– சுவனத் தென்றல்
அலிஃப். லாம். மீம். இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும்.அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள். மேலும், உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் (குர்ஆன்) மீதும், உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்கள். இறுதித் தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள்.இத்தகையோரே தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் பலராலும் விமர்சையாகக் கொண்டாடப்படக்கூடிய ஆங்கிலப் புத்தாண்டில் ஒவ்வொரு முஸ்லிமும் என்ன செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது என்பதைத் தெரிந்துக் கொள்வதற்கு முன்புஇ தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய காலண்டர்களைப் பற்றியும் அவைகள் எவற்றை அடிப்படையாகக் கொண்டது? அந்தக் காலண்டர்கள் எவ்வாறு தோன்றியது? என்பது பற்றியும்இ முஸ்லிம்களாகிய நாம் எந்த காலண்டரைஇ ஏதற்காக பின்பற்ற வேண்டும்? என்பது பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
சூரிய மற்றும் சந்திரக் கணக்கு காலண்டர் (ளுழடயச யனெ டுரயெச ஊயடநனெயச):
உலகில் வாழும் பல்வேறு இன மக்களும் பலவகையான காலண்டர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். பொதுவாக ஆண்டுகளைக் கணக்கிடும் போது சூரியன் மற்றும் சந்திரன்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகின்றனர். அவ்வகையில் பூமி மற்றும் சூரியனின் சுழற்ச்சியை அடிப்படையக் கொண்டு கணக்கிடப்படுவதை ‘சோலார் காலண்டர்’ அல்லது ‘கிரிகோரியன் காலண்டர்’ என்றும் சந்திரனின் தோற்றம் மற்றும் மறைவை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவதை ‘லூனார் காலண்டர்’ அல்லது ‘ஹிஜ்ரி காலண்டர்’ என்றும் அழைக்கின்றனர்.
கிரிகோரியன் காலண்டர்! (புசநபழசயைn உயடநனெயச)
தற்போது உலக அளவில் நாம் பயன்படுத்திவரும் சோலார் காலண்டர்இ கிரிகோரியன் என்ற கிறிஸ்தவ பாதியாரால் வடிவமைக்கப்பட்டதால் இதை ‘கிரிகோரியன் காலண்டர்’ என்கிறோம். இந்த காலண்டரின் கணக்கீட்டின்படி ஒரு ஆண்டின் துவக்கம் மற்றும் முடிவு என்பது சூரியனின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இதனடிப்படையில் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் இருக்கிறது.
ஹிஜ்ரி காலண்டர்: (ர்தைசைi ஊயடநனெயச)
ஒவ்வொரு மாதத்தின் முதலில் தோன்றி இறுதியில் மறையக் கூடிய சந்திரனை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுகள் கணக்கிடப்படுவதால் இவ்வகை காலண்டர் ‘லூனார் காலண்டர்’ என்ப்படுகிறது. இந்தக் காலண்டர் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்ததை ஆரம்பமாக வைத்து அந்த ஆண்டை முதலாவதாக வைத்து துவங்குவதால் லூனார் காலண்டர் ‘ஹிஜ்ரி காலண்டர்’ என்று அழைக்கப்படுகிறது. லூனார் காலண்டரின் அடிப்படையில் ஒரு ஆண்டில் 354 நாட்கள் இருக்கிறது.
கிரிகோரியன் காலண்டரின் வரலாறு!!
பழங்காலம் முதற்கொண்டு பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் பழமைவாய்ந்த ஏதெனியன் காலண்டர்இ ரோமன் காலண்டர்இ சுமேரியன் காலண்டர்இ மாயன் காலண்டர் போன்ற பலவகையாக காலண்டர்களைப் பயன்படுத்தி வந்தனர். தற்போது உலக மக்கள் பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ‘கிரிகோரியன் காலண்டர்’ என்பது இதற்கு முந்தைய ரோமர்கள் பயன்படுத்தி வந்த ‘ரோமன் காலண்டர்’ மற்றும் ‘ஜூலியன் காலண்டரின்’ புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பாகும்.
ரோமர்கள் பயன்படுத்தி வந்த காலண்டரான ‘ரோமன் காலண்டர்’ அல்லது ‘ஜூலியனுக்கு முந்தைய காலண்டர்’ (pசந-தரடயைn ஊயடநனெயச) என்பது ‘ரோமுலுஸ்’ என்ற ரோமானிய மன்னரால் கி.மு. 753 -ல் அறிமுகப்படுத்தப்பட்டதாகும் இவ்வகை காலண்டரில் ஆரம்பத்தில் ஓர் ஆண்டிற்கு பத்து மாதங்களைக் கொண்ட 304 நாட்கள் தான் இருந்ததது. இதில் ஆண்டின் துவக்கம் மார்ச் மாதமாகும். குளிர் காலமாகிய ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் இந்தக் காலண்டரில் இருக்கவில்லை. பின்னர் கி.மு. 700 ஆம் ஆண்டு ரோமானிய மன்னர் நூமா பாம்பிலியஸ் (ரேஅய Pழஅpடைரைள) என்பவர் ரோமுலுஸ் உருவாக்கிய காலண்டரை சீரமைத்து விடுபட்ட மாதங்களைச் சேர்த்து வருடத்திற்கு 354 அல்லது 355 நாட்கள் என்ற அடிப்படையிலான புதிய ரோமன் காலண்டரை உருவாக்கினார்.
