“நடுநிலை” என்பதன் வரையறை!
– மு.அ அப்துல் முஸவ்விர்
உலகின் அனைத்து அம்சங்களும் இருவிதமான செயற்பாடுகளுடன் இயங்குகின்றன. ஒன்று தாம் கொண்டிருக்கின்ற அம்சங்களில், இன்னொன்று கூட்டு ரீதியான அம்சங்களில்..!
நடுநிலை என்பது குறித்த பல்வேறு கோணங்களை அலசி விளக்கும் முன்னர், நடுநிலை எனும் கருத்தாக்கம் எங்கெங்கு பயன்படுத்தப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்பதை அறிவது அவசியமாக இருக்கினறது. அல்லது மார்க்கம் தொடர்பான அம்சங்களில் அதன் கருத்தாக்கம் என்ன என்பது குறித்தும் அறிய முடியும். இதன் மூலம் மார்க்கம் தொடர்பான கொள்கை-கோட்பாடுகள் மற்றும் ஒழுக்கங்கள் குறித்து ஒரு துல்லிய ஆக்கபூர்வ முடிவுக்கு வரமுடியும். இதன் உள்ளார்ந்த பொருள் பயன்பாட்டுக்குள் நுழையும் முன்னர், உலகியல் பயன்பாட்டு ரீதியாக, “நடுநிலை” என்பதன் வரையறை என்னவென்பதை அறிந்துகொள்வோமா..?
நடுநிலை என்பது வாழ்வியலின் அனைத்துத் துறைகள் தழுவிய அம்சங்களில், பழமைவாத-தீவிரத்தனம் மற்றும் புதுமைவாத-நவீனத்துவம