-அகார் முஹம்மத்
தொகுப்பு: இளவேனில்
ஐ.நா. சபை டிஸம்பர் 20-ஆம் தேதியை சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினமாக அறிவித்து வருடந்தோறும் அனுசரித்து வருகின்றது. அகதிகள் எனும் அடைமொழியோடு வழங்கப்படும் இவர்களை நாம் புலம்பெயர்ந்தோர் என்றே அழைப்போம். பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் புலம் பெயர்ந்தாலும் சொந்த நாட்டில் வாழ இயலாது. வேற்று நாட்டக்கு புலம்பெயரும் மக்களின் நிலைமைதான் இங்கு மிகவும் கவனிக்கத்தக்கது.
இஸ்லாமிய வரலாற்றில் புலம்பெயர்ந்தோர் அம்சம் ஒரு குறிப்பட்ட தாக்கத்ததைக் கொண்டத எனில் அது மிiகையல்ல..!
அண்ணலார் (ஸல்) அவர்களின் புலம்பெயர்தல் தந்த படிப்பினைகளையும் சம்பவங்களையும் பட்டியலிட்டால் புலம்பெயர்ந்தோரின் பிரச்னைகளுக்கான அனைத்து தீர்வுகளையும் நாம் காண முடியும்!
ஹிஜ்ரத் ஏன்?
வரலாற்றில் பல நபிமார்கள் ஹிஜ்ரத் மேற்கொண்டுள்ளனர். இப்றாஹீம், மூஸா (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோரின் ஹிஜ்ரத் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து நபியவர்களின் ஹிஜ்ரத் எவ்வாறு வேறுப டுகின்றது? வெறுமனே ஒரு மனிதன், ஒரு சமூகம் ஓர் இடத் திலிருந்து இன்னோர் இடத்திற்கு புலம்பெயர்ந்த நிகழ்வுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வழங்குகின்றோம்?
நபியவர்கள் தான் பிறந்து வளர்ந்த, நேசித்த மக்கத்து மண்ணிலிருந்து புலம்பெயர்வதற்கான தீர்மானத்தை ஏன் எடுத்தார்கள் அதற்குத் தூண்டுகோலாக அமைந்த காரணங்கள் என்ன என்பது பற்றிய தெளிவு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்க வேண்டும்.
நபியவர்கள் இந்தப் பூமிக்குக் கொண்டு வந்த அல்லாஹ்வுடைய தீன் வெறுமனே தனிமனிதர்களை மாத்திரம் உருவாக்குவதை இலக்காகக் கொண்டதல்ல, தனி மனிதர் களை உருவாக்கி, அதன் மூலம் குடும்பங்களை உருவாக்கி அந்தக் குடும்பங்களை இணைத்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் வந்தவர்கள்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.
மக்கத்து மண்ணிலே தனி மனிதர்களாக இருந்து கொண்டு வணக்க வழிபாடுகளை, கிரியைகளைச் செய்வதற்கான வாய்ப்பு ஓரளவு இருந்தது. ஆனால், நபியவர்கள் விரும்பிய இஸ்லாமிய சமூகத்தை உருவாக்குவதற்கு மக்கா நகர் பொருத்தமானதாக இருக்கவில்லை. எனவே, தனது இலக்குகளை அடைவதற்குப் பொருத்தமான ஒரு பூமியைத் தெரிவு செய்து அங்கு செல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது.
இத்தகைய ஒரு பாரிய இலக்கோடு மேற்கொள்ளப்பட்ட ஓர் இலட்சியப் பயணமே ஹிஜ்ரத். தனது கொள்கைப் பிரசாரப் பணியில் அடுத்த கட்டங்களை அடைவதற்காகவே நபியவர்கள் இத்தகைய ஒரு பயணத்தைத் திட்டமிட்டார்கள்.
ஹிஜ்ரத் திட்டமிடப்பட்ட ஒரு பயணம்
ஹிஜ்ரத்துக்காக நபியவர்கள் மேற்கொண்ட முன்னேற்பாடுகளும் அவற்றின் படிப்பினைகளும் ஏராளம் உள்ளன.
- நபியவர்கள் ஹிஜ்ரத் மேற்கொள்ளத் தயாரானபோது மதீனாவுக்கு புலம்பெயரவிருப்பதை இரகசியமாகவே வைத்திருந்தார்கள். இந்த இரகசியம் அபூ பக்ர், அலி (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகிய இருவருக்கு மாத்திரமே தெரிந்திருந்தது. ஏனெனில், குறைஷிக் காபிர்கள் நபியவர்களின் ஒவ்வொரு அசைவையும் மிகக் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்தார்கள். இப்பயணத்தை மேற்கொள்வதற்காக ஒரு ஒட்டகத்தையும் இரகசியமாகவே கொள்வனவு செய்கிறார்கள். மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு தோழரையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.
