– மு.அ. அப்துல் முஸவ்விர்
அலிமியான் இந்தியாவின் சமகாலத்தில் வாழ்ந்த ஒரு மிகப்பெரும் முஜ்தஹித்.இந்தியாவில் வாழ்ந்த இஸ்லாமிய பேரறிஞர்களில் தனக்கென்று அரபுலகிலும்இ மற்ற நாடுகளிலும் அடைக்க முடியாத ஒரு இடத்தை ஏற்படுத்திசென்ற மாமேதை அவர்களைப் பற்றி சில அறிவுப்பகிர்வுகள் இங்கே..!
அனைவராலும் ‘ அலிமியான் ‘ என்று அன்புடன் அழைக்கப்பட்ட அபுல் ஹஸன் நத்வி அவர்கள், ஹிஜ்ரி 1333 முஹர்ரம் ஆறாம் நாள் (1914 நவம்பர் 23) அப்துல் ஹை-கைருன் நிஸா தம்பதிகளுக்கு உத்திரப்பிரதேசத்திலுள்ள ராய் பரேலி என்ற ஊருக்கு அருகில் உள்ள தக்கிஹ் எனும் கிராமத்தில் பிறந்தார்.
அபுல் ஹஸன் நத்வியின் பரம்பரை இமாம் ஹஸன் (ரலி) பேரரான அப்துல்லாஹ் அல் மஹ்ழ் அவர்களின் மகன் முஹம்மத் என்பவரைச் சென்றடைகிறது. ஹஸனீ என்ற அடைமொழி இவரது பரம்பரையில் தொடர்ந்து வருகின்றது.
தனது பத்தாவது வயதில் தந்தை மரணிக்கவே தாயினதும் மூத்த சகோதரர் அப்துல் அலி அல் ஹஸனியினதும் மேற்பார்வையின் கீழ் சிறந்த ஆளுமைப் பண்புகளுடன் வளர்ந்தார்.
தந்தைக்குத் தந்தையாக எந்தக் குறையுமின்றி தனயன் தன்னைப் பேணிவளர்த்ததை நன்றியுணர்வோடு அலிமியான் தனது நாட்குறிப்பில் பதிந்துள்ளார்கள்.நவீன இஸ்லாமிய இயக்கங்களுடன் அலிமியான் அவர்களுக்கு நீண்ட பெரும் அனுபவங்கள் இருந்தன.அனைத்து இயக்கத்தவர்களிடையே மிகப்பெரும் மதிப்பை பெற்றிருந்தார்கள்.இதற்கு அவரின் நடுநிலை கடைபிடிப்பும் இயக்கம் சாராத சிந்தனையுமே காரணமாகும்.நாம் வாழும் இந்திய தேசத்தில் இஸ்லாமிய பேரறிஞர்கள் இடையே மறுக்க முடியாத இன்னும் மறக்க முடியாத இடத்தில் அலிமியான அவர்கள் இருந்தார்கள்.
அன்னார் உலகில் அறியப்பட காரணமாக இருந்த அன்னாரின் அரபி புத்தகம் ‘ இஸ்லாமிய வீழ்ச்சியால் உலகம் இழந்தது என்ன? ஒரு அற்புதமான படைப்பாகும்.இஸ்லாமிய உலகின் நிகழ்கால நிலை குறித்து மிகுந்த கவனம் செலுத்தியதின் விளைவால் விழைந்து இந்த புத்தகமாகும். இது இன்று வரை இஸ்லாமிய உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்து இஸ்லாமிய எழுச்சியில் அலைகளை எழுப்பிய கொண்டிருக்கும் ஒரு நூலாகும். இந்நூலை மேற்கோள் காட்டாத எந்தவொரு இஸ்லாமிய அறிஞரும் கிடையாது என்ற அளவுக்கு நவீன இஸ்லாமிய எழுச்சியில் சிந்தனைப் பரப்பில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.அரபுலகில் புகழ்பெற்ற எந்த கல்லூரியும் பல்கலைகழகங்களும் இதை பாடத்தில் ஏற்காதது இல்லை என்ற அளவிற்கு அனைத்து கல்வி ஸ்தாபனங்களிலும் இந்நூல் இடம்பெற்றுள்ளது.
வரலாற்றுத்துறையை அவர்கள் தன் துறையாக தேர்ந்தெடுத்தாலும். அரபு இலக்கியத்தில் அவரின் ஆறாத தாகம் வரலாற்றுப்பதிவில் கூட வெளியாவை நாம் காணலாம்.
அறிவு இலக்கியத்தைப் பொறுத்தவரையில் அலிமியானின் படைப்புக்கள் எல்லாவற்றிலும் பொதுவாக இலக்கிய நயம் மிகுந்திருப்பதை அவரது படைப்புக்களில் சிலவற்றைப் படித்தவர் கூட ஏற்றுக் கொள்வர்.ஆழிய கருத்துக்களையும் மிக எளிமையாக யாவரும் புரியக் கூடிய வகையில் இலக்கிய நடையில் எடுத்துக் கூறும் ஆற்றல் அன்னாருக்கே உரியது என்று கூறலாம்.சாதாரண சொற்கள் ஹஜ்ரத் அலிமியானின் பேனா வழியே வெளிவரும் போது கலை நயம் பெருக்கெடுத்தோடுகிறது.
தப்ஸீர், ஹதீஸ்வரலாறு, பயிற்சி, வணக்கம், தஃவா, வரலாறு என எத்துறை சார்ந்த அவர்களது படைப்புக்களையும் அலுப்புத் தட்டாமல் ஆர்வத்துடன் ஓர் இலக்கிய நூலை படித்த மனநிறைவைத் தரும்.
