பாதாளத்தில் தள்ளும் பெரும்பாவங்கள்!

பாதாளத்தில் தள்ளும் பெரும்பாவங்கள்!
நூறு பெரும் பாவங்கள்
இறைநிராகரிப்பை ஏற்படுத்தும் பெரும் பாவங்கள், மிகப்பெரும் பாவங்கள், மகா நாசத்தை ஏற்படுத்தும் பாவங்கள், சுவனம் செல்வதற்குத் தடையான பாவங்கள், அழிவை ஏற்படுத்தும் பாவங்கள் என திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் பாவங்களைப் பற்றி பலவாறாக வர்ணிக்கப்பட்டுள்ளது.

திருமறையிலும் நபிமொழியிலும் பெரும் பாவம், பெரும் குற்றம் என்று கூறப்பட்ட வைகளும், எந்த செயலுக்கு இம்மையிலும் மறுமையிலும் பெரும் தண்டனை உண்டென சொல்லப்பட்டுள்ளதோ அவைகளும், எந்த செயல்களைச் செய்பவர்கள் சபிக்கப்பட்ட வர்கள், சுவனம் புகமாட்டார்கள் என்று வந்துள்ளதோ அச்செயல்களும் பெரும் பாவங்கள், பெருங்குற்றங்கள் என்று சொல்லப்படும்.
பெரும் பாவங்களை விட்டு விலகுவதன் சிறப்பு
நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம். (குர்ஆன் 4:31)
மேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே சொந்தம், தீமை செய்தவர்களுக்கு அவர்கள் வினைக்குத் தக்கவாறு கூலி கொடுக்கவும், நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கவும் (வழி தவறியவர்களையும், வழி பெற்றவர்களையும் பகுத்து வைத்திருக்கின்றான்). ((குர்ஆன் 53:31)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து நேரத் தொழுகைகள், ஜுமுஆ தொழுகைகள், ரமழான் மாதங்கள் ஆகிய இவைகள் அவைகளுக்கு மத்தியில் நிகழும் பாவங்களைப் போக்கிவிடுகின்றன. ஆனால் ஒரு நிபந்தனை, பெரும் பாவங்களைவிட்டும் விலகி இருக்கவேண்டும். (முஸ்லிம்)
இறை நிராகரிப்பை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள், மிகப்பெரும் பாவங்கள், மகா நாசத்தை ஏற்படுத்தும் பாவங்கள்
1. அல்லாஹ்வுக்கு இணைவைப்பது.
(பாவங்களில் மிகப்பெரிய பாவம் அல்லாஹ்விற்கு இணைவைப்பதாகும் – புகாரி, முஸ்லிம்)
2. தொழுகையை விடுவது.
(முஃமினுக்கும், ஷிர்க் மற்றும் குஃப்ருக்கும் இடையில் தொழுகையை விடுவது தவிர வேறொன்றும் இல்லை. அதாவது தொழுகையை விட்டவன் காஃபிராகி விடுவான் – முஸ்லிம்)
3. பெற்றோருக்கு மாறு செய்வது.
4. பொய் சாட்சி சொல்வது.
5. கொலை செய்வது.
(மிகப்பெரும் பாவங்களாவன: அல்லாஹ் விற்கு இணைவைப்பது, பெற்றோருக்கு மாறு செய்வது, பொய் சாட்சி சொல்வது, கொலை செய்வது – முஸ்லிம்)
6. பெற்றோரை ஏசுவது, சபிப்பது.
(மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம் ”அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்” என்று கேட்கப்பட்டது. அதற்கு ”ஒருவர் மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர் இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் – புகாரி, முஸ்லிம்)
7. சூனியம் செய்வது.
8. வட்டி வாங்கி உண்பது.
9. அனாதையின் சொத்தை உண்பது.
10. போரில் புறமுதுகுக் காட்டி ஓடுவது.

Related Post