– நாதியா
– தமிழில்:மு.அ. அப்துல் முஸவ்விர்
தூய்மையும் தொழுகையும் – 11
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
4.அசுத்தத் தண்ணீர்: இந்த வகைத் தண்ணீர் தன்னுள் அசுத்தப் பொருட்கள் ஏதேனும் கலந்துவிட்டிருப்பது.இது இரண்டு வகைப்படும்
அ. குறைந்த அளவு தண்ணீர் (குல்லதின் அளவை விடக் குறைந்த அளவு)
அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களிடத்தில் ஒரு முறை, விலங்குகள் மற்றும் காட்டுப் பிராணிகள் பயன்படுத்தும் (பாலைவன நாட்டு) தண்ணீரைக் குறித்து வினவப்பட்டது.அண்ணலார் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்; ‘இரண்டு சாடி வடிவான இலைதிரியுறுப்பு –Pவைஉhசள அளவு கொள்ளக்கூடிய தண்ணீர் அசுத்தமானதல்ல!
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
ஆதாரம்: அபூதாவூத்
இந்த வகை தண்ணீரில் ஒரு சிறு அளவு அசுத்தம் விழுந்துவிட்டாலும் அது தூய்மையற்றதாகிவிடுகின்றது, அதனால் அதன் நிறத்தில்,சுவையில்,மணத்தில் எந்தவொரு மாற்றம் ஏற்படாமல் இருப்பினும் சரியே..!இதனை பின்வரும் நபிமொழி நிரூபிக்கின்றது:-
அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் உறங்கி எழுந்த பின், கைளைத் தண்ணீர்க்கலனில் இடும் முன்னர், (வெளியே) நன்கு கழுவிக் கொள்ளட்டும்.ஏனெனில், அவர் உறங்கும் நிலையில் தனது கைகள் எங்கு (உறங்கி) இருந்தன என்பதை அறிய மாட்டார்!
ஆதாரம்: முஸ்லிம்
இந்நிலையில் ஒரு மனிதர் தனது கரங்களில் எந்வொரு சிறு அசுத்தத்தையும் காணாவிட்டாலும், உறங்கி எழுந்நத பின்னர்,தண்ணீர்க் கலனில் கைகளை இடும் முன்னர் கழுவிக்கொள்வது அவசியம் என்பதை மேற்கண்ட நபிமொழி நிரூபிக்கின்றது.இல்லையெனில் அந்தத் தண்ணீர் தூய்மைப்படுத்திக் கொள்ள தகுதியற்றதாகிவிடுகின்றது.
ஆ. இது (குல்லதின் அல்லது அதற்கும்) அதிகமான கொள்ளவு தண்ணீருக்கானது.இத்தகைய அதிகக் கொள்ளவு கொண்ட தண்ணீரின் நிறம்,சுவை,வாசனையில் மாற்றம் ஏற்படாத வரை அது தூய்மையற்றதாகக் கருதப்பட மாட்டாது.அசுத்தத்தின் காரணமாக தண்ணீரின் மேற்சொன்ன தகைமைகளில் ஏதேனும் ஒன்றில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டாலும் அந்த பெருமளவு தண்ணீரும் தூய்மையற்றதாகிவிடுகின்றது.
ஒரு குல்லதின் என்பது தோராயமாக 216 லிட்டர் அளவைக் குறிக்கும்.