ஏகஇறைவனின் வார்த்தைகளில் நடுநிலை..!
– மு.அ அப்துல் முஸவ்விர்
நாம் பயணிக்கும் வாழ்க்கைப் பாதையின் வரைபடங்கள். விதிமுறைகள், தேவையான வாகனம், அதனை ஓட்டுவதற்கான சரியான கற்றல்கள், நடத்திச் செல்வதற்கான ஓட்டுநர் உரிமம், பாதை காட்டுவதற்கான சரியானதொரு நபர் என்று அனைத்து விதமான அம்சங்களையும் உள்ளடக்கிய வெற்றிகரமானதொரு திட்ட வரைவை அதனை வடிவமைத்த படைப்பாளியால்தானே தரமுடியும்…? அத்கையதொரு அம்சத்துக்கு தகுதியான ஒருவனாக இருக்கக்கூடிய படைத்த ஏகஇறைவன் ஒருவனால் மட்டும்தானே முடியும்..?
அத்தகைய இறைவன் தந்த வாழ்க்கைத் திட்டமே திருக் குர்ஆன் எனும் அழியா வேதமாக பரிணமிக்கின்றது. அந்நத திட்ட வரைவில், இறைவனே சுயமாக ஒவ்வொரு மனிதனிடமும் இந்த திட்டமுறையை விவரித்து வாழ்க்கைப் பயணநிலை குறித்து விரிவாகப் பேசுகின்றான். ஆத்தகைய திருக் குர்ஆனில், இந்த நடுநிலை எனும் முக்கிய அம்சம் குறித்து அழகாய் விவரிக்கின்றான்.
இந்த வாழ்க்கைத் திட்டத்தை முன்னிறுத்தி பயணிக்கக்கூடிய ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரை, அதனைப் பின்பற்றும் சமூகமாக இருக்கக்கூடிய உன்னத மக்களை நடுநிலை சமுதாயம் என பிரகடனப்படுத்துகின்றான். அவர்களைப் படைத்திருப்பதே நடுநிலையில் நின்று செயல்படக்கூடிய சமுதாயமாகத்தான் என சான்று பனருகின்றான்:
மேலும் இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் ‘’ சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம் நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாயும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராயும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக! திருக் குர்ஆன் 2:143
இந்த இறைவேதம் வழங்கப்பட்டு அகில உலகத்துக்கெல்லாம் இறைத்தூதராக அனுப்பப்பட்ட அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய வாழக்கையில், இந்த திருக் குர்ஆன் வசன விளக்கம் குறித்து அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.
முஹம்மத் (ஸல்) அவர்களுடைய வாழக்கை வழிமுறை குறித்த தொகுப்பாக இருக்கும், புகாரி எனும் நபிமொழிக் கிரந்தம் இவ்வாறு பேசுகின்றது:
மீண்டும் உயிர்த்தெழுப்பப்படும் மறுமை நாளில், இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள், என் இறைவனே! “ அப்போது இறைவன் வினவுவான் “நீர் எனது செய்தியை எத்தி வைத்தீரா?” அப்போது அவர் கூறுவார்: “ஆம்!” உடனே இறைவன் அவருடைய சமூகத்தாரைப் பார்த்து வினவுவான்: அவர் உங்களிடத்தில் செய்தியை சேர்ப்பபித்தாரா?”அவர்கள் கூறுவார்கள்: எச்சரிக்கை செய்பவர் எவரும் எம்மிடத்தில் வரவில்லை.அப்போது இறைவன் நூஹ் (அலை) அவர்களைப் பார்த்து உமது கூற்றுக்கு சாட்சியாக இருப்பவர் யார்? அவர் பதிலளிப்பார்: “முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்தம் சமூகத்தாரும்..! அதன் மூலம், அவர்கள் (முஸ்லிம்கள்) அவருடைய செய்தியை உண்மைப்படுத்தி சாட்சி பகருவார்கள்! மேலும், அண்ணலார் (ஸல்) அவர்களும் நமக்கு சாட்சியாக இருப்பார்கள். இந்த விளக்கமே இங்கு தரப்படுகின்றது.
