ஏன் தொழ வேண்டும்..?

– அபுல் அஃலா மௌதூதி

ன் தொழ வேண்டும்..?

கடமைகள் அனைத்திலும் முதன்மையான கடமை தொழுகையாகும்.

கடமைகள் அனைத்திலும் முதன்மையான கடமை தொழுகையாகும்.

து உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கும் வேதமாகும். எனவே, இதனைப் பற்றி உமது உள்ளத்தில் எவ்விதத் தயக்கமும் ஏற்பட வேண்டாம். (சத்தியத்தை மறுப்போர்க்கு) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும். மேலும், இறைநம்பிக்கை கொண்டோர்க்கு இது ஓர் அறிவுரையாகத் திகழ வேண்டும் என்பதற்காகவே இது இறக்கி வைக்கப்பட்டது.

டமைகள் அனைத்திலும் முதன்மையான கடமை தொழுகையாகும். தொழுகை என்பது என்ன? எதன் மீது நாம் நம்பிக்கை (ஈமான்) கொண்டிருக்கிறோமோ அதனை, நாள் தோறும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் சொல்லாலும், செயலாலும் நிறைவு செய்து புதுப்பிக்கின்ற நிரந்தர வழிபாட்டு முறைகளே தொழுகையாகும். அதிகாலையில் எழுந்து அனைத்திற்கும் முதலாவதாக சுத்தமாகி இறைவன் முன் வருகிறீர்கள். அவன் முன்னிலையில் நின்றும், குனிந்தும், சிரம் தாழ்த்தியும் உங்களை அடிமை என்று ஒப்புக் கொள்கிறீர்கள். இறைவனிடம் உதவி கோருகிறீர்கள். அவனிடம் போதனை கேட்கிறீர்கள். அவனுக்குக் கீழ்ப்படியும் வாக்குறுதியைப் புதுப்பிக்கிறீர்கள். அவனுடைய திருப்தியைப் பெறவும், கோபத்திலிருந்து தப்பிக்கவும் அடிக்கடி இறைஞ்சுகிறீர்கள். அவனுடைய வேதத்தின் பாடத்தை நினைவூட்டிக்கொள்கிறீர்கள். அவனுடைய தூதரின் மெய்மையைப் பற்றிச் சான்று பகர்கிறீர்கள். அவனுடைய நீதிமன்றத்தில் நீங்கள் வந்து உங்களுடைய நடத்தையைப் பற்றிப் பதில் கூறவேண்டிய அந்த நாளை நினைவுபடுத்திக் கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் பகற் பொழுது தொடங்குகிறது.

சில மணி நேரம் நீங்கள், உங்கள் அன்றாட அலுவல்களில் ஈடுபடுகிறீர்கள். லுஹர் வேளையில், முஅத்தின் (தொழுகைக்கு அழைப்பு விடுப்பவர்) உங்களுக்கு நினைவூட்டுகிறார். “வாருங்கள்! இறைவனை மறந்து அலட்சியமாக இருந்து விடாதிருக்கும் பொருட்டுச் சில நிமிஷங்கள் அந்தப் பாடத்தை மீண்டும் நினைவூட்டிக் கொள்ளுங்கள்!’ என்று அழைக்கிறார். நீங்கள் எழுந்து மீண்டும் ஈமானைப் புதுப்பித்துக் கொண்டு மறுபடியும் உலக அலுவல்களின் பக்கம் திரும்புகிறீர்கள். சில மணி நேரம் கழித்து மீண்டும் அஸர் வேளை  மீண்டும் ஈமானைப் புதுப்பித்துக் கொள்கிறீர்கள். அதற்குப்பின் மக்ரிப் வேளை வருகிறது. இரவு தொடங்குகிறது. காலைப்பொழுதை நீங்கள் எவ்வாறு தொழுகையோடு தொடங்கினீர்களோ அவ்வாறே அந்தப் பாடத்தை மறந்து விடாதிருக்கும் பொருட்டும், மறந்து வழி தவறிவிடாதிருக்கும் பொருட்டும் தொழுகையோடு இரவையும் தொடங்குகிறீர்கள். பிறகு இஷா வேளை வருகிறது. தூங்கும் சமயம் நெருங்குகிறது. இது அமைதியான காலம். ஆதலால் இறுதியாக உங்களுக்கு ஈமானின் போதனைகள் அனைத்தும் நினைவூட்டப்படுகின்றன. பகற்பொழுதின் ஆரவாரத்தில் உங்களுக்கு முழுக்கவனமும் செலுத்த வாய்ப்பில்லா விட்டால் இந்த வேளையில் நிம்மதியாகக் கவனம் செலுத்த முடியும்.

கடமைகள் அனைத்திலும் முதன்மையான கடமை தொழுகையாகும்.

கடமைகள் அனைத்திலும் முதன்மையான கடமை தொழுகையாகும்.