ஜனவரிஇ பிப்ரவரி மாதங்களை இணைத்த பிறகும் பருவ நிலைகளுக்கு ஏற்றார் போல் அவர்களுடைய காலண்டர் ஒரே சீராக இல்லாததால் பலவகை மாற்றங்களைச் செய்து பார்த்தனர். பருவ காலங்களுக்கு ஏற்றார் போல் ‘ரோமன் காலண்டரில்’ நாட்களை கூட்டியும் குறைத்தும் வந்தனர். அதற்கென நியமிக்கப்பட்ட வல்லுனர்கள் குழு இந்தக் காலண்டரை பராமரிப்பதற்கென தேவைப்பட்டனர். பான்டிபிளெக்ஸ் மேக்ஸிமஸ் (pழவெகைநஒ அயஒiஅரள) என்ற கிறிஸ்தவப் பாதியார் இக்குறைகளை நீக்குவதற்காக பதிமூன்றாவது மாதம் ஒன்றையும் ஆண்டின் இடையில் சொருகினார்.
ரோமன் காலண்டரில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் கருதியதால் அவற்றைக் களைந்து ‘ஜூலியஸ் ஸீஸர்’ என்ற ரோமானிய மன்னரால் அலெக்ஸான்டரியாவைச் சேர்ந்த வானவியல் வல்லுனர் ‘சோஸிஜீன் (ளுழளபைநநெ)’ என்பரின் உதவியைக் கொண்டு கி.மு. 45 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் ‘ஜூலியன் காலண்டர்’ என்பதாகும். ஜூலியஸ் ஸீஸருக்கு அடுத்தபடியாக வந்த ‘ஆகஸ்டஸ்’ என்ற ரோமப் பேரரசர் இந்த காலண்டரில் மேலும் சீர்திருத்தம் செய்து ‘ஜூலியஸ் ஸீஸர்’ உருவாக்கிய காலண்டரில் உள்ள தவறுகளை சரிசெய்தார்.
வருடத்திற்கு 355 நாட்கள் என்றிருந்த ரோமன் காலண்டரில் புதிதாக நாட்களை சேர்த்து வருடத்திற்கு 365.25 நாட்கள் என்று மாற்றியமைத்தனர். கி.பி. 1582 ஆம் ஆண்டு வரை ஐரோப்பிவின் கிறிஸ்தவ உலகினரால் இந்த ஜூலியன் காலண்டரே பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஜூலியன் காலண்டரில் காணப்பட்ட லீப் ஆண்டை கணக்கிடுவதில் பல சிக்கல்கள் இருந்ததால் அவற்றைச் சரிசெய்துஇ கிறிஸ்தவர்களின் போப் கிரிகோரி ஓஐஐஐ என்பவரால் 1582 ஆம் ஆண்டு துவக்கப்பட்டதே தற்போது உலகின் பெரும்பான்மையானவர்களால் பின்பற்றப்படும் ‘ஆங்கிலேயக் காலண்டர்’ எனப்படும் ‘கிரிகோரியன் காலண்டர்’ ஆகும். இது ‘வெஸ்டர்ன் காலண்டர்’ எனவும்இ ‘கிறிஸ்தவக் காலண்டர்’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்த காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றிவரும் நாடுகளால் இந்த கிரிகோரியன் காலண்டர் உடனே அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக சில நூற்றாண்டுகளில் புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் மற்றும் மற்ற சமயத்தவர்களின் நாடுகளிலும் அமல்படுத்தப்பட்டு இன்று உலக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.
கிரிகோரியக் காலண்டரின் மாதங்களின் பெயர் காரணங்கள்:
ஜனவரி – ‘துயரௌ’ என்ற கதவுகளின் கடவுளின் (பழன ழக பயவநள ரூ னழழச) பெயரால் லத்தீன் மொழியில் ‘துயரெயசரைள’ என்றழைக்கபட்டடது. இதுவே தற்போது ஆங்கிலத்தில் ‘துயரெயசல’ என்றழைக்கப்படுகிறது.
பிப்ரவரி – தூய்மைத் திருநாளான ‘குநடிசரய’ என்ற பெயரால் லத்தீன் மொழியில் ‘குநடிசரயசரைள’ என்றழைக்கபட்டடது. இதுவே தற்போது ஆங்கிலத்தில் ‘குநடிசயரயசல’ என்றழைக்கப்படுகிறது
மார்ச் – ‘ஆயசள’ என்ற கடவுளின் பெயரால் லத்தீன் மொழியில் ‘ஆயசவரைள’ என்றழைக்கபட்டடது. இதுவே தற்போது ஆங்கிலத்தில் ‘ஆயசஉh’ என்றழைக்கப்படுகிறது.
