Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

ஃபிக்ஹ் – இஸ்லாமிய சட்ட வழிகாட்டி பகுதி 1 தூய்மையும் தொழுகையும் 3

ஃபிக்ஹ் – இஸ்லாமிய சட்ட வழிகாட்டி
பகுதி 1
தூய்மையும் தொழுகையும் 3
 ஃபிக்ஹ்

ஃபிக்ஹ்

நாதியா இப்லாக்
தமிழில்: மு.அ. அப்துல் முஸவ்விர்
தூய்மையும் தொழுகையும் 3
1.6 ஃபிக்ஹ் – கலைச்சொல் அகராதி: தனிமனிதருக்குரிய செயற்பாடுகள் (ஹ_குமுல் தக்லிஃபி)
1. ஃபர்ளு: இது (ஒதுக்கப்பட முடியாத) கடமையான ஒன்றைக் குறிக்கும்.இதில் ஏற்படும் நிறை மற்றும் குறைகளுக்காக, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் முன்பாக பதில் சொல்ல வேண்டிய கடமைக்குரியது.இதனை மேற்கொண்டால் வெகுமதியும், தவிர்த்தால் தண்டனையும் கண்டிப்பாக உண்டு
2. ஃபர்ளு-ஐன்: அறிவு,சொல்,செயல்,நடத்தை,நம்பிக்கை ஆகியவற்றுக்குரியது. பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ள ஒவ்வொருவரிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது.
3. ஃபர்ளு கிஃபாயா: முஸ்லிம்களின் ஒரு குறிப்பிட்ட குழு அல்லது பிரிவினரிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது.உதாரணத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் ஒரு குழுவில் இடம்பெற்றுள்ளவர்களில் எவரேனும் ஒருவர் அதனை நிறைவேற்றிவிட்டால் போதுமானது.குறிப்பிட்ட அந்த கட்மைக்காக மற்றவர்கள் கேட்கப்படமாட்டார்கள். (உ-ம் ஜனாஸா எனும் மரண தொழுகை)
4. ஸ_ன்னத்:-கேள்விக் கணக்குக்குட்பட்ட ஒரு முஸ்லிம் இதனை மேற்கொள்ள ஆர்வமூட்டப்படுவது.இதனை மேற்கொண்டால் வெகுமதி உண்டு.தவிர்த்துவிட்டால் தண்டனை ஏதும் கிடையாது.
5. ஸ_ன்ன முஅக்கதா:-ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஸ_ன்னா இது!இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், தவறாமல் வழமையாக பின்பற்றி வந்தது.
6. ஸ_ன்ன முஸ்தஹப்:- ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாத ஸ_ன்னா இது! !இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், தவறாமல் வழமையாக பின்பற்றி வந்த செயல் அல்ல!
7. முபா:- நற்கூலியையோ அல்லது தண்டனையையோ குறித்து இஸ்லாமிய ஷரீஅத் சட்டம், குறிப்பிட்ட எந்தவொரு வாக்கியத்தையும் பயன்படுத்தியிருக்காத அம்சங்கள்!
8. மக்ரூஹ்:-இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் தடுப்பதற்குக் கோரும் செயல்கள்.ஆனால் அதனை மேற்கொண்டுவிட்டால் எந்த தண்டனையும் இல்லை.
9. ஹராம்:- திருக் குர்ஆன் வசனம் அல்லது ஏதேனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் எந்தவொரு ஐயத்துக்கும் கிஞ்சுற்றும் இடமின்றி, கண்டிப்பாக மேற்கொள்ளக்கூடாத செயல்கள்.அவ்வாறின்றி இத்தகைய செயல்களை மேற்கொண்டால் கண்டிப்பாக தண்டனையும்,அவற்றிலிருந்து தம்மைத் தொலைவுபடுத்திக் கொண்டு அறவே தவிர்த்துவிட்டால் நற்கூலியும் நிச்சயம் உண்டு!
10. இஜ்மா:- (பொதுக்கருத்து):ஒரு குறிப்பிட்ட மார்க்க சட்ட – ஷரீஅத் அம்சத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படின், அந்த குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து முஸ்லிம் அறிஞர்கள் ஒத்த கருத்துடன், சம்மதத்துடன் எட்டும் பொது முடிவைக் குறிக்கும்.அதனை பின்பற்றுவது அனைத்து முஸ்லிம்கள் மீதும் (வாஜிப்) பொறுப்பாகிவிடுகின்றது.
11. கியாஸ்:- (ஒத்த கருத்து) மற்றொரு தீர்ப்புக்குரிய ஆதாரம் இன்றி,நல்லொழுக்க ஆதார அடிப்படையில் இருவரிடையே ஒப்புக்கொள்ளப்படுவது.

Related Post