- பயணத்தின்போது மக்காவிலிருந்து மதீனா நோக்கிச் செல்லும் வழமையான பாதையை விடுத்து வேறொரு பாதையை தேர்ந்தெடுக்கின்றார்கள். அப்பாதைக்கு வழிகாட்டியாக அப்துல்லாஹ் இப்னு உரைகத் எனும் முஸ்லிமல்லாத ஒருவரை நியமித்தார்கள். முஸ்லிம்கள் பயனளிக்கக்கூடிய தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக முஸ்லிமல்லாதவரின் உதவியை பெற்றுக் கொள்ள முடியும் என்ற படிப்பினை இங்கு கிடைக்கிறது.
- அவர்கள் இருவருக்கும் உணவு கொண்டுவந்து கொடுக்கும் பொறுப்பை அஸ்மா பின்த் அபீ பக்ர் ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு வழங்குகின்றார்கள்.
தனது படுக்கையில் தனக்குப் பதிலாக அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் வழித்தோழராக அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் தெரிவு செய்தமை எவ்வளவு பொருத்தமானது என்பதை வரலாற்றை அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
உணவு கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்டவர்கள் வருகின்றபோது அவர்களின் கால் அடையாளங்கள் மணலில் பதியும். அவற்றை வைத்து குறைஷிக் காபிர்கள் அவர்களை வந்தடைந்துவிடக் கூடும் என்று அஞ்சிய தூதர், ஆமிர் இப்னு ஸுஹைரா என்பவரை அடையாளங்களை அழிப்பதற்கு நியமித்தார்கள். அவர் ஆட்டு மந்தையோடு அப்பகுதிக்கு வருவதன் மூலம் அந்த காலடித் தடங்கள் அழிக்கப்பட்டுவிடும். ஆட்டு மந்தையி லிருந்து பால் கறந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடும் அத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட பயணமாகவே ஹிஜ்ரத் அமைந்தது.
உண்மையில் திட்டமிடல் என்பது இஸ்லாமிய நோக்கில் ஈமானுக்கோ, தவக்குலுக்கோ முரணானது அல்ல என்பதை நபியவர்கள் ஹிஜ்ரத்தின்போது எடுத்துக் காண்பித்தார்கள். அல்லாஹ் நாடியிருந்தால் அல்லது நபியவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்திருந்தால் இந்த ஹிஜ்ரத் வெறும் அற்புதமாக நிகழ்ந்திருக்க முடியும். எனினும், தான் முழு மனித சமூகத்துக்கும் முன்மாதிரியாக இருப்பவர் என்ற வகையில் சகலரும் பௌதிகக் காரணிகளைக் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என்ற செய்தியை இங்கு சொல்லியிருக்கின்றார்கள்.
நபியவர்கள் மதீனா பூமியைத் தெரிவு செய்தபோது மதீனத்து சமூகம் பொருத்தமா என்பது பற்றி மிக ஆழமாக சிந்தித்தார்கள். அதனை உறுதி செய்து கொள்வதற்காக இரண்டு உடன்படிக்கைகளை (முதலாம், இரண்டாம் அகபா உடன்படிக்கைகள்) செய்தார்கள். மதீனாவின் முக்கியமான இரு கோத்திரங்களான அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரங்களுடன் இவ்வுடன்படிக்கையைச் செய்தார்கள். அவ்வுடன்படிக்கையில் இவ்வாறு சொன்னார்கள்.
“நான் மதீனாவுக்கு வந்தால் எனக்கு நீங்கள் அபயமளிக்க வேண்டும் எனக்கு முழுமையான பாதுகாப்பை வழங்க வேண்டும் அதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.”
எனவே, இஸ்லாம் சொல்கின்ற தவக்குல் ஈமான்-யகீன்-திட்டமிடல் ஆகியவற்றுக்கிடையில் எத்தகைய முரண்பாடும் இல்லை என்பதை மிக அழகாக, தெளிவாகச் சொல்கின்ற ஒரு நிகழ்வாக ஹிஜ்ரத்தை குறிப்பிட முடியும். இன்றைய முஸ்லிம் உம்மத்தின் அவல நிலைக்கான காரணங்களுள் மிக முக்கியமானது முஸ்லிம் சமூகத்தில் தனி மனித, குடும்ப, சமூக வாழ்க்கையில் திட்டமிடல் இல்லாமையே.
