காதலின் பெயரால் காமத்தின் விளையாட்டு..! அநாகரிகத்தின் பெரும் ஆபத்து.,!அண்மைக் காலமாக பொதுமக்கள் மத்தியில் பரவிவரும் காதலர் தினம் பற்றி அறிஞர் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்களிடம் கீழ்க்கண்டவாறு வினவப்பட்டது:
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக…!
சமீப காலமாக காதலர் தினம் கொண்டாடி மகிழ்வது பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக மாணவிகள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகின்றது. காலணி முதல் தலையணி வரை முற்றிலும் சிவப்பு நிறத்தால் ஆன ஆடைகளை அணிந்து, இந்நிகழ்ச்சியை ஒரு பண்டிகையாக கொண்டாடும் கிறித்துவர்கள், தங்களுக்கிடையே சிவப்பு நிற மலர் கொத்துக்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இது போன்ற நிகழ்ச்சிகளை முஸ்லிம்கள் கொண்டாடுவது, அல்லது இது போன்ற நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது பற்றி முஸ்லிம்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை…!
அறிஞர் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் அளித்த விளக்கம்:
உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக…
காதலர் தினம் என்ற நிகழ்ச்சியை கொண்டாடுவதற்கோ அல்லது அதுபோண்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கோ கீழக்கண்ட காரணங்களால் இஸ்லாத்தில் ஒருபோதும் அனுமதியில்லை.
1. காதலர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒரு (பித்அத்) அநாச்சார புதினமாகும்.
2. காதலர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்காத தவறான வழிகளில் உருவாகும் காதல் மற்றும் தீய பழக்கங்க ஊக்குவிக்கின்றன.
3.இதுபோன்ற நிகழ்ச்சிகள் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மனதில் தவறான எண்ணங்களை உருவாக்குவதோடு, நபிவழிக்கு முற்றிலும் முரணாணதாகும்.
காதலர் தினம் போன்ற நாட்களில் உணவோ, உடையோ அல்லது குடிபானங்களோ எதுவாக இருந்தாலும்,இஸ்லாம் அனுமதித்த முறைக்கு மாற்றமாக இருக்குமாயின் அதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து முற்றிலும் விலகி இருப்பதே உண்மையான முஃமின்-இறைநம்பிக்கையாளனுக்கு உகந்ததாகும்.
நெறிமுறையின்றி எல்லாவற்றையும் பின்பற்றுவோம் என்ற நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில், நெறியுடன் வாழும் முறைகளை மட்டுமே பின்பற்றுவோம் என்ற கொள்கையை உறுதியோடு செயல்படுத்தும் இஸ்லாமிய மார்க்கத்தை சார்ந்தவராக இருப்பதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் பெருமிதம் கொள்ள வேண்டும். தெரிந்தோ அல்லது தெரியாமலோ இருக்கின்ற இதுபோன்ற (பித்அத்) அநாச்சார செயல்களில் ஈடுபடுவதில் இருந்தும் நம்மை காப்பாற்றி, நேர்வழி காட்ட போதுமானவன் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனே…!
-தமிழாக்கம் – சகோ.அபு இஸாரா