நபிமொழிக் கலைஞர் அத்-தப்ரீ அவர்களின் கருத்துப்படி, இந்த வசனத்தில் கூறப்படும், வசத்தன் எனும் நடுநிலை, என்னைப் பொருத்த வரை வீட்டின் இரு மூலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை அதாவது வீட்டின் நடுப்பகுதியைப் போன்றதாகும். அதாவது, இங்கு இறைவன், மார்க்கத்தில் நடுநிலையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டம் என்பதை அறிவிக்கும் வண்ணம் இவ்வாறு கூறியுள்ளான் என்றே கருதுகின்றேன். (விளக்கமாகக் கூறுவதாயின்) ஏகத்துவைக் கொள்ளைகயையும் விட்டுப் பிறழ்ந்து, தமது தூதராகிய ஈஸா (அலை) அவர்களை, உயர்த்திப் பிடிக்கின்றோம் எனும் பெயரில், இறுதியில் அவரையே கடவுளாக்கிக் கொண்ட வகையிலான தீவிரத்தனமோ அல்லது யூதர்கள் தமது இறைமார்க்கத்தைப் புறக்கணித்து, இறைவனுடைய வேதத்தைப் புரட்டி எழுதி, இறைத்தூதர்களைக் கொன்று மேலும் இறைவனையும் மறுதலித்தது போன்று உதாசீனமான அலட்சியப் போக்கும் இன்றி, அல்லாஹ் முஸ்லிம்களை தீவிரத்துக்கும் அலட்சியத்துக்கும் இடையிலான ஒரு நடுநிலைத்தன்மையைக் காண்ட சமூகமாகப் படைத்த சான்று பகர்ந்துவிட்டான்..!
இவாவாறு திருக் குர்ஆனின் வௌ;வேறு இடங்களில், பல்வேறு அம்சங்களை முன்னிறுத்தி இறைவன் நடுநிலையைக் குறித்து அழகாய் கட்டளை பிறப்பிக்கின்றான்:
உதாரணத்துக்கு, தனக்குரிய கடமைகளை தனது அடியான் நிறைவேற்றும்போது, உண்மையில் அவனுக்கு இயலாதொரு நிலை ஏற்படும்போது, அதனை எவ்வாறு கடினமோ அல்லது புறக்கணிப்போ இல்லாத பட்சத்தில் நிறைவேற்ற முடியுதம் என்று கோடி காட்டுகின்றான்.
எடுத்துக்காட்டாக, ஒரு முஸ்லிம் உண்மையிலேயே மனதார இறைவன் மீது சத்தியம் செய்த கூறிய அம்சத்தை நிறைவேற்ற இயலாதவனாகும்பட்சத்தில், அதற்குப் பரிகாரமாக ஒரு சில அம்சங்களை அவனுடைய சக்திக்கு ஏற்றவாறே அவன் மீத சுமக்கின்றான்..! இங்கு நிறைவேற்றியே ஆக வேண்டும் எனும் கட்டாயத் தீவிரமோ அல்லது அதனை அவன் புறக்கணித்துவிட்டால் ஏதும் இல்லை எனும் அலட்சியப் புறக்கணிப்போ இல்லை..!
நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிப்பதில்லை. ஆயினும் நீங்கள் உறுதிப்படுத்திச் செய்த சத்தியங்களுக்காக (அவற்றை நீங்கள் முறித்துவிட்டால்) உங்களை அவன் நிச்சயம் தண்டிப்பான். (முறித்துவிட்ட) சத்தியத்திற்கான குற்றப்பரிகாரம் (இதுதான்): நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்கு அளிக்கின்ற உணவுகளில் நடுத்தரமான வகையிலிருந்து பத்து வறியவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆடைகள் வழங்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஆனால் (இவற்றில்) எதற்கும் சக்தி பெறாதவர்கள் மூன்று நாட்களுக்கு நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் செய்த சத்தியங்களை முறித்து விட்டால், இதுதான் அவற்றுக்குரிய குற்றப்பரிகாரமாகும். எனவே உங்கள் சத்தியங்களை (முறித்துவிடாமல்) பேணுங்கள்! இவ்வாறு தன்னுடைய சட்ட திட்டங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவாக்குகின்றான்; நீங்கள் நன்றி செலுத்துபவராய்த் திகழக் கூடும் என்பதற்காக! திருக் குர்ஆன் 5:189
இவ்வாறாக, இறைவன் தனது அடியானுடன் பேசும் திருக் குர்ஆனிய வார்த்தைகளில் ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு செயல்பாட்டுசார் அம்சங்களிலும் இந்த நடுநிலை பேணப்படுகின்றது எனலாம்.
அவை ஒவ்வொன்றும் இறைவனுக்குரிய அதிபதி எனும் மதிப்பை குறைத்திடா வண்ணமும், அவனுடைய அடியானாகிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் எந்தவொரு கடினத்தன்மையோ, அவனுடைய கடமையில் அலட்சியமோ இல்லாத வகையில் நடுநிலைத்தனத்துடன் அழகாய் அமைகின்றன.
அத்தகைய நடுநிலை மார்க்கமே இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியாக மிளிர்கின்றது.