ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!

EID

EID

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்! புண்ணியங்களின் பூக்காலமான புனித ரமதான் மாதத்தில் நோன்பு நோற்று, தவறாமல் திருக்குர்ஆன் ஓதி,

இரவுகளில் நின்று வணங்கி, இறைவனை அதிகமதிகம் நினைத்துக் கொண்டு,

இஸ்லாமியக் கடமைகளில் ஒன்றான ‘ஸகாத்தையும்’ நிறைவேற்றி,

படைத்த இறைவனுக்காகப் பசித்து, தனித்து, விழித்திருந்து

புனித ரமதான மாதம் முடிந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளைத்தான் ஈகைத் திருநாளாகக் (‘ஈத் அல் ஃபித்ர்’) கொண்டாடுகிறோம். இதையேதான் நோன்புப் பெருநாள் என்றும் அழைக்கிறோம்.

ரமலான் நோன்பின் நிறைவாக ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. புவியியல் அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல்பிறை தோன்றுவதற்கேற்ப அந்நாடுகளில் ரம்ஜான் கொண்டாடப்படும்.

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளை இடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர்: உம்மு அத்தியா (ரலி), நூல்கள்:: புகாரி, முஸ்லிம்.

புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர் (ரலி), “இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா…” என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்), “அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடுங்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும்” என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி), நூல்: புகாரி.

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!

Related Post