ஏப்ரல் – ‘யுphசழனவைந’ என்ற பெண் கடவுளின் பெயரால் அல்லது ‘யிநசசைந’ என்ற லத்தீன் சொல்லிலிருந்து ‘யுpசடைளை’ என்றழைக்கபட்டடது. இதுவே தற்போது ஆங்கிலத்தில் ‘யுpசடை’ என்றழைக்கப்படுகிறது.
மே – ‘ஆயயை’ என்ற பெண் கடவுளின் பெயரால் லத்தீன் மொழியில் ‘ஆயரைள’ என்றழைக்கபட்டடதாக கருதப்படுகிறது. இதுவே தற்போது ஆங்கிலத்தில் ‘ஆயல’ என்றழைக்கப்படுகிறது.
ஜூன் – ‘துரழெ’ என்ற பெண் கடவுளின் பெயரால் லத்தீன் மொழியில் ‘துரnரைள’ என்றழைக்கபட்டடதாக கருதப்படுகிறது. இதுவே தற்போது ஆங்கிலத்தில் ‘துரநெ’ என்றழைக்கப்படுகிறது.
ஜூலை – பத்து மாதங்களை மட்டுமே கொண்ட பழைய ரோமன் காலண்டரில் ‘ஐந்தாவது’ மாதம் என்பதைக் குறிக்கக்கூடிய ‘ஙரiவெரள’ என்ற வார்த்தையிலிருந்து லத்தீன் மொழியில் ‘ஞரiவெடைளை’ என்றழைக்கப்பட்டது. பின்னர் ரோமானியப் பேரரசர் ‘ஜூலியஸ் ஸீஸரை’ கவுரவப்படுத்துவதற்காக அவரின் பிறந்த மாதமான ‘ஞரiவெடைளை’ என்ற மாதத்தின் பெயரை கி.மு. 44 ஆம் ஆண்டு ‘துரடரைள’ என்று மாற்றியமைத்தனர். இதுவே தற்போது ஆங்கிலத்தில் ‘துரடல’ என்றழைக்கப்படுகிறது.
ஆகஸ்ட் – பத்து மாதங்களை மட்டுமே கொண்ட பழைய ரோமன் காலண்டரில் ‘ஆறாவது’ (ளiஒவா) மாதம் என்பதைக் குறிக்கக்கூடிய ‘ளநஒவரள’ என்ற வார்த்தையிலிருந்து லத்தீன் மொழியில் ‘ளுநஒவடைளை’ என்றழைக்கப்பட்டது. பின்னர் ரோமானியப் பேரரசர் ‘ஆகஸ்டஸ்’ (யுரபரளவரள) என்பவரை கவுரவப்படுத்துவதற்காக அவருடைய ஆட்சியில் முக்கிய நிகழ்வுகள் நடந்த மாதமான ‘ளுநஒவடைளை’ என்ற மாதத்தின் பெயரை கி.மு. 8 ஆம் ஆண்டு ‘யுரபரளவரள’ என்று மாற்றியமைத்தனர். இதுவே தற்போது ஆங்கிலத்தில் ‘யுரபரளவ’ என்றழைக்கப்படுகிறது.
செப்டம்பர் – பத்து மாதங்களை மட்டுமே கொண்ட பழைய ரோமன் காலண்டரில் ஏழாவது (ளநஎநவொ) மாதம் என்பதைக் குறிக்கக்கூடிய ளநிவநஅ என்ற வார்த்தையிலிருந்து லத்தீன் மொழியில் ளுநிவநஅடிநச என்றழைக்கப்பட்டது.
அக்டோபர் – பத்து மாதங்களை மட்டுமே கொண்ட பழைய ரோமன் காலண்டரில் ‘எட்டாவது’ (நiபாவா) மாதம் என்பதைக் குறிக்கக்கூடிய ‘ழஉவழ’ என்ற வார்த்தையிலிருந்து லத்தீன் மொழியில் ‘ழுஉவழடிநச’ என்றழைக்கப்பட்டது.
நவம்பர் – பத்து மாதங்களை மட்டுமே கொண்ட பழைய ரோமன் காலண்டரில் ‘ஒன்பதாவது’ (niவொ) மாதம் என்பதைக் குறிக்கக்கூடிய ‘ழெஎநஅ’ என்ற வார்த்தையிலிருந்து லத்தீன் மொழியில் ‘ழேஎநஅடிநச’ என்றழைக்கப்பட்டது.
டிசம்பர் – பத்து மாதங்களை மட்டுமே கொண்ட பழைய ரோமன் காலண்டரில் ‘பத்தாவது’ (வநவொ) மாதம் என்பதைக் குறிக்கக்கூடிய ‘னநஉநஅ’ என்ற வார்த்தையிலிருந்து லத்தீன் மொழியில் ‘னுநஉநஅடிநச’ என்றழைக்கப்பட்டது.
குறிப்பு: பண்டைய ரோமன் காலண்டரில் ஜனவரி மற்றும் பிப்ரவரியைத் தவிர்த்து பத்து மாதங்கள் மட்டும் தான் இருந்தது என்று நாம் ஏற்கனவே மேலே குறிப்பிட்டிருந்தோம்.