Main Menu
قناة الجامع لعلوم القرآن - Al-Jami' Channel for Quranic Sciences

இறைவனை சந்தியுங்கள் தூய்மையுடன்..! 2

-சுவனத்தென்றல்

ஒளூ செய்யும் முறை

http://youtu.be/7DMotAOXtIE

உளூ செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைகள்: –

– கை கால்களைக் கழுவும் போது முதலில் வலது புறத்திலிருந்து ஆரம்பம் செய்ய வேண்டும்.

– நபி (ஸல்) அவர்கள் கை, முகம்,கால்களைக் கழுவும் போதும், வாய்கொப்பளிக்கும் போதும் பெரும்பாலான சந்தர்பங்களில் மூன்று முறை செய்துள்ளார்கள். இரண்டு முறையும் ஒரு முறையும் கூட செய்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான சந்தர்பங்களில் மூன்று முறை செய்திருப்பதால் நாமும் மூன்று செய்வதே சிறந்தது என அறிஞர்கள் கூறுகின்றனர்.

– உளுவை இடைவெளியில்லாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். (ஒரு உறுப்பு காய்வதற்குள் மற்ற உறுப்பை கழுவவேண்டும்.)

உளூ செய்து முடித்தவுடன் ஓதும் துஆ: –

“அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹ்” என்று கூறவேண்டும்.

‘உங்களில் ஒருவர் உலூச் செய்யும் போது அவ்வுலூவை அழகுறச் செய்து, அவர் அதை நிறைவு செய்யும் போது அஷ்ஹது

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)

அன்லாயிலாஹ இல்லல்லாஹுவஹ்தஹு லாஷரீக லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹுவரசூலுஹு (வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் தவிர யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணையில்லை என்று நான் சான்று பகர்கின்றேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும், திருத்தூதரும் ஆவார்கள் என்றும் சான்று பகர்கின்றேன்) என்று கூறினால் அவருக்காக எட்டு சுவனங்களின் வாயில்கள் திறக்கப்பட்டு விடும். அவற்றில் அவர் விரும்பிய எதிலும் நுழையலாம். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) ஆதாரம் : அபூதாவுத்

உளூ செய்து முடித்ததும் ஓதக் கூடிய மற்றொரு துஆ: –

‘அல்லாஹூம்மஜ்அல்னீ மினத்தவ்வாபீ(B) வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன்’

உளுவை முறிக்கும் செயல்கள்: –

சில செயல்களால் உளு முறிந்து விடும். இவைகளில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்து விட்டால் மீண்டும் உளு செய்த பிறகே தொழவேண்டும். அவைகள்:

– மல ஜலம் கழித்தல்

– காற்று பிரிதல்

உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது தனது வயிற்றுக்குள் இறைச்சலை உணர்ந்து தான் ஹதஸ் ஆகிவிட்டோமா அல்லது ஹதஸ் ஆகவில்லையா என்று சந்தேகம் கொண்டால் அவர் சப்தத்தை கேட்கின்ற வரை அல்லது நாற்றத்தை உணர்கின்ற வரை தொழுகையை முறிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். ஆதாரம் : அபூதாவுத் (ஆடியோ)

– இச்சை நீர் வெளிப்படல்

– அயர்ந்து தூங்குதல்

– ஒட்டக மாமிசம் உண்ணுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால் உளு செய்ய வேண்டுமா? எனக் கேட்ட போது ஆம் என்றார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

– ஆட்டிறைச்சி சாப்பிட்டால் உளூ முறியாது: –

‘நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் ஆட்டுத் தொடை இறைச்சியைச் சாப்பிட்டார்கள். பின்னர் (அதற்காக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்” என மைமூனா(ரலி) அறிவித்தார்

– இன உறுப்பை இச்சையுடன் தொட்டால் உளூ முறிந்து விடும்: –

உங்களில் ஒருவர் தனது மர்ம பாகத்தைத் தொட்டுவிட்டால் அவசியம் அவர் உளு செய்து கொள்ளவும். அறிவிப்பவர்: புஷ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி),  ஆதாரம் : அபூதாவூது

– இச்சையில்லாமல் இன உறுப்பை தொட்டால் உளூ முறியாது.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையில் ஒரு ஆடவர் தன் ஆண்குறியைத் தொட்டு விடுகிறார். அவரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எனக் கேட்டபோது அதுவும் உனது உடலிலுள்ள ஒரு சதைத்துண்டே தவிர வேறில்லை அல்லது உன்னிலுள்ள சதைத்துண்டுதானே! எனக் கூறினர்.

அறிவிப்பவர்: தல்கு பின் அலி (ரலி), ஆதாரம் :இப்னுமாஜா

மேற்கண்ட ஸஹீஹான ஹதீஸ்களிலிருந்து, ஒருவர் இச்சையோடு மர்ம உறுப்பை தொட்டால் உளு முறிந்து விடும். இச்சையுடன் இல்லாமல் ஏதேச்சையாக தொட்டால் உளூ முறியாது எனவும் மீண்டும் உளு செய்ய வேண்டியதில்லை என்பதையும் அறியலாம்

தயம்மும்: –

உளு செய்யவோ, குளிக்கவோ தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் அல்லது தண்ணீர் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நோய் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் உளு மற்றும் குளிப்புக்கு பகரமாக தயம்மும் செய்து தொழுகையை நிறை வேற்றலாம். ஏனென்றால் எக்காரணத்தைக் கொண்டும் தொழுகையை விடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

தயம்மும் செய்யும் முறை: –

தூய்மையான மண்ணில் இரண்டு உள்ளங்கைகளையும் ஒரு முறை அடித்து அதனை முகத்தில் தடவிவிட்டு பிறகு அதனைக் கொண்டு இரண்டு முன்னங்கையில் தடவவேண்டும். இதுவே தயம்மும் செய்யும் முறையாகும். (தயம்மும் கட்டுரை , 

Related Post