ஹஜ் எப்படி? 2

எம். ஜே. எம். ரிஸ்வான் (மதனி).

ஹஜ் எப்படி? 2

னிதர்களே! ஓர் உவமை கூறப்படுகின்றது; அதனை மிகக் கவனத்துடன் கேளுங்கள்: அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எந்தக் கடவுள்களை அழைக்கின்றீர்களோ, அக்கடவுள்கள் அனைவரும் சேர்ந்து ஓர் ஈயைப் படைக்க விரும்பினாலும் படைக்க முடியாது! ஏன் ஈ, அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக்கொண்டு போனாலும்கூட அதனிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவர்களால் முடியாது. உதவி தேடுகின்றவர்களும் பலவீனர்களே! உதவி தேடப்படுபவர்களும் பலவீனர்களே!

ஹஜ்ஜின் சிறப்பு

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ (متفق عليه)

ஒரு உம்ரா, மறு உம்ரா வரையுள்ள சிறுபாவங்களுக்குப் பரிகாரமாகும்.  அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவனமாகும்.  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ{ஹரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி , முஸ்லிம்).

… أَنَّ الْإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلِهَا وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ (مسلم )

'இஸ்லாம்' அதற்கு முன்னால் உள்ள பாவங்களை அழித்துவிடும்

‘இஸ்லாம்’ அதற்கு முன்னால் உள்ள பாவங்களை அழித்துவிடும்

‘இஸ்லாம்’ அதற்கு முன்னால் உள்ள பாவங்களை அழித்துவிடும், ‘ஹிஜ்ரத்’ அதற்கு முன்னர் உள்ள பாவங்கைள அழித்துவிடும், ‘ஹஜ்’ அதற்குமுன்னருள்ள பாவங்களை அழித்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஹஜ், உம்ராவின் சிறப்பை எடுத்துக் கூறும் ஆதாரபூர்மான பல நபி மொழிகள் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் விரிவை அஞ்சி இந்த ஹதீஸுடன் போதுமாக்கிக் கொள்வோம்.

வருடந்தோறும் ஹஜ் செய்வது கடமையா?

வாழ்நாளில் ஒரு தடைவ ஹஜ் செய்வதே கடமை.  வருடாவருடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை பின்வரும் நபிமொழியின் மூலம் உறுதி செய்யலாம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيُّهَا النَّاسُ قَدْ فَرَضَ اللَّهُ عَلَيْكُمْ الْحَجَّ فَحُجُّوا فَقَالَ رَجُلٌ أَكُلَّ عَامٍ يَا رَسُولَ اللَّهِ فَسَكَتَ حَتَّى قَالَهَا ثَلَاثًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ قُلْتُ نَعَمْ لَوَجَبَتْ وَلَمَا اسْتَطَعْتُمْ (مسلم)

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.  அதில் மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை கடமையாக்கி உள்ளான். ஆகவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள் எனக் கூறினார்கள். ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! வருடந்தோறுமா ? (செய்யவேண்டும்)? ஏனக் கேட்டார்.  நபி (ஸல்) அவர்கள் எதுவும் பேசாது, அவர் மூன்று தடவைகள் கேட்கும் வரை மௌனமாக இருந்து விட்டு,  ‘நான் ஆம் (கடமைதான்) எனக் கூறினால் அது கடமையாகி விடும்,  நீங்கள் அதனை நிறைவு செய்ய சக்தி பெறமாட்டீர்கள்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்).

இயலாத பெற்றோருக்காக பிள்ளைகளின் ஹஜ்

عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ امْرَأَةً مِنْ خَثْعَمَ سَأَلَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ جَمْعٍ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ فَرِيضَةُ اللَّهِ فِي الْحَجِّ عَلَى عِبَادِهِ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَسْتَمْسِكُ عَلَى الرَّحْلِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ (بخاري) وفي رواية له :- وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ (متفق عليه)

