நவீன பெண்சு தந்தரங்கள்.., நையப்புடைக்கும் தரித்திரங்கள்..!

-அலாவுதீன்

பள்ளியிலே ஆரம்பிக்கிறது பெண் குழந்தைகளின் சுதந்திரம்,விழியும் , மனதும் கூசும் அருவருப்பான பாடலுக்கு ஒரு ஆட்டம் கேட்டால் பள்ளி இறுதியாண்டு கொண்டாட்டம்..!

பள்ளியிலே ஆரம்பிக்கிறது பெண் குழந்தைகளின் சுதந்திரம்,விழியும் , மனதும் கூசும் அருவருப்பான பாடலுக்கு ஒரு ஆட்டம் கேட்டால் பள்ளி இறுதியாண்டு கொண்டாட்டம்..!

வீன பெண்சுதந்தரங்கள்.., நையப்புடைக்கும் தரித்திரங்கள்..!

நிறையான ஏகஇறைசட்டங்கள் நித்தம் நிறையும் மதிப்புக்கள்..!!

பள்ளியிலே ஆரம்பிக்கிறது
பெண் குழந்தைகளின் சுதந்திரம்,
விழியும் , மனதும் கூசும் அருவருப்பான
பாடலுக்கு ஒரு ஆட்டம்
கேட்டால் பள்ளி இறுதியாண்டு
கொண்டாட்டம்..!

மாநிலத்தில் அழகி போட்டி
உலகளவில் ஒரு அழகி போட்டி
பெண்ணின் அங்கங்களை அளந்து
ஒரு பூனை நடை
உடலை மதிப்பிட்டு அளந்து மதிப்பெண் அளிக்க
வக்கிரம் ஆண்கள் படை

கார் விளம்பரமா…, கூப்பிடு காரிகையை
ஆடவர் உபயோக அம்சமா அழைத்து வா அனங்கையை
இன்னபிற இங்கிதமில்லா அம்சங்களா
இழுத்து வா இளநங்கையை
ஒய்யாரமாய் நிற்கவை அரைகுறை ஆடையுடன்
கூடவே ஓர் ஆணுடன் ..!

கல்லூரியா ஆணுடன் அவளையும்யும்
கலந்து படிக்க வை
பாய் – பிரண்ட் கேர்ள் – பிரண்ட்
இரண்டும் இல்லையென்றால்
நீ ஒரு வெற்று பிராண்ட்
இந்த உலகில்..

சிவப்பு விளக்குகள் என்ற அடையாளங்கள்
அரசே அங்கீகாரம் கொடுத்து நடத்தும்
அசிங்கங்களின் கூடார ங்கள்
மதிப்பளிக்க வேண்டிய மாதரை
மதிப்பளிக்கச் செய்யும்
உலகத்தின் அரசாங்கங்கள்

தலைவிரி கோலத்துடன் செய்தி வாசிப்பு
சிறிதும் இல்லை பயிர்ப்பு
ஆடையில் கஞசத்தனம் நாணமின்மையில் தாராளம்
பெண்ணையே மணம் புரியும் பெண்
யாரோடும் எப்படியும் வாழ்வேன்
நவீன நரகில் பெண்கள்

இதுதான் சுதந்தரமாம்

மணமுடிக்க மஹர் எனும் உரிமை
பிடித்தவனை மணமுடிக்க உரிமை
நியாயமாகப் பிடிக்காத மணவாளனை
விட்டொழிப்பதில் உரிமை
சொத்தில் உரிமை..,
வாழ, பேச, படிக்க, வியாபாரம் செய்ய உரிமை

பெண்ணுக்கு மனிதன் வழங்கிய சுதந்தரம்
சூன்யமாகிப் போன இருண்டகால அலங்கோலம்
படைத்த ஏகஇறைவன் வழங்கிய பெண் சுதந்தரம்
காரிருள் காரிகையின் வாழ்வை
உய்விக்க வந்த கார்காலம்..!

சிந்தியுங்கள் இனி எது உண்மை சுதந்தரம்..!

Related Post