– தஞ்சை மீரா
வாழ்க்கை என்பதே பிரச்னைகள் நிறைந்ததுதான். ஆனால். அதனை சரியான வகையில் இறையுதவியுடன் வெற்றி கொள்வதில்தான் வாழ்வின் சூட்சுமம் அடங்கி இருக்கின்றது.
1. பிரச்சனைகள் வந்த பின் தீர்வு காண்பது சிறந்த வழியா? வருவதற்கு முன் தற்காப்பு செய்து கொள்வது சிறந்த வழியா?
2. எங்கோ நடக்கும் விபத்துக்கு நாம் ஒரு சில நிமிடங்கள் வருத்தப்படுவோம். அந்த விபத்தில் நம் உறவினருக்கு ஆபத்து என்றால் ஒரு சில மணி நேரம் வருத்தப்படுவோம். அதுவே நெருங்கிய சொந்தமாக அல்லது இரத்த சொந்தமாக இருந்தால் பல மணி நேரம் வருத்தப் படுவோம். அதுவே நாமாக இருந்தால் வாழ் நாள் முழுதும் வருத்தப் படுவோம். இதுதான் உலகம்.
3. எங்கோ பிரச்சனை என்று நாம் கண்டுகாமல் வாழ்ந்தால் அந்த பிரச்சனை மிக விரைவிலே வந்து நம் கதவை தட்டாது என்பதற்கு என்ன ஆதாரம் ?
4. ஒரு விபத்துக்கோ அல்லது கலவரத்துக்கோ இவர்கள் கவிதை எழுதுகிறார்களே தவிர…அதை ஒழிக்க அல்லது அளிக்க எதாவத நடவடிக்கை எடுக்கிறார்களா என்றால் இல்லை.
5. பசித்திருக்கும் குழந்தைகளை பார்த்தும், அனாதை குழந்தைகளைப் பார்த்தும், திருமணமாகாத இளம் கண்ணியர்களை பார்த்தும் இன்னும் இதுபோல் அதிகம் பார்த்தும் வர்களுக்காக எதாவது செய்து இருக்கிறார்களா என்றால் இல்லை. ஆனால் வார்த்தைகளிலோ அல்லது எழுத்தினாலோ தன் வருத்தத்தை மட்டும் சொல்லுவார்கள் இந்த மனிதர்கள். இவர்களின் இந்த வருத்தம் அவர்களுக்கு என்ன பயனைத் தரும்.
6. நாட்டில் கடுமையான சட்டம் இல்லை. நியாமான காவல்துறையோ அல்லது நியாமான அரசியல் தலைவர்களோ இல்லை. இதனால் பாதிப்பு எல்லோருக்கும்தான். ஒரு குறிப்பிட்ட சிறுபாண்மையினர் தினம் தினம் நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
7. எங்கோ எவனோ செய்த தவறுக்காக உன்னைக் கொண்டு காவலில் வைத்து தண்டித்து உன்னை அந்த தவறை செய்தவாக ஒத்துக்க செய்தால் நீ என்ன செய்வாய். விதி என்று இருந்திடுவாயா? இப்பொழுது நம் நாட்டில் நடைபெறும் செயல் இது.
8. சிறுபாண்மை சமுதாயத்தில் அவர்களாக முன்னேறுவதில்லை என்பதைவிட முன்னேறவிட மாட்டுகிறார்கள் என்பதே உண்மை.
9. கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் எந்த ஒரு சலுகையும் இல்லை. அதற்கான விழிப்புணர்வும் இந்த சமுதாயத்திற்கு இல்லை.
10. படித்தவர்களும், மார்க்கம் பற்றி தெரிந்தவர்களும் தான் மட்டும் நல்லா இருந்தால் போதும் என்று சுயநலகாரர்களாக இருக்கிறார்கள். உலக நன்மைக்காக ஒருத்தருக்கு ஒருத்தர் நடித்துக் கொண்டுதான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். மாமியார் உடைத்தால் மண் சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டி என்பது போலதான் உலகம் சென்றுக் கொண்டிருக்கிறது.
11. நமக்கும் நம் குடும்பத்திற்கும் நம் சமுதாயத்திற்க்கும் நம் நாட்டில் சுதந்திரம் இருக்கா? பாதுகாப்பு இருக்கா? இன்னும் அது எந்த நிலையை போய்ச் சேரும் என்பது ஒரு கேள்வி குறியாகத்தான் இருந்து வருகிறது.
12. சகோதர சகோதரிகளே இன்னும் எத்தனை எத்தனை கஷ்டங்கள் நமக்குள்ளே. கடமைக்காக வாழாமல் வாழ்வின் அர்த்தம் புரிது வாழுங்கள்.
13. நம் சமுதாயத்தினருக்கு நல்ல விழிப்புணர்வு கொடுங்கள். மார்கம் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் குடும்பத்தினருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். சமுதாய நிலைபாடுகளையும் குடும்பத்தினர்கள் அனைவரும் தெரிந்துக் கொள்ளச் செய்யுங்கள். நண்பர்களிடத்திலும் தேவயற்ற பேச்சுக்களை குறைத்துக் கொண்டு பயனுள்ள பேச்சுக்களை பேசுவதே மிகவும் சிறந்தது என நான் நினைக்கிறேன்.
14. எல்லா மக்களையும் நேசியுங்கள். ஆனால் ஒரு சில சமுதாய மக்கள் மட்டும்தான் இன்னும் வாழ்வதற்க்கு வழி தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களை வாழச் செய்யுங்கள்.