நிராகரிப்பின் நாசத்திலிருந்து.., நம்பிக்கையின் நிழல் வரை..! – 1

– மு.அ.அப்துல் முஸவ்விர்

றக்குறைய பதினான்கு வருடங்களுக்கு முன்னர் கண்ட அதே மனிதரா இவர்

றக்குறைய பதினான்கு வருடங்களுக்கு முன்னர் கண்ட அதே மனிதரா இவர்

புறத்தே காணும் விளைவுகளோடு போராடிக் கொண்டிருக்கின்றான் மனிதன், அந்த விளைவுகளின் காரண காரியங்களை தன் மன (அக)த்துள் மறைத்து வைத்துக்கொண்டே!சத்தியமும் அசத்தியமும் இருவேறு திசைகள்! அசத்தியப் போக்கு மனிதனை அதளபாதாளத்தில் வீழச் செய்யும்.சத்தியப்போக்கு, சாம்ராஜ்யங்களின் சகலகலாவல்லவனாக அவனை ஆக்கும்!இறைசந்நிதியில் வேறுபாடில்லா சமத்துவங்களே, இஸ்லாமிய கவுரனீய வாழ்வைப் பெற்ற ஒரு சராசரி மனிதனின் சத்தியத்தின்பால் திண்மைத்தழுவல்களும்,கற்றறிந்த ஆன்றோரின் ஏகஇறைபால் சாய்வும்! எனினும், மனப்பிறழ்ச்சிக்கு மருத்துவம் கண்டுவந்த மனோதத்துவ விஞ்ஞானி ஒருவரின் மனம், ஒரு யுககால தேடலின் பின்னர், ஏக இறைபால் ஆகுமாக பிறழ்வது வருங்கால வரலாறு!

ஏறக்குறைய பதினான்கு வருடங்களுக்கு முன்னர் கண்ட அதே மனிதரா இவர்..? கனல் கக்கும் பார்வையும், வெட்டு ஒன்று.., துண்டு இரண்டாகப் பேசி நேரடியாக விஷயத்தக்கு வரும் மனோபாவமும் பெற்ற பேராசிரியரா இவர்..? வளைகுடா நாட்டின் அனல் காற்றுச்சூழலினூடே, பாலைவனச் சோலை எனும் பெயரிடப்பட்ட அந்த தங்கும் விடுதி அறையின் இரம்மியமான குளிர் கலந்த அமைதிச் சூழலில்…!குவைத்துக்கு குறுகிய கால விஜயமாக னுச. அப்துல்லாஹ்-வாக வந்திருக்கும் அந்த முன்னாள் பெரியார்தாசன், தொடர்ந்த விமானப் பயணங்கள் தந்த அசதி,பெரியார்தாசனாக தன்னை முன்பு குவைத்தில் வரவேற்ற சுற்றமும் நட்பும், தற்போது னுச. அப்துல்லாஹ்-வாகி அதே குவைத்தில் கால் பதித்தபோது புறக்கணிப்பை வரவேற்பாக அளித்த மனபாதிப்பு,சுறுசுறுப்பான இறுக்கமான பணிச்சூழல்கள் இவற்றுக்கிடையேயும் வெளிநாட்டிலிருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளிலேயே, முதன்முறையாக வசந்தம் பத்திரிகைக்காக ஆசிரியர் மு.அ.அப்துல் முஸவ்விர் அவர்களுக்கு ஒரு நீண்ட பேட்டியை வழங்கினார்.., அவருடனான நேர்காணலிலிருந்து… வசந்தம் வாசகர்களுக்காக..!

உங்களைப் பற்றிய ஒரு சுருக்க சுயஅறிமுகம் தாருங்களேன்…!

சேஷாசலம் என்பது என் இயற்பெயர்.மனோதத்துவ துறையில் கலாநிதி –டாக்டர் பட்டம் பெற்று,சென்னையின் புகழ் பெற்ற பச்சையப்பன் கல்லூரியில் மனோதத்துவப் பாடப் பேராசிரியராக பணியாற்றி 2006-இல் ஓய்வு பெற்றேன்.தற்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மதிப்புறு பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றேன்.இது தவிர, மனநோய்க்கு தனியாக சிகிச்சையும் அளித்து வருகி;ன்றேன்.இது எனது தொழில்!                                                              குடும்பத்தை எடுத்துக் கொண்டால், நான் ஒரு இந்து பெற்றோருக்கு பிறந்தவன். உடன்பிறந்தவர்கள் எவரும் அதிகம் படிக்கவில்லை என்றாலும், ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்த என் தந்தை என்னை நன்கு படிக்க வைத்தார்.நானும் அவர் உழைப்பை வீணாக்காமல் நன்கு படித்து முன்னேறினேன்.

Related Post