நான் ஏன் முஸ்லிம் ஆனேன்..?

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்..?

னிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். அநாதைகளுக்கு அவர்களுடைய உடைமைகளைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்! நல்ல பொருளுக்குப் பதிலாக தீய பொருளை மாற்றாதீர்கள்; மேலும், அவர்களின் பொருள்களை உங்களின் பொருள்களோடு கலந்து உண்ணாதீர்கள்; திண்ணமாக இது பெரும் பாவமாகும். அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும். மேலும், பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை (கடமையெனக் கருதி) மனமுவந்து அளித்துவிடுங்கள்! ஆயினும், அந்த மஹ்ரிலிருந்து ஒரு பாகத்தை அவர்கள் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால், அதனை நீங்கள் தயக்கமின்றி அனுபவிக்கலாம்.மேலும், உங்களுடைய வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள பொருள்களை விவரமறியாதவர்(களாய் உள்ள அநாதை)களிடம் ஒப்படைக்காதீர்கள்; ஆனால், அப்பொருள்களிலிருந்து அவர்களுக்கு உண்ணவும், உடுக்கவும் அளியுங்கள்! மேலும் அவர்களுக்கு நல்ல விஷயங்களை அறிவுறுத்துங்கள்! மேலும், அநாதைகளை அவர்கள் திருமணப் பருவத்தை அடையும் வரை சோதித்து வாருங்கள்! அவர்களிடம் (பகுத்துணரும்) தகுதியை நீங்கள் கண்டால், அவர்களுக்குரிய உடைமைகளை அவர்களிடமே ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்களின் உரிமைகளைக் கேட்டு)விடுவார்களென அஞ்சி அந்த உடைமைகளை நீதிக்குப் புறம்பாக, வீண் விரயமாக, அவசரமாக விழுங்கி விடாதீர்கள்! அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வந்தராக இருந்தால், அவர் அநாதைகளின் சொத்துக்களிலிருந்து உண்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவோடு உண்ணலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அதற்குச் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் கணக்கு கேட்பதற்கு அல்லாஹ் போதுமானவன். (மரணமடைந்த) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்குண்டு. (அது போல) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு; அச்சொத்துக் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் சரியே! இந்தப் பங்கு அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்டதாகும். மேலும், பங்கீடு செய்யும்போது (வாரிசு அல்லாத) உறவினர்களோ, அநாதைகளோ, வறியவர்களோ வந்தால் அச்சொத்திலிருந்து அவர்களுக்கும் சிறிது வழங்குங்கள்! மேலும், அவர்களிடம் கனிவாகப் பேசுங்கள்! மக்கள் தங்களுக்குப் பின்னால் ஒன்றுக்கும் இயலாத குழந்தைகளை விட்டுவிட்டு மரணமடைய நேரிட்டால், அப்பொழுது தம் குழந்தைகள் குறித்து எந்த அச்சங்களுக்கு அவர்கள் ஆளாவார்களோ அதனைக் கருத்தில் கொண்டு (இவர்கள் விஷயத்திலும் இப்பொழுது) அவர்கள் அஞ்சிக் கொள்ளட்டும்; எனவே அவர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து வாழட்டும்; மேலும் நேர்மையான வார்த்தைகளையே பேசட்டும்! அநாதைகளின் சொத்துகளை யார் அநியாயமாக உண்கிறார்களோ, அவர்கள் உண்மையில் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும், அதிவிரைவில் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பில் வீசி எறியப்படுவார்கள்.

 

Related Post