தஃவாவின் (இஸ்லாமிய அழைப்பு பணி) விஷயத்தில் மிக கவனம் செலுத்திய அலிமியான் அவர்கள் இந்திய தலைவர்களையும் மேற்குலக தலைவர்களையும் அழைத்தவிதம் நம்மையும் தஃவாவின்பால் தூண்டக்கூடியதாக உள்ளது.
தன் சுயசரிதை நூலில் அவர்கள் டாக்டர். பாபா சாஹிப் அம்பேத்கர்,புட்டப்பருத்தி சாய்பாபா போன்ற மிகபெரும் தலைவர்களை இஸ்லாத்திற்கு நயமாக அழைப்பு கொடுத்த விதத்தை பதிவுசெய்துள்ளார்கள்.
அது போன்றே அமெரிக்காவின் ஜனாதிபதிகளான கிளிங்டன், புஷ் போன்றவர்களுக்கும் இஸ்லாத்தின் மேன்மைகளைச்சொல்லி அழைத்துள்ளார்கள். இவர்களின் இந்த பணி இன்றைய இஸ்லாமிய இளவல்களுக்கு உண்மையில் ஒரு புதிய தடத்தை அமைத்து தரும் அரும்பணியாகும்.
வரலாறுகளை ஆதாரப்பூர்வமாக பதிவுசெய்கிற விஷயத்திலும் அலிமியானுக்கு நிகர் அவர்களே.
அது போன்றே, மக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரபிதத்துல் ஆலமுல் இஸ்லாமி (ஆரளடiஅ றுழசடன டுநயபரந) எனும் அமைப்பில் முதல் இந்தியராக தலைமைப்பெறுப்பில் இருந்தவர்களும் இவர்களே!
அவர்கள் வாழ்நாளில் லக்னோவிலுள்ள நத்வதுல் உலமா என்ற இந்தியாவின் மிக்பபெரும் கலாசாலையில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தர்கள்.
அவர்கள் வாழ்ந்த காலத்தில் அங்கு படித்த என் நண்பர்கள் கூறுவார்கள் ‘பள்ளிவாசலுக்கு அருகில் அவர்களுக்கு சின்ன ஒரு அறை இருக்கும்.அதற்கு வெளியில் ஒளூ செய்வதற்கு ஒரு லோட்டா (ஊரி) இருக்கும்.இந்த லோட்டா அறைக்கு வெளியில் இருந்தால் ஊரில் இருக்கிறார்கள் என்று பொருள்.அது இல்லை என்றால் அன்னார் அவர்கள் வெளிநாடு சென்றுள்ளார்கள் என்று பொருள்.இன்னும் அந்த லோட்டாவைக் கொண்டு பைப்பிலிருந்து தானே தண்ணீர் அடித்து ஒளூ செய்வார்கள்.யாரும் அவருக்கு தண்ணீர் அடிப்பதைக்கூட விரும்ப மாட்டார்கள்.
இன்னும், துபாயில் நடைபெறும் உலக அளவிலான ‘னுரடியi ஐவெநசயெவழையெட ர்ழடல ஞரசயn யுறயசன’-இன் ஒரு பகுதியாக கொடுக்கப்படும் உலகப்புகழ்வாய்ந்த ‘வுhந டிநளவ Pநசளழயெடவைல ழக வாந லநயச’ யுறயசனஇ 1999 ஆண்டு அலிமியான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.அன்னார்அவர்கள் இந்த மாநாட்டில் நடந்துகொண்ட விதம் அவர்களின் உயர்ந்த தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இந்த மாநாட்டில்வைத்து தனக்கு கொடுக்கப்பட்ட ஒரு மில்லியன் திர்ஹத்தை தன் கையில் கூட வாங்காமல், இந்தியா மற்றும் ஏழை நாடுகளில் உள்ள இஸ்லாமிய பல்கலைகழகங்களுக்கு பிரித்துக் கொடுக்கசென்னார்கள்.
இன்னும் இறைஆலயமான கஅபாவை கழுவும் முன் அதன் கதவை திறப்பதற்கு உலகில் உள்ள முக்கிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை அலிமியான் அவர்களுக்கு மட்டுமே கிடைத்தது.
அரபி,உருது மொழிகளில் அவர்களின் ஆக்கம் பல நூறுகளைத்தாண்டும்.அரபி, உருது ஆங்கிலம்,பார்ஸி மொழிகளில் நூல்களும்,உரைகளும் ஏராளம்.
ஒரு சிறந்த மார்க்க மேதையாக,ஒரு சிறந்த பேச்சாளராக,ஒரு சிறந்த எழுத்தாளராக,ஒரு சிறந்த வரலாற்று ஆசிரியராக,ஒரு சிறந்த இலக்கியவாதியாக,ஒரு சிறந்த குர் ஆன் விளக்கம் கூறக்கூடியவறாக,ஒரு சிறந்த ஹதீஸ் விளக்கம் தருபவராக,ஒரு சிறந்த ஆன்மீக குருவாக.., ஆக ஆக என்ன ஒரு அற்புதமான படைப்பு அவர்கள்..!
பல இளைஞர்களின் இதயத்தில் இன்றும் சிறந்த முன்னோடியாக வாழும் அன்னார் அவர்கள் 31.12.1999 ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு பிரிந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னிப்பானாக..!சுவனப்பேற்றை வழங்குவானாக..!