தொழுகையாளிகளே உங்களுக்காக காத்திருக்கும் நற்பாக்கியங்கள்!

‘பிலாலே! தொழுகைக்காக இகாமத்துச் சொல்லும்; தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் தான் நாம்

தொழுகையாளிகளே உங்களுக்காக காத்திருக்கும் நற்பாக்கியங்கள்!

தொழுகையாளிகளே உங்களுக்காக காத்திருக்கும் நற்பாக்கியங்கள்!

மன நிம்மதி பெறுகின்றோம்’ (அபூதாவுத்).

இது நமது உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தைகளாகும். உண்மையில் முஃமினுக்கு தொழுகையில் தான் மன நிம்மதி இருக்கின்றது என்பதை இந்தக் கூற்று உறுதி செய்கின்றது. ஆனால் இன்றைய நமது தொழுகைகளையின் நிலையை கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அவைகள் நமக்கு சுமைகளாக மாறிவட்டனவா? அல்லது அதன் மூலம் உண்மையில் மன நிம்மதியைத் தான் பெற்றுக்கொண்டிருக்கின்றோமா?

தொழுகையாளிகளே! உங்களுக்கு எத்தனை எத்தனை நற்பாக்கியங்கள். தொழுகையை நிறைவேற்றும் உங்களுக்கு மாத்திரம் தான் இந்த என்னற்ற நற்பாக்கியங்கள். தொழுகையை பாழ் படுத்தும் பாவிகளுக்கு அல்ல!

தொழுகையாளிகளுக்கு வெற்றி உறுதி என்ற சுபச்செய்தி:

‘ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (அல்முஃமினூன் 23: 1,2).

தொழுகையை ஏனைய அனைத்து வணக்கங்களை விடவும் சிறப்பிற்குரியது என்ற நற்செய்தி:

‘அல்லாஹ்வின் தூதிரடம் நற்கருமங்களில் மிகச் சிறந்தது எது? என கேட்கப்பட்ட போது, தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது என பதிலளித்தார்கள்’. (முஸ்லிம்).

அடியான் அகிலங்களின் இரட்சகனுடன் உரையாடுகின்ற இடம் தொழுகை என்ற நன்மாராயம்:

‘நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றும் போது தனது ரப்புடன் உரையாடுகின்றார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (புஹாரி).

அடியான் அல்லாஹ்விற்கு மிக நெறுக்கமாக இருக்கின்றான் என்ற நற்செய்தி:

‘ஒரு அடியான் தனது ரப்புக்கு மிக நெறுக்கமாக இருக்கும் சந்தர்பம் ஸுஜுதாகும், எனவே அதில் பிறார்த்தனையை அதிகப்படுத்துங்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).

தொழுகை இஸ்லாத்தின் தூன் என்ற சுபச்செய்தி:

‘செயல்களின் அடிப்படை இஸ்லாம், அதன் தூன் தொழுகை’ என அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். (திர்மிதி).

தொழுகை பேரொளி என்ற நன்மாராயம்:

‘தொழுகை பேரொளி’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம், திர்மிதி).

தொழுகை நயவஞ்சத்தன்மையிலிருந்து பாதுகாக்கும் என்ற சுபச்செய்தி:

‘நயவஞ்சகர்களுக்கு பஃஜ்ர், இஷா தொழுகையை போன்று சிறமமான வேறு எந்தத் தொழுகையும் இல்லை. அந்த இரு தொழுகைகளுக்கு கிடைக்கும் நற்கூலிகளை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்த நிலையிலாவது வந்து அதில் கலந்துகொள்வார்கள்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை என்ற சுபச்செய்தி:

‘எவர் இஷா தொழுகையை கூட்டாக நிறைவேற்றுவாரோ அவர் இரவின் ஒரு பகுதியையும், அவர் பஃஜ்ர் தொழுகையையும் கூட்டாக நிறைவேற்றும்போது முழு இரவும் நின்று வணங்கிய நன்மையை பெற்றுக்கொள்கின்றார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

தொழுகை நரக நெறுப்பிலிருந்து பாதுகாக்கும் என்ற நன்மாரயம்:

‘சூரிய உதயத்திற்கு முன்னும், சூரிய மறைவிற்கு முன்னும் தொழுகையை நிறைவேற்றும் எவரையும நரகம் தீண்டாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).

இந்த ஹதீஸ் குறிப்பிடுவது: பஃஜ்ருத் தொழுகையும், அஸர் தொழுகையுமாகும்.

தொழுகை மானக்கேடான, பாவமான காரியங்களில் இருந்து தடுக்கும் என்ற சுபசோபனம்:

‘நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டும் தடுக்கும்’. (அல் அன்கபூத் 29: 45).

தொழுகை நீங்கள் அல்லாஹ்விடம் உதவி பெறுவதற்கு உள்ள சிறந்த ஊடகம் என்ற நன்மாரயாம்:

நீங்கள் பொறுமையைக்கொண்டும், தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்’ (அல்பகரா 2: 45).

‘நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்’. ;’ (அல்பகரா 2: 153).

தனியாக நிறைவேற்றப்படும் தொழுகையை விட கூட்டாக நிறைவேற்றப்படும் தொழுகைக்கு கிடைக்கும் சுபசோபனம்:

‘தனித்துத் தொழுவதை விட கூட்டாக தொழுகையை நிறைவேற்றுவது இருபத்தேழு மடங்கு நன்மையை உங்களுக்கு பெறுக்கித்தரும்’ என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (முத்தபஃகுன் அலைஹி).

தொழுகையாளிக்கு வானவர்கள் அல்லாஹ்விடம் அருள் வேண்டி பிறார்த்திக்கின்றார்கள் என்ற நன்மாராயம்:

‘உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றும் இடத்தில் வுழூ முறிந்துவிடாமல் அமர்ந்திருக்கும் காலமெல்லாம், வானவர்கள் அவருக்காக அல்லாஹ்விடம் யா அல்லாஹ்! அவரது பாவங்களை மன்னிப்பாயாக! யா அல்லாஹ் அவருக்கு அருள் புரிவாயாக! என்று பிறார்த்தித்துக்கொண்டிருப்பார்கள்’ என அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

 

எழுதியவர்:மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

தொடர்புடைய ஆக்கங்கள்:

1. இறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக்குவோம்!

2. தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்!

3. திருக் குர்ஆனின் பார்வையில் தொழுகை பகுதி – 1          

 

 

 

 

Related Post