-மு
.அ. அப்துல் முஸவ்விர்
இப்படியும் ஒரு பெண்..!
‘மனிதர்கள் அவர்களுக்கு என்ன சொன்னீர்க்கள் என்பதை மறந்து விடுவார்கள், என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்து விடுவார்கள், ஆனால் எவற்றை அவர்களுடைய உள்ளங்களில் பதித்துவிட்டீர்களோ அவற்றை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்..!’
விமானத்தில் பெண் ஒருத்தி, ஆப்ரிக்கர் ஒருவரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத்துவேஷியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து நீக்ரோவின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும் தனக்குப் பிறிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால் விமானம் முற்றிலுமாக நிரம்பி விட்டது என்றும், முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித் தருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண். இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த பயணிகள், குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி,போதாக்குறைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யப்போவதை இட்டும் கடிந்து கொண்டனர்.
அந்த அப்பாவி ஆபிரிக்கரோ நடக்கும் நிகழ்வால் அதிர்வுற்றிருப்பினும் அமைதியாக இருப்பதற்கு முடிவு செய்து கொண்டார். பெண்ணோ முதல் வகுப்புக்கு செல்லப்போகும் மகிழ்ச்சியில் பணிப்பெண்ணின் வருகையை எத்ர்பார்த்திருந்தாள்.
சில நிமிடங்களுக்குப் பின் திரும்பிய பணிப்பெண் அந்த இனத்துவேஷப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டவளாக, ‘முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது, இந்த விவரத்தை அறிந்து கொள்வதற்கு சற்று நேரம் செலவாகியது, அதன் பிறகு இடமாற்றத்திற்கு விமானியிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது, விமானியும் ‘எமது விமானத்தில் எந்த ஒருவரும் தொந்தரவு தரும் ஒருவரின் அருகில் அமர வேண்டிய கட்டாயமில்லை’ என்று கூறி விட்டு இடமாற்றத்திற்கு அனுமதி தந்தார்’ என்று கூறி முடித்தாள்.
சக பயணிகளுக்கு அங்கு நடப்பவற்றை உண்மையில் நம்ப முடியவில்லை. குறித்த பெண்ணோ இறுமாப்பில் ஒரு அசட்டுச்சிரிப்போடு முதல் வகுப்பிற்குச் செல்வதற்காக தனது இடத்தை விட்டு எழத் தயாரானாள்.
சரியாக அவ்வேளை பணிப்பெண் நீக்ரோ மனிதனைப் பார்த்து, ‘சார், தங்களுக்காக முதல் வகுப்பில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்வதற்காக தயாராகுங்கள், விமானியவர்கள், எமது நிறுவனத்தின் சார்பாக உங்களிடமிருந்து, இவ்வாறான விரும்பத்தகாத நிகழ்வுக்குக் காரணமான ஒருவரின் அருகில் அமர நிர்ப்பந்திக்கப்பட்டமைக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றார்.’ என்று கூறி அந்த மனிதரிடம் தன்னைப் பின்தொடருமாக கேட்டுக் கொண்டாள். குறித்த பெண்ணோ அசடுவழிய பணிப்பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள். சக பயணிகள் பிரச்னையை சமயோசிதமாக, அழகிய முறையில் தீர்த்து வைத்த பணிப் பெண்ணை பாராட்டினர்.
அந்த வருடம் குறித்த பணிப்பெண்ணும் தலைமை விமானியும் நிறுவனத்தின் அதி உயர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அத்துடன் கீழ் வரும் வாசகம் நிறுவனத்தின் அணைத்து அலுவலகங்களுக்கும் ஊழியர்களின் பார்வைக்காகவென்று அனுப்பி வைக்கப்பட்டது.
‘மனிதர்கள் அவர்களுக்கு என்ன சொன்னீர்க்கள் என்பதை மறந்து விடுவார்கள், என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்து விடுவார்கள், ஆனால் எவற்றை அவர்களுடைய உள்ளங்களில் பதித்துவிட்டீர்களோ அவற்றை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்..!’
அப்படியும் ஒரு பெண்..!
மனிதர்கள் பலவிதம்..! ஒவ்வொருவரும் ஒருவிதம்..!பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது போய்., பெண்ணே பேயாகுவதும் இங்கு நடக்கும்..!
கேரளா,திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அமிர்தா.இவர் கராத்தேவில் நன்கு பயிற்சிபெற்றவர்.சிலதினங்களுக்கு முன்பு இவர் தனது பெற்றோருடன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்றார்.அப்போது அங்கு கார் பார்க்கிங் செய்வதில் அவருடைய பெற்றோருக்கும் இரு இளைஞர்களையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அமிர்தா அந்த இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.இதில் ஒருவரது மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியுள்ளது.காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த பிரச்னை விவகாரமாக உருவெடுக்க அமிர்தா உடனடியாக காவல்நிலையம் சென்று தன்னை மூன்றுபேர் பாலியல் தொந்தரவுசெய்ததாகவும் அதற்க்கு எதிர்ப்புதெரிவித்தபோது அவர்கள் தன்னுடைய பெற்றோரை ஆபாசமாக திட்டியதாகவும் தற்க்காப்பிற்க்காக இருவரையும் தாக்கியதாகவும் புகார் செய்தார்.
வழக்கம்போலவே ஊடகங்களும் உண்மைநிலை அறியாமல் சகட்டுமேனிக்கு அந்த பெண்ணை ஆதரித்து அவரை இரும்புப்பெண்மணியாக சித்தரித்தும் இளைஞர்களை காமகொடூரனாகவும் சித்தரித்தும் செய்திகள் வெளியிட்டன.விளைவு இந்த இரு இளைஞர்களும் ஓட்டுனராக வேலைசெய்துவந்த அரசு பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை விசாரிக்ககோரி அமிர்தாவிற்கு எதிராக இளைஞர்கள் காவல்நிலையத்தில் மேல்முறையீடு செய்ய இதனை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது.அந்தக்குழு அளித்த அறிக்கையில் தவறு முழுக்கமுழுக்க அமிர்தா தரப்பில் உள்ளதாகவும் அவர் தகுந்த காரணம் இல்லாமல் தன்னுடைய கராத்தேபயிற்சியை அந்த இளைஞர்கள் மீது காண்பித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை விசாரித்த நீதிபதி அமிர்தாமீது வழக்கு பதிவு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார்.ஆனால் இந்த விஷயத்தையும் ஊடகங்கள் ஜோடனைசெய்து நீதிபதியை பெண் அடக்குமுறையை ஆதரிப்பவர் என்று விமர்சனம் செய்தது. விளைவு நீதிபதியும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.ஆனால் சில ஊடகங்கள் மட்டும் உண்மைநிலையை வெளியிட்டுவருகின்றன.
ஊடகங்களின் இந்த விஷம செயலால் பாவம் ஒருபக்கம் பழி ஒரு பக்கம் என்று செய்துவந்த அரசு வேலையும்ப்போய்,காமக்கொடூரன் என்ற பெயரும் வாங்கி அந்த இளைஞர்கள் அவதிபட்டுவருகின்றனர்..!
மனிதர்கள் பலவிதம்..! ஒவ்வொருவரும் ஒருவிதம்..!பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது போய்., பெண்ணே பேயாகுவதும் இங்கு நடக்கும்..!
நன்றி –புகாரி