டீன்-ஏஜ் தகிடுதத்தங்கள்..!!

முறையாக எம்மை கவனிக்கும் ஆசையில் பெற்றோர் செய்யும் எதுவும் எமக்குகுறையாகத் தெரியும்.ஆனால் அதன் அருமை-பெருமை நாம் பெற்றோராகும்போதுதான் தெரியும்.எனவே,பெற்றோரின் அழகிய பழக்கங்களை உங்களின் வெற்றி வழக்கங்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

-மு.அ.அப்துல் முஸவ்விர் 

பதின்பருவ பாவைகள்..!

முறையாக எம்மை கவனிக்கும் ஆசையில் பெற்றோர் செய்யும் எதுவும் எமக்குகுறையாகத் தெரியும்.ஆனால் அதன் அருமை-பெருமை நாம் பெற்றோராகும்போதுதான் தெரியும்.எனவே,பெற்றோரின் அழகிய பழக்கங்களை உங்களின் வெற்றி வழக்கங்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

எந்தவொரு வசதியையும் உடனே பெற வேண்டம் என நாடும் வயது இது.மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து உங்களுக்காக வாழும் பெற்றோர் உங்கள் வசதிக்காக வாங்கித் தர நாடும் எதுவொன்றிலும் வீணாண-தேவையற்றதை கேட்டகாதீர்கள்.கிடைப்பதையும்’ முறையாக ஆகுமான வழியில் பயன்படுத்துங்கள்.

எப்போதும் செல்போன் கையுமாக இருக்க சொல்லும் மனசு இது.உங்கள் பாதுகாப்புக்கும் படிப்புக்கும் வீண்அரட்டை அடிக்கா உங்களின் அன்புத் தோழியருக்காகவும் மட்டுமே அதனைப் பயன்படுத்துங்கள்.

ஆகுமானதற்ற கேளிக்கைகளை அரவணைக்க சொல்லும் வயது இது.உங்கள் ஆளுமையின் அரவணைப்பை பாதுகாக்க முடியாத இந்த உலகாயத கேளிக்கைகளுக்கு சமாதி கட்டுங்கள்.மாறாக,அதில் உள்ள தொழில்நுட்ப வசதிகளை உங்கள் மார்க்க வழியில் திறம்படுத்த செயற்படுங்கள்.கண்டதையும் மனத்தில் பதியச் சொல்லும் பாழும் வயசு இது.ஆகுமானதைப் பதித்து,அசிங்கங்களை தூக்கி வீசுங்கள்.

இசையின் மோகத்தில் மெய்மறக்கச் சொல்லும் மாய வயது இது.இசையின் பயன்பாட்டு வரையறையை நீங்கள் இவ்வாறு வரையறுத்துக் கொள்ளுங்கள்.மக்காவிலிருந்து மதினாவுக்கு முஹம்மத்  (ஸல்) அவர்கள் சென்ற வேளையில் அன்னாரை வரவேற்க மதீனத்து மழலைகள் இசையை எவ்வாறு பயன்படுத்தினார்களோ,அந்த அளவுக்குத்தான் இசை என்பதை நினைவில் வையுங்கள்.இசையின் இன்பத்தில் உங்கள் வாழ்க்கையை விரயமாக்காதீர்கள்!

தனிமையில் இனிமை காணச் சொல்லும் வயது இது.வருங்கால வாழ்க்கைத் துணையை ஆகுமாகப் பெற்றுக்கொள்ளும் வரையில், உங்கள் பதின்பருவத்தில் தாயின் அரவணைப்பிலிருந்து உங்களைத் தூரப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

இயலாதபட்சத்தில் நீங்கள் இருபாலார் பள்ளி-கல்லூரி-பல்கலைக்கழகங்களில் தான் பயில வேண்டிய கட்டாயம் நேர்ந்தால் பர்தாவையும் பணிவையும் பேணுங்கள்.அவ்விடங்களில்,உங்கள் மார்க்க வரையறைக்கு மாற்றமான எந்தவொரு  சிறு செயல்முறைக்கும் இடம் தராதீர்கள். அது கல்வி தொடர்பான விஷயமானாலும் சரி,பொது விஷயமாக இருந்தாலும் சரியே..!

Related Post