திட்டமிடல் என்பது நபியவர்களின் ஸுன்னா. அனைத்து வகையான பௌதிகக் காரணிகளையும் கவனத்திற் கொண்டு எல்லா வகையான முன் ஆயத்தங்களையும் மேற்கொண்டு விட்டு விளைவை, இறுதி முடிவை அல்லாஹ்விடம் விடுகின்ற மனோநிலைதான் தவக்குல். முடிவு தனக்குச் சாதகமாக அமைந்தாலும் பாதகமாக அமைந்தாலும் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்ற மனோநிலையை ஷதவக்குல்| குறித்து நிற்கிறது. அல்லாஹ் போதுமானவன், அவன் பார்த்துக் கொள்வான் என்று கருதி பௌதிகக் காரணிகள் அனைத்தையும் புறக்கணிக்கின்ற மனோ நிலையை ஷதவாக்குல்| எனும் இஸ்லாத்துக்கு முரணான நிலை என இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஹிஜ்ரத் நிகழ்வில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தவக்குலை மிகச் சரியாக பிரயோகித்துக் காண்பித்துள்ளார்கள்.
ஹிஜ்ரத்துக்கான நபியவர்களின் திட்டமிடல் மதீனாவை மாத்திரம் இலக்காகக் கொண்டதாக இருக்கவில்லை. அதற்கு முன்னர் அபிசீனியாவுக்கு முதல் ஹிஜ்ரத் மேற் கொள்ளப்பட்டது. அந்த ஹிஜ்ரத்தின்போது நபியவர்கள் புவியியல், அரசியல், சமயக் கண்ணோட்டத்தில் மிகத் துல்லியமாக திட்டம் தீட்டினார்கள். அரபுத் தீபகற்பத்தின் எந்தவோர் இடத்தையும் நபியவர்கள் முதல் ஹிஜ்ராவுக் காகத் தேர்ந்தெடுக்கவில்லை. ஏனெனில், அரபுத் தீபகற்பத்தின் எல்லாப் பகுதியிலும் குறைஷிகளின் செல்வாக்கு இருந்தது. அதன் மூலம் முஸ்லிம்களுக்கு ஆபத்து விளையும் என்பதை கவனத்திற் கொண்டே அபீசீனியாவை தெரிவு செய்தார்கள்.
மறுபக்கம் பாரசீக, ரோம சாம்ராஜ்யங்கள் அல்லது அவற்றின் ஆதிக்கத்தின் கீழிருந்த பிரதேசங்களுக்கும் முதல் ஹிஜ்ரத்தை மேற்கொள்ள நபியவர்கள் அனுமதிக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது, ரோம, பாரசீகர்களை நம்ப முடியாமை. இரண்டாவது, அந்தக் காலத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட இரு வல்லரசுகளாக அவை இருந்தன. அவர்கள் இப்புதிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்களை ஒருபோதும் வரவேற்கப் போவதில்லை.
சீனா, இந்தியா போன்ற பிரதேசங்களையும் முதல் ஹிஜ்ரத்துக்காக நபியவர்கள் தெரிவு செய்யவில்லை. அதற்குப் பிரதான காரணம், முஸ்லிம்கள் அந்தளவு தூரம் போய் விட்டால் சிலபோது ஹிஜ்ரத்துடைய நோக்கமே பிழைத்து காலப்போக்கில் அவர்களுடனான உறவும் துண்டிக்கப்பட்டு தீனை இழந்துவிடும் ஆபத்து இருந்தது.
அபீசீனியா நடுத்தரமான தூரத்தில் அமைந்திருந்தது. அத்துடன் அபிசீனியாவுக்கும் அரபுத் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு கடலுமிருந்தது. எனவே, குறைஷிக் காபிர்களால் இலகுவாக அங்கு செல்ல முடியாது. சமய ரீதியாகவும் அபீசீனியா மிகவும் பொருத்தமான தளமாக அமைந்தது. அங்குள்ள மக்கள் கிறிஸ்தவர்கள். அல்லாஹுத் தஆலா கிறிஸ்தவர்களை “முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்” எனச் சொல்கின்றான்.
அது மட்டுமல்ல, அன்றைய அபிசீனிய ஆட்சியாளர் அஹ்லுல் கிதாபினரைச் சேர்ந்தவர் நீதியான ஆட்சியாளர் என்பதும் சாதகமாக அமைந்தன. அந்த அபிசீனிய அரசனைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடும்போது, “அபிசீனிய அரசர் நிச்சயமாக உங்களைக் கவனிப்பார் உங்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்க மாட்டார் என்று நம்புகின்றேன். எனவே நீங்கள் செல்லலாம்” என்றார்கள்