலே மிகவும் புனிதமானது கருணை உணர்ச்சி.கருணையில்லாத மனம் பாலைவனத்திற்கு ஒப்பாகும். மனித உள்ளங்களின் இந்த சிறப்புக் குணங்களான, அன்பு, கருணை உணர்ச்சிகள்தான் தாம்பத்ய வாழ்வின் அடிப்படையாக அமைய வேண்டுமென்று திருக்குர்ஆன் வலியுறுத்துகின்றது.அத்தகைய தாம்பத்ய வாழ்வு உலகியல் மதிப்பீடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகும்.கணிதவியல்படி ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டாகும். ஆனால், திருக் குர்ஆன் வகுத்துள்ள தாம்பத்ய நியதி அத்தகைய ஒன்றல்ல.,! தும்பதிகளைப் பற்றிச் சொல்லும்போது கணவன்,மனைவி எனும் வார்த்தையைத்தான் நாம் உச்சரிக்கின்றோம்.ஆனால், திருக் குர்ஆன் அவர்கைள ‘இணைகள்’ என’றே குறிப்பிடுகின்றது. மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். (4:1) ஆண் என்பவன் பெண்ணை அடக்கி ஆளப் பிறந்தவன்.எனவே, பெண் ஆணுக்கு அடிமையாய் அடங்கிக் கிடக்க வேண்டம்அவன் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.எதையும் பெசலாம்.எபப்டி வேண்டமானாலும் நடந்து கொள்ளலாம்.எல்லாவற்றையும் ஒர பெண் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.ஏன்,எதற்கு என்று கேள்வி கேட்கக்கூடாது.அவளுக்கு எந்தவிதக் கருத்தும் சொல்ல உரிமையில்லை என்பது போன்ற ஆணாதிக்கக் கொள்கைiயை இஸ்லாம் ஒருபொதும் அங்கீகரிப்பதில்லை. அதாவது ஆண் அடக்கியாள்பவனோ பெண் ஆளப்படுபவளோ அல்ல.!மாறாக, ஒருவருக்கொருவர் ஆதரவு காட்டி அன்பு செலுத்தி,உதவி செய்து,சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் இணைகளாவர்.திருக் குர்ஆனின் ‘இணைகள்’ என்ற சொற்பிரயோகமே இந்தப் பொருளைத்தான் கொடுக்கின்றது.கணவன்-மனைவியருக்கு இடையேயான பரஸ்பர உரிமைகளை ஒருவருக்கொருவர் அங்கிகரிப்பதன் மூலமே புனிதமான தாம்பத்ய வாழ்வு சாத்தியமாகும். திருக் குர்ஆன் கூறுகின்றது: பொதுவான நியதிப்படி ஆண்கள் மீது பெண்களுக்குச் சில உரிமைகள் உள்ளன் பெண்கள் மீது ஆண்களுக்கு உள்ள சில உரிமைகளைப் போல! கணவனுக்கு, மனைவி இணையாகவும் துணையாகவும், தோழியாகவும், வாழ்வின் சக கூட்டாளியாகவும் இருக்கின்ற காரணத்தால், தன் கணவனிடமிருந்து அவளுக்கு முழுமையான அன்பும் ஆதரவும் கருணை சார்ந்த அரவணைப்பும் கிடைத்தாக வேண்டுமென்று திருக் குர்ஆன் வலியுறுத்துகின்றது:- அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலும் பொறுமையைக் கைக்கொள்ளுங்கள். ஏனெனில், ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருக்கக் கூடும். (4:19) இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் சிறந்தவர் தன் மனைவியிடத்தில் நல்ல மறையில் நடந்துகொள்பவரே..!: மேலும் கூறினார்கள்: கண்ணியமுள்ளவர்தான் அவளைக் கண்ணியப்படுத்துவார்.நீசபுத்தி கொண்டவர்தாம் அவளை நிந்திக்கச் செய்வார்’ நபி (ஸல்) ஒரமுறை தம் தோழர்களிடத்தில் கூறினார்கள்: ‘எந்தவொரு இறைநம்பிக்கையாளரும் தம் மனைவியை வெறுக்க வேண்டாம்.அவளத ஒரு குணம் உங்களுக்குப் பிடிக்காமற் போகலாம்.ஆனால், வேறொரு நற்குணம் நிங்கள் விரும்பக் மூடியதாய் இருக்கும்’ ஆதாரம்: முஸ்லிம்

Related Post