தொழுகை ஒவ்வொரு நாளும், ஐவேளையும் உங்களுடைய இஸ்லாமிய அடிப்படையை வலுப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்தத் தொழுகையால் உங்கள் உளத்தூய்மை, ஆன்மநேயம், ஒழுக்க விழுப்பம், நற்செயல்கள் பற்றிய அறிவுரை ஆகிய அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதன் மூலம் முன் கூறியபடி பெரிய வழிபாட்டிற்கு சித்தப்படுத்தப்படுகிறீர்கள். ஒலூச் செய்வதில் (தொழுகைக்கு முன் முகம், கைகால்களைத் தூய்மை செய்வதில்) ரசூலுல்லாஹ் அவர்கள் காட்டிய வழிமுறையையே நீங்கள் ஏன் பின்பற்றுகிறீர்கள்? தொழுகையின்போது ரசூலுல்லாஹ் அவர்கள் போதித்துள்ள படியே குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் ஏன் ஓதுகிறீர்கள்? முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப் படிவதை நீங்கள் உங்கள் கடமையாகக் கருதுவதால் தானே இவையெல்லாம் செய்கிறீர்கள் ?

குர்ஆனை நீங்கள் வேண்டும் என்றே தவறாக ஏன் ஓதுவதில்லை? அது அல்லாஹ்வின் வாக்கு எனும் நம்பிக்கை உங்களுக்கு இருப்பதால்தானே? தொழுகையில் மௌனமாக ஓத வேண்டியதை நீங்கள் ஓதாவிட்டால் அல்லது அதற்குப் பதிலாக வேறு ஏதாவது ஓதினால் உங்களுக்கு யாருடைய அச்சம் இருக்கிறது? மனிதர் யாரும் நகைக்கப் போவதில்லை. ஆயினும் மௌனமாக நாம் எதை ஓதிக்கொண்டிருந்தாலும் அதையும் அல்லாஹ் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கருதுவதால்தான் அல்லவா? நமது மறைவான நடவடிக்கைகளையும் அவன் அறியாதவன் அல்லன் எனும் எண்ணம் இருப்பதால்தான் அல்லவா?

பார்ப்பவர் எவரும் இல்லாத இடத்தில் உங்களைத் தொழுகைக்காக எழுப்பி விடுவது எது? இறைவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் எனும் நம்பிக்கைதான் அல்லவா? தொழுகை வேளை வந்ததும் மிகவும் அவசியமான வேலையிலிருந்தும் உங்களைப் பிரித்துத் தொழுகையின் பக்கம் உங்களை இட்டுச் செல்வது எது? “தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான்’ எனும் உணர்வே அல்லவா? குளிர் காலத்தில் அதிகாலையிலும், கோடைக்காலத்தில் நடுப்பகலிலும், மாலையில் இன்பமாய்ப் பொழுது போக்கும் மக்ரிப் சமயத்திலும் தொழுது கொள்ளும்படி எது உங்களை நிர்ப்பந்திக்கிறது? அது கடமையுணர்வு இல்லையானால் வேறு என்ன? தொழாமல் இருப்பதற்கும், தொழுகையில் அறிந்தே தவறு செய்வதற்கும் ஏன் அஞ்சுகிறீர்கள்? இறைவனின் அச்சம் உங்களுக்கு இருப்பதால்தானே? அவனுடைய நீதிமன்றத்திற்கு ஒருநாள் வர வேண்டியிருக்கிறது என்று நீங்கள் நம்புவதால்தானே?

உங்களை மெய்யான முழுமையான முஸ்லிம் ஆக்குவதற்காகத் தொழுகையைக் காட்டிலும் வேறு சிறந்த பயிற்சி எது இருக்கிறது? ஒவ்வொரு நாளும் பலமுறை இறைவனின் நினைவு, அவனுடைய அச்சம், அவன் எங்கும் நிறைந்திருந்து எல்லாவற்றையும் கண்காணிக்கிறான் எனும் நம்பிக்கை, அவனுடைய நீதிமன்றத்தில் நிற்க வேண்டும் எனும் கொள்கை ஆகியவற்றைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கும் பயிற்சியை அளிப்பதற்குத் தொழுகையைவிடச் சிறந்ததாய் வேறு எது இருக்கிறது?

நாள்தோறும் பலமுறை கட்டாயமாக ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதற்கும், வைகறை முதல் இரவு வரை ஐவேளைகளில் இறைவனுக்குச் செய்யும் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் இது பயிற்சியளித்துக் கொண்டே இருக்கிறதல்லவா? இவ்வாறு பயிற்சி பெற்ற ஒருவன், தொழுகையை நிறைவேற்றிவிட்டு உலக அலுவல்களில் ஈடுபடும்போது அங்கும் அவன் இறைவனுக்கு அஞ்சுவான். அவனுடைய சட்டங்களைப் பின்பற்றுவான். ஒவ்வொரு பாவச்செயலின் போதும் அவனுக்கு அல்லாஹ்வின் நினைவு வந்துவிடும். தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். தான் பாவம் செய்யக்கூடாது என்று அஞ்சி விலகுவான் என்று நம்பலாம் அல்லவா? யாராவது ஒருவன் இத்தகைய சிறந்த பயிற்சிக்குப் பின்பும் இறைவனுக்கு அஞ்சாமலும் அவனுடைய கட்டளைகளை மீறியும் நடந்து கொண்டிருந்தால் அது, தொழுகையின் குறை ஆகாது. மாறாக அக்குறை அந்த மனிதனின் உள்ளக் கோளாறின் விளைவேயாகும்.

