சுவனத்தென்றல்
படைத்துப் பரிபாலிப்பவன் அவன் மட்டுமே.,!
2:30 அந்த நேரத்தை நினைவுகூரும். உம் இறைவன், மலக்கு (வானவர்)களை நோக்கி, “நான் ஒரு பிரதிநிதியை (கலீஃபாவை) பூமியில் ஏற்படுத்தப் போகின்றேன்” என்று கூறினான். (அப்போது) அவர்கள், “பூமியில், அதன் ஒழுங்கமைப்பைச் சீர்குலைத்து, மேலும் இரத்தஞ் சிந்தக் கூடியவரையா அதில் (பிரதிநிதியாக) நீ ஏற்படுத்தப் போகின்றாய்? நாங்கள்தாம் உன்னைப் புகழ்ந்து துதிபாடி, உன் தூய்மையைப் போற்றிக் கொண்டு இருக்கின்றோமே!” என வினவினார்கள். அதற்கு இறைவன் கூறினான்: “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்.” 2:31 பின்னர் அல்லாஹ் எல்லாப் பொருள்களின் பெயர்களையும் ஆதத்துக்குக் கற்றுக் கொடுத்தான். பிறகு அவற்றை வானவர்களின் முன் வைத்து “(ஒரு பிரதிநிதியை நியமித்தால் பூமியில் ஒழுங்கமைப்பு சீர்குலையும் எனும்) உங்கள் கருத்து சரியானால், இவற்றின் பெயர்களைச் சற்று சொல்லுங்கள்” எனக் கூறினான். 2:32 “குறை ஏதுமில்லாத தூயவன் நீயே! நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது. உண்மையில் நீ மட்டுமே பேரறிவும் மிக்க ஞானமும் உடையவன்!” என்று அவர்கள் கூறினார்கள். 2:33 (பின்னர்) இறைவன் கூறினான்: “ஆதமே! இவற்றின் பெயர்களை நீர் அவர்களுக்கு அறிவியும்!” அவர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவித்ததும், “வானங்களிலும், பூமியிலும் (உங்களுக்கு) மறைந்திருக்கக்கூடிய (உண்மைகள்) அனைத்தையும் நிச்சயமாக நான் நன்கறிவேன். மேலும் நீங்கள் வெளிப்படுத்தக்கூடியவற்றையும், மறைத்துக் கொண்டிருப்பவற்றையும் நான் நன்கறிவேன் என்று உங்களிடம் நான் கூறவில்லையா?” எனக் கேட்டான்.
தவ்ஹீது ருபூபிய்யா என்பது: –
-
அனைத்துப் பொருட்களையும் அவைகள் ஒன்றுமே இல்லாமலிருந்தபோது உருவாக்கியவன் அல்லாஹ்வே
-
அவனே அனைத்துப் படைப்புகளுக்கும் அவைகளிடமிருந்து எந்தவித தேவைகளுமில்லாமல் உணவளித்து பாதுகாத்து வருபவன்
-
அவனே இந்தப் பேரண்டத்திற்கும் மற்றும் அதிலுள்ள அனைவருக்கும் ஒரே இறைவன்
-
அவனுடைய ஆட்சியதிகாரத்தில் யாருக்கும் எவ்வித பங்குமில்லை
-
அனைத்துப் பொருட்களுமே அல்லாஹ்வின் வல்லமையைக் கொண்டே இயங்குகிறது
-
அவன் அனுமதியில்லாமல் எதுவும் நடக்காது.
என்பன போன்ற அடிப்படைக் கொள்கையைக் கொண்டதாகும். அரபியில் படைத்துப் பரிபாலிக்கும் தன்மைக்கு “ருபூபிய்யா” எனப்படும். இது “ரப்” என்ற மூலச் சொல்லில் இருந்து உருவானது.
தவ்ஹீது ருபூபிய்யாவுக்கான குர்ஆன் ஆதாரங்கள்: –
“அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்” (அல்குர்ஆன் 39:62)
“உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்” (அல்குர்ஆன் 37:96)
“(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல – அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்” (அல்குர்ஆன் 8:17)
நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் – அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 64:11)
Arabic
English
Spanish
Russian
Romanian
Hindi
Tagalog
Bengali
Sinhalese
Nepali

