– அபூ அம்மார் யாசிர் அல் காழி
– தமிழில் : ஆ. ர்.. ஜவாஹிருல்லாஹ்
இணைவைப்பின் வகைகள் – 3
4. நல்லருளைப் பெற்றுத்தரும் செயல்களைப் பாழ்ப்படுத்துகிறது
அல்லாஹ்விற்காக அன்றி மற்றவர்களுக்காக செய்யப்படும் செயல்கள் இறைவன் அங்கீகாிக்க மாட்டான் என்று பல அறிவிப்புகளில் அண்ணல் நபி அவர்கள் கூறியுள்ளார்கள்.
அபூ உமாமா அல் பாஹிலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்.
‘அல்லாஹ்விற்காக என்று தூய எண்ணத்துடன், அவனது திருப்தியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு செயலையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்” நூல்: சஹீஹ் அல்ஜாமீ, சுன்னன் நஸயீ
அல்லாஹ்விற்காக தூய நோக்கமின்றி செய்யப்படும் செயலை அல்லாஹ் எப்படி ஏற்றுக் கொள்வான்? அல்லாஹ் இது போன்ற செயல்கள் குறித்து திருக்குர்ஆனில் எச்சாிக்கிறான்:
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (திருக்குர்ஆன் 2:264)
ரியாவில் ஈடுபடுபவர் மண்ணால் மூடப்பட்ட பாறை போன்றவர் ஆவார். மக்கள் அப்பாறையைப் பார்க்கும் போது அது விளைநிலம் போல் தோற்றமளிக்கும். ஆனால் சிறிய மழை பெய்தால் கூட, அது ஒரு பாறை என்பது அம்பலமாகிவிடும். மேலும் ரியாவில் ஈடுபடுவோர் தங்கள் செயலின் பலன்களை அனுபவிக்க இயலாத சூழலும் ஏற்பட்டு விடும்.
பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது: அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன. அதில் அனைத்துக் கனிகளும், அவருக்கு உள்ளன: அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறது: அப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எாித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான். (திருக்குர்ஆன் 2:266)
ரியாவினால் பாதிக்கப்பட்ட நற்செயல்களுக்கு தீயினால் எாிக்கப்படும் நல்ல பசுமையான தோட்டத்தை அல்லாஹ் உவமையாகக் கூறுகிறான். இந்த தோட்டம் எாிக்கப்படும் போது, அதன் உாிமையாளர் கையைப் பிசைந்து கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல் நிற்பார். இது போன்ற நிலை தான் தனது நற்செயல்களை ரியாவினால் வீணாக்கியவருக்கு ஏற்படும். இறுதி தீர்ப்பு நாளில் ரியாவைக் கடைப்பிடித்தவர்களை அல்லாஹ் சிறுமைப்படுத்துவான். தாங்கள் யாரைக் கவருவதற்காக செயல்களைப் புரிந்தார்களோ அவர்களிடமிருந்தே வெகுமதிகளைப் பெறுமாறு அல்லாஹ் கூறுவான்.
அண்ணல் நபி அவர்கள் கூறியதாக மஹ்மூத் இப்னு லபீத் அறிவிக்கிறார்கள்: (இறுதித்தீர்ப்பு நாளில்) மக்களின் செயல்களைக் கணக்கிடும் போது, (ரியாவைக் கடைப்பிடித்தவர்களிடம்) கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவான், யாாிடம் உங்கள் செயல்களைக் காட்டுவதற்காக செய்தீர்களோ, அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களிடம் ஏதாவது கூலி உண்டா என்று பாருங்கள். நூல்: சஹீஹ் அல் தா;கீப் வத் தக்ரீப் – எண் : 29
அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது நபி அவர்கள் தங்களிடம் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறினான்: நானே (எத்தேவையுமின்றி) தன்னிறைவு உள்ளவனாக விளங்கும் போது, எனக்குத் துணையாக யாரும் தேவையில்லை. யாரேனும் எனக்கு வேறொருவரை இணை வைக்கும் விதத்தில் ஒரு செயலைச் செய்தால், (எனது உதவியின்றி) அவருடைய இணைவைப்புடன் அவனை நான் விட்டுவிடுகிறேன். நூல்: முஸ்லிம், அஹ்மத், இப்னுமாஜா
அல்லாஹ்வின் தூதா; அவர்கள் சொன்னதாக உபை இப்னு காப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
‘இந்த மார்க்கத்தின் மூலமாக சிரமமின்மையும், கண்ணியமும், கவுரவமும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவியும், பூமியிலிருந்து வலிமையும் உண்டு என்று இந்த சமுதாயத்திற்கு நன்மாராயம் கூறுவீராக. எனவே, இந்த உலகத்தை மனதிற்கொண்டு ஒருவர் மறுமைக்குாிய செயலைச் செய்தால், அதன் லனின் எந்த ஒரு பாகத்தையும் அவர் மறுமையில் அடைய மாட்டார். நூல்: சஹீஹ் தா;கீப் வல் தா;ஹீஹ்
- அல்லாஹ்விடம் அவமானப்படுதல்
புகழுக்காகவும், பெருமைக்காகவும் நற்செயகளைப் புரிவோருக்கு இந்த உலகிலேயே அவர்கள் நாடியது கிடைத்து விடும் என்ற போதிலும், இறுதித் தீர்ப்பு நாளில் அவர்கள் முழுமையாக அல்லாஹ்வினால் அவமானப்படுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னதாக முஅத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
‘இந்த உலகில் புகழின் ஸ்தானத்தில் இருந்து பகட்டாக அதனைக் காட்டிக் கொண்ட எந்தவொரு மனிதனையும், இறுதித் தீர்ப்பு நாளில் தனது படைப்புகள் அனைத்தின் முன்பும் அம்பலப்படுத்தாமல் அல்லாஹ் விட மாட்டான்” நூல்: சஹீஹ் அத்தா;கீப் வத் தா;ஹீப்
அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
‘தனது செயல்களைப் பற்றி மற்றவர்களிடம் எவர் பகட்டாகக் காட்டிக் கொள்கிறாரோ, அவரை அல்லாஹ் தனது படைப்பினங்கள் முன்பு சிறுமைப்படுத்தி கண்ணியத்தைக் குலைத்து அவனை இகழ்வான்.” நூல்: சஹீஹ் அத் தா;கீப் வத் தா;ஹீப்