படைத்தவன் பக்கம் மீளுவதே அமைதியின் அளவுகோல் …!

படைத்தவன் பக்கம் மீளுவதே அமைதியின் அளவுகோல் ...!

படைத்தவன் பக்கம் மீளுவதே அமைதியின் அளவுகோல் …!

– ஹபீப் முஹம்மத்

பாவங்கள் படிந்த உள்ளங்களை பவித்ரப்படுத்தவும், சாதாரனவன் முதல் சரித்திரம் படைத்தவன் வரை தேடும் அமைதியை அவன் கைக்கெட்டும் தொலைவில் வைத்துக் கொண்டு அவன் ஏன் அமைதிக்காய் அங்கலாய்க்கின்றான்?? ஆம் அவன் அமைதியை முதலில் பெற்றுக்கொள்வது அவன் பின்பற்றி வாழும் மதத்திலேயாகும்………..இஸ்லாம் அமைதியின் அடிச் சொல்லிலிருந்து பிறந்தது..!

மனிதர்கள் அனைவரும் அமதியின் இருப்பிடமாம் சுவனம் செல்ல வேண்டும் எனும் தனது விருப்பத்துக்கு செயல் வடிவம் தர நாடிய இறைவன்,

அமைதிக்கான வழிகளைக் காட்டுவதற்காகவே, மனிதர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தன் தூதர்களாக நியமித்தான். ஆவர்கள் வாயிலாக அமைதிக்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் இறைவன் வழங்கினான். இத்தூதர்கள் இறைக்கோட்பாடுகளை மக்களுக்ககு விளக்கியதோடு, அமைதியை நிலைநாட்டும் பணியிலும் ஈடுபட்டனர். முதல் மனிதராகிய ஆதம் முதல் இறைத்தூதர் ஆவார். ஆவரைத் தொடர்ந்து தூதர்கள் பலரை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இறைவன் நியமித்தான். ஆந்த வகையில் இறுதியாகப் பணியாற்றியவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஆவார்.

இறைவனின் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தும் சமுதாயமே அமைதி பெறும். இஸ்லாம் எனும் சொல்லுக்கு அமைதி,கீழ்ப்படிதல் என இரு பொருள் உண்டு.இறைவனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தால் அமைதி கிட்டும்.இறைவழிகாட்டுதலை மீறினால் அமைதி மறுக்கப்படும் என்பதே அச்சொல் நமக்கு உணர்த்தும் பாடம் ஆகும்.

சாந்தி உண்டாகும் (இறைவனின்) நேர்வழியைப் பின்பற்றி நடப்போருக்கு’ (திருக் குர்ஆன் 20:47) எனும் இறைவசனமும் இந்தக் கருத்தை உறதிப்படுத்துகின்றது.

மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் பெண்ணின் வழித்தோன்றல்கள். ஒரே ஆன்மாவிலிருந்து பிறந்தவர்கள். எனவே, அனைவரும் சகோதரர்கள் எனும் இறைக்கருத்தை மறுத்து மனிதர்களை நாம் பல வர்ணங்களாகப் பிரித்தோம். அதன் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்தோம். விளைவு சாதி-இன மோதல்கள்!

மதுவை தீமைகளின் பிறப்பிடம் என்கின்றது இறைக்கோட்பாடு! ஆதனை வருமானங்களின் பிறப்பிடம் எனக் கருதி அதனைத் திறந்துவிட்டோம். விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

வட்டி ஒரு சுரண்டல் எனும் இறைக்கோட்பாட்டை ஏற்க மறுத்து வட்டியின்றி பொருளியலே இயங்க முடியாது எனும் நிலையை உருவாக்கினோம். பணவீக்கம விலைவாசி உயர்வு, ஏழைகளும், ஏழை நாடுகளும் சுரண்டப்படுதல், அடிமைப்படுத்தப்படுதல் போன்ற பல கொடுமைகளுக்கு அளாகி வருகின்றோம்!

மானக்கேடானவற்றிற்கு அருகில்கூட நெருங்காதீர்கள்’ எனும் இறைக்கோட்பாட்டை மீறியதால் ஏற்பட்ட விளைவுகள் விபச்சாரம்,கருக்கலைப்பு,பால்வினை நோய்கள்,எய்ட்ஸ்..!

இப்படி வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இறைச்சட்டங்களை மீறிய போதெல்லாம் மனித சமூகம் அமைதிi இழந்துவிடுகின்றது. எனவே, அமைதியைப் பெறுவதற்கான ஒரே வழி,

படைத்தவனின் பக்கம் திரும்புவதே! – திருக் குர்ஆன் 94:8

இறைவனின் பக்கம் விரைந்து வருவதே!’ – திருக் குர்ஆன் 51:50

Related Post