‘ஹஸ்அம்’ கோத்திரத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே, ஹஜ் அல்லாஹ்வின் அடியார்கள் மீதுள்ள அவனது கடமையாக இருக்கின்றது.  எனது தந்தை வாகனத்தில் அமர முடியாத அளவு முதியவராக இருக்கின்றார். ஆகையால் அவருக்காக நான் ஹஜ்ஜை நிறைவேற்றலாமா?’ எனக் கேட்டார். ‘ஆம். அவருக்காக நீ ஹஜ் செய்து கொள்’ என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (புகாரி,) புகாரியின் மற்றொரு அறிவிப்பில், இது ‘ஹஜ்ஜத்துல் வதா’ வில் நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது நடை பெற்றதாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

நிபந்தனை

ஒருவர் தனது பெற்றோருக்காக, அல்லது உறவினர்களுக்காக ஹஜ் செய்வதாயின் அவர் முதலாவதாக தனக்குரிய ஹஜ்ஜை நிறைவேற்றி இருக்க வேண்டும்.

عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا يَقُولُ لَبَّيْكَ عَنْ شُبْرُمَةَ قَالَ مَنْ شُبْرُمَةُ قَالَ أَخٌ لِي أَوْ قَرِيبٌ لِي قَالَ حَجَجْتَ عَنْ نَفْسِكَ قَالَ لَا قَالَ حُجَّ عَنْ نَفْسِكَ ثُمَّ حُجَّ عَنْ شُبْرُمَةَ (أبوداود)

ஒருமனிதர் ‘லைப்பைக்க -அன்- {ப்ருமா’ இது ‘{ப்ருமா என்பவருக்கான’ ஹஜ், எனக் கூறியபோது ‘யார் அந்த {ப்ருமா என நபி (ச) அவர்கள் வினவினார்கள். அவர், ‘எனது சகோதரர், அல்லது உறவினர் எனப் பதில் கூறினார்.  நீ உனக்காக ஹஜ் செய்து விட்டாயா?’ எனக் கேட்டார்கள். ‘இல்லை’ என்றதும் (முதலில்) உனக்காக ஹஜ் செய், பின்வருங்காலங்களில் {ப்ருமாவிற்காக ஹஜ் செய் எனக் கூறினார்கள். (அபூதாவூத்)

மஹ்ரமின்றி ஒருபெண்ணோ, அல்லது பல பெண்களோ தனித்து ஹஜ்ஜுக்காக செல்ல முடியுமா?

மஹ்ரமின்றி ஒருபெண்ணோ, அல்லது பல பெண்களோ தனித்து ஹஜ்ஜுக்காக செல்ல முடியுமா?

மஹ்ரமின்றி ஒருபெண்ணோ, அல்லது பல பெண்களோ தனித்து ஹஜ்ஜுக்காக செல்ல முடியுமா?

ஹஜ் இஸ்லாத்தின் ஐம்பெரும் பிரதான கடமைகளில் ஒன்றாகும். அதனை ஒரு ஆண் தனிமையாக நிறைவேற்ற அனுமதி இருப்பது போன்று ஒரு பெண் செய்ய மார்க்கத்தில் அனுமதி இல்லை.

عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ امْرَأَتِي خَرَجَتْ حَاجَّةً وَاكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا قَالَ ارْجِعْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ (متفق عليه)

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் தனது உரையில், ‘அந்நிய ஒரு பெண்ணுடன் எந்த ஒரு ஆணும் தனித்திருக்க வேண்டாம்’, மஹ்ரம் (மணம் முடிக்க மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவர், அல்லது கணவர்) உடனே அன்றி பயணம் செய்ய வேண்டாம் எனக் கூறியதை செவிமடுத்த ஒரு மனிதர் எழுந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன, இன்ன போர்களில் கலந்து கொள்ள வேண்டும் எனப் பதியப்பட்டிருக்கிறேன், எனது மனைவியோ ஹஜ் செய்வதற்காக புறப்பட்டு சென்று விட்டார் என்றார். ‘உடன் திரும்பிப் போய், உனது மனைவியுடன் ஹஜ் செய்’ எனப் பணித்தார்கள். (புகாரி, முஸ்லிம்).

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே ஒரு பெண்ணோ, அல்லது பல பெண்களோ (திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட) மஹ்ரமான ஆண்கள் துணையின்றி தனிமையில் ஹஜ் பயணமோ, அல்லது வேறு பயணமோ செல்லக் கூடாது எனக் கூறுகின்றோம்.

இதற்கு தவறான வியாக்கியானம் செய்யும் ஷாஃபிமத்ஹபைச் சார்ந்தோர் ‘நம்பகமான பெண்கள் பலருடன் சேர்ந்து ஒரு பெண் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்’ என வாதிடுகின்றனர்.  ஒரு பெண் தனிமையில் பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுவது போன்று ஹஜ் செய்யச் செல்லலாமா? முடியாதா என்ற வாதப்பிரதிவாதங்கள் மார்க்க அறிஞர்கள் வட்டத்தில் காணப்பட்டாலும் ‘மஹ்ரம்’ என்ற ஆண் துணையுடன் ஹஜ் செய்வதையே நபி (ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி இருப்பதைப் பார்க்கின்றோம்.  ஒரு பெண் மஹ்ரம் இன்றி ஹஜ் செய்ய முடியாது என்பதையே நாம் சரியான கருத்தாகவும் கொள்கின்றோம்.

ஐயம்: ஹஜ்குழுவினர் சிலர், தமது ஹஜ் குழுவுடன் ஒருவரை அதிகரித்துக் கொள்வதற்காக, தமது வசதிக்காக பெண்கள் பலருடன் ஒரு பெண் செல்வதில் தவறில்லை என்கின்றனர்.  உண்மையில் இக்கூற்றிற்கு அவர்கள் சார்ந்திருக்கும் மத்ஹபின் பெயரால் எழுதப்பட்டுள்ள கருத்துக்களும் ஒரு காரணமே!

மேலும், குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றும் சிலர் ஒருபடி மேலே சென்று ஒரு சில அறிஞர்கள் தனிமையாக ஹஜ் செய்யலாம் என்பதற்கு ‘அதிய்யே அல்ஹீரா என்ற நகரைப்பார்த்திருக்கிறாயா? நான் அதைப்பார்த்தில்லை. அது பற்றி கேள்விப்பட்டுள்ளேன் எனக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ‘நீ நீண்ட காலம் வாழ்ந்தால் தனது ஒட்டகத்தில் பயணம் செய்யும் ஒரு பெண் அந்த அல்ஹீராவில் இருந்து கஃபா வரை வந்து (தன்னந்தனியே) தவாஃப் செய்வாள்.  அல்லாஹ்வைத்தவிர வேறு யாரையும் அவள் அஞ்சமாட்டாள்.’ (புகாரி 3328) எனக் கூறிய அதிய் பின் ஹாதிம் (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை ஆதாரமாகக் கொண்டு ஒரு பெண் ஹஜ்ஜுக்காக தனிமையில் பயணம் மேற்கொள்வதில் தவறில்லை என்கின்றனர்.

விளக்கம்: நம்பகமான பெண்களுடன் செல்லலாம் என்றால் ஏன் அந்த நபித்தோழரை அவரது மனைவியுடன் ஹஜ்ஜை நிறைவேற்றும்படி நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.?  நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஆண்களையும், பெண்களையும் விடவுமா இந்தக்காலத்துப் மக்கள் நம்பிக்கையிலும், நாணயத்திலும் உயர்ந்தவர்களா !!!

அதி பின் ஹாதிம் (ரழி) அவர்களின் ஹதீஸ் அச்சம், பீதி அற்ற ஒரு காலத்தை அதுவும் முன்னறிவிப்பு ஒன்றைக் குறிக்கின்றது.  நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடை பெற்ற வழிப்பறிக் கொள்ளை, வறுமை ஆகியவற்றை முறைப்பாடு செய்த போதே இந்த முன்னறிவிப்பைக் கூறினார்கள். தனது காலத்தைக்கூட அச்சம், பீதி, வறுமை அற்ற காலம் எனக் கூறவில்லை.

மாற்றமாக அதை ஒரு முன்னறிவிப்பாகவே கூறினார்கள். அது அதிய் (ரழி) அவர்களின் வாழ்நாளிலேயே நடந்தேறியது.  இதை உண்மைப்படுத்தும் வகையில் அதன் அறிவிப்பாளரான அதிய் (ரழி) அவர்கள் இது பற்றிக்குறிப்பிடுகின்ற போது, ‘ஒரு பெண் ஒட்டகத்தில் ஏறி அந்த அல்ஹீராவில் இருந்து கஃபாவரை வந்து (தனிமையாக) தவாஃப் செய்வதைக் கண்டேன். அல்லாஹ்வைத்தவிர வேறு யாரையும் அவள் அஞ்சமாட்டாள்’, என குறிப்பிடுகிறார்கள்.(புகாரி).

இப்படியான காலத்துடன் கொலைகளும், கொள்ளைகளும் மலிந்து காணப்படும் இந்தக்காலத்தை ஒப்பிடலாமா என்றால், அனைவரும் இல்லை! என்றே கூறுவர். உலகில் அச்சமற்ற நாடுகளில் முன்னணி நாடு என போற்றப்படும் சவூதி அரேபியாவில் கூட கணவனுடன் ஹஜ் செய்யச் சென்ற பெண்கள் பலர் கடத்திக் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்றால் நடந்தேறிய முன்னறிவிப்பைக் கொண்டு பெண்கள் தனிமையில் ஹஜ் செய்யலாம் என முடிவு செய்வது ஹதீஸுக்கு உடன்பாடான விளக்கமாகத் தெரியவில்லை.

ஐயம். அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் ஜமல் போரின் போது கூபா நோக்கி பயணித்துள்ளார்களே! நாம் ஹஜ்ஜுக்காக செல்வதை எவ்வாறு தவறாகக் கொள்ள முடியும் ?

ஒருவர் தனது பெற்றோருக்காக, அல்லது உறவினர்களுக்காக ஹஜ் செய்வதாயின் அவர் முதலாவதாக தனக்குரிய ஹஜ்ஜை நிறைவேற்றி இருக்க வேண்டும்.

ஒருவர் தனது பெற்றோருக்காக, அல்லது உறவினர்களுக்காக ஹஜ் செய்வதாயின் அவர் முதலாவதாக தனக்குரிய ஹஜ்ஜை நிறைவேற்றி இருக்க வேண்டும்.

தெளிவு:- இது அவர்களின் தனிப்பட்ட ஒரு முடிவாகும். நபித்தோழர்கள் பலர் இதனை விரும்பவில்லை.  அப்படி இருந்தும் இஸ்லாத்தில் சமரசம் செய்துவைத்தல் விரும்பத்தக்க செயல் எனக் காரணம் காட்டியே அவர்கள் அவ்வாறு புறப்பட்டதாக வரலாறு சொல்கிறது.  அத்துடன், பிற்காலத்தில் தனது இந்தத்தவறை உணர்ந்த அன்னை அவர்கள் அவர்களது முந்தானை நனையும் அளவு அழுது கண்ணீர் வடித்துள்ளார்கள் என ஆதாரபூர்வமான செய்திகள் குறிப்பிடுவதைக் கவனித்தால் இது போன்ற செய்திகள் ஆதாரமாகக் கொள்ள முடியாதவை என்பதை அறியலாம்.

நபி (ஸல்) அவர்களின் மேற்படி கட்டளையை மீறி ஸஹாபிப் பெண்கள் யாராவது இவ்வாறு சென்றிருப்பார்களாயின், அவர்கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் சென்றார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். பின் அவர்களின் விருப்பம் மார்க்கமாக முடியாது என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.

தமது மனைவியர் மாற்றானுடன் புன்முருவல் பூப்பதையே விரும்பாத இம்மேதாவிகள், மாற்றான் மனைவி தனது குரூப்பில் இணைந்து ஹஜ் செய்வதை அனுமதிக்கிறார்கள் என்றால் அதில் உலகியல் இலாபமின்றி வேறு என்னதான் இருக்க முடியும்?

Related Post