அல்லாஹ் பார்க்கின்றானே..!

ல்லாஹ் பார்க்கின்றானே..!
அல்லாஹ் பார்க்கின்றானே..! அலிஃப், லாம், மீம், இவை ஞானம் செறிந்த வேதத்தின் வசனங்களாகும்.  இது நற்செயல் புரிபவர்களுக்கு வழிகாட்டியாகவும் அருட்கொடையாகவும் திகழ்கின்றது.

அல்லாஹ் பார்க்கின்றானே..!
அலிஃப், லாம், மீம், இவை ஞானம் செறிந்த வேதத்தின் வசனங்களாகும்.  இது நற்செயல் புரிபவர்களுக்கு வழிகாட்டியாகவும் அருட்கொடையாகவும் திகழ்கின்றது.

லிஃப், லாம், மீம், இவை ஞானம் செறிந்த வேதத்தின் வசனங்களாகும்.  இது நற்செயல் புரிபவர்களுக்கு வழிகாட்டியாகவும் அருட்கொடையாகவும் திகழ்கின்றது.  அவர்களோ தொழுகையை நிலைநிறுத்துகிறார்கள். ஜகாத்தைக் கொடுக்கிறார்கள். மேலும், மறுமையை உறுதியாக நம்புகின்றார்கள்இத்தகையவர்கள்தாம் தங்கள் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருக்கிறார்கள். மேலும், இவர்கள்தாம் வெற்றி பெறுபவர்கள். மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். அவர்கள், எவ்வித அறிவுமின்றி மக்களை அல்லாஹ்வின் வழியை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அந்த வழியி(ல் வருமாறு விடுக்கப்படும் அழைப்பி)னை ஏளனம் செய்வதற்காகவும்தான்! இத்தகையோருக்கு இழிவுபடுத்தும் வேதனை உள்ளது.
சஊதி அரேபிய நாட்டு அறிஞர், அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் பின் அப்துல் முஹ்சின் அல்பbத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
அல்லாஹ் நன்கு செவியேற்பவன்; அவன் பார்ப்பவன்; அவன் அனைத்தையும் நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றில் அணுவளவும் அவனுக்கு மறைந்திருக்காது; ரகசியத்தையும், மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; கண்களின் மோசடியையும், உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; அனைத்தையும் அறிவால் அவன் சூழ்ந்திருக்கின்றான்; மேலும், அனைத்தையும் எண்ணிக்கையால் அவன் கணக்கிட்டும் வைத்துள்ளான் என்பன போன்ற இவ்விடயங்களை ஒருவன் சரியாக அறிந்துகொண்டால் அவனுக்கு இவை, நாவையும் ஏனைய உடல் உறுப்புகளையும் பாதுகாத்துக்கொள்ளும் நல்ல பலாபலனைக் கொடுக்கும்!.
அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?” (அல்குர்ஆன், 96:14)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ்வை நீங்கள் அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவன்; நன்கறிந்தவன்” (அல்குர்ஆன், 49:01)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக உங்கள் உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் நன்கறிகிறான் என்பதை அறிந்து, அவனை நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள்!” (அல்குர்ஆன், 02:235)
இரவு வேளையில், பாலைவனத்தில் வைத்து ஒரு பெண்மீது ஒருவன் மோகம் கொண்டு பாலியல் ஆசையைத் தீர்த்துக் கொள்ள அவளை அவன் அழைத்தான். அவளோ அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டாள்!. அப்போது அவன் அவளிடம், ‘நட்சத்திரங்களைத் தவிர வேறு யாரும் எம்மைப் பார்க்கவில்லையே!’ என்றான். அதற்கவள், ‘அந்நட்சத்திரங்களைப் படைத்தவன் எம்மைப் பார்த்துக்கொண்டிருக்கின்றானே!’ என்று விடையளித்தாள்.
இந்த சம்பவத்தை, அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் தனது ‘தம்முல் ஹவா’ என்ற நூலில், பக்கம் 272-ல் குறிப்பிடுவதாக அல்லாமா இப்னு ரஜப் அல்ஹன்பbலீ (ரஹ்) கூறுகின்றார்கள்.
{ ஆதார நூல்: ‘பிfக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா’, பக்கம்: 26,27 }
தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Related Post