கடமைகள் அனைத்திலும் முதன்மையான கடமை தொழுகையாகும்.

கடமைகள் அனைத்திலும் முதன்மையான கடமை தொழுகையாகும்.

அல்லாஹ் தொழுகையை பலருடன் கூடி (ஜமாஅத்துடன்) தொழும்படியே உத்தரவிட்டிருக்கிறான். குறிப்பாக வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை (ஜும்ஆ)த் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதைக் கடமையாக்கி இருக்கிறான். இதனால் முஸ்லிம்கள் இடையே ஒற்றுமையும் சகோதரத்துவமும் தோன்றுகின்றன. தொழுகை முஸ்லிம்களை ஒன்றுபடுத்தி ஒரு வலுவான குழுவாக்குகிறது. முஸ்லிம்கள் அனைவ ரும் ஒன்றுகூடி ஒரே இறைவனைத் தொழும்போது ஒன்றாயிருந்து பழகுவதால், இயற்கையாக ஒருவருடைய நெஞ்சம் மற்றொருவருடைய நெஞ்சத்தோடு இணைகிறது. நாம் அனைவரும் சகோதரர்கள் எனும் உணர்வும் பிறக்கிறது. தவிர, இது முஸ்லிம் தலைவனுக்குப் பணிந்து செயல்படும் இயல்பை உண்டாக்குகிறது. அவர்களுக்கு ஒழுங்கையும் கட்டுப்பாட்டுக்கான பாடத்தையும் கற்பிக்கிறது. இதனால் அவர்களுக்குள் அன்பும் அனுதாபமும் மலர்கின்றன. சமத்துவமும், ஒருமையுணர்வும் பிறக்கின்றன. செல்வனும், ஏழையும், பெரியவனும், சிறியவனும், உயர்ந்த அதிகாரியும், தாழ்ந்த வேலைக்காரனும் சரிசமமாகத் தோளோடு தோள் இணைந்து நிற்கிறார்கள். எவரும் உயர் ஜாதியாகவோ, கீழ் ஜாதியாகவோ இருப்பதில்லை.

இவை யாவும் உங்களுடைய தொழுகையால் இறைவனுக்கன்றி உங்களுக்கே கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளுள் சிலவாகும். இறைவன், இதை உங்களுடைய நன்மைக்காகவே கடமையாக்கியிருக்கிறான். தொழாவிட்டால் இறைவன் உங்கள் மீது கோபப்படுவது, அவனுக்கு நீங்கள் ஏதோ பெரிய நஷ்டம் விளைவித்து விட்டீர்கள் என்பதற்காக அன்று. உங்களுக்கு நீங்கள் நஷ்டம் விளைவித்துக் கொண்டீர்களே என்பதற்காகத்தான். தொழுகையின் மூலம் இறைவன் எத்தகைய வலிமையை உங்களுக்குத் தருகிறான்! நீங்களோ அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்.

வாக்கால் இறைவனின் இறைமையையும், இறைத்தூதருக்குக் கீழ்ப்படிவதையும், மறுமையில் நீதி விசாரணையையும் ஒப்புக்கொண்டு செயலில் இறைவனும், இறைத்தூதரும் உங்கள் மீது சுமத்தியுள்ள அனைத்திற்கும் பெரிய கடமையை நிறைவேற்றாமல் இருந்தால் அது எத்தகைய வெட்கக் கேடான நிலை என்பதை உணர வேண்டும். இத்தகைய செயல் உங்களைப் பற்றி இரண்டு விஷயங்களை வெளிப்படுத்துகிறது. ஒன்று, தொழுகை முக்கிய கடமை என்பதை நிராகரிக்கிறீர்கள். இரண்டு, அதைக் கடமை என்று ஒப்புக்கொண்டும் அதை நிறைவேற்றாமல் தப்பி ஓட முயலுகிறீர்கள். தொழுகையையே கடமையல்லவென நிராகரிப்பதால் குர்ஆனையும், ரசூல்(ஸல்) அவர்களின் போதனையையும் பொய்யாக்க முயலுகிறீர்கள். அதே சமயம் அவ்விரண்டின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்ப தாய்ப் பொய்யுரைக்கிறீர்கள்.

நீங்கள் தொழுகையைக் கடமை என்று ஒப்புக் கொண்டும் அதை நிறைவேற்றா விட்டால் நீங்கள் கொஞ்சமும் நம்பிக்கைக்குரிய மனிதர் அல்லர். எந்த உலக விவகாரம் தொடர்பாகவும் உங்களை நம்பவே முடியாது. இறைவனுடைய கடமையை நிறைவேற்றாத உங்களிடம் மனிதனின் கடமையை நிறைவேற்றுவீர்கள் என்று எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?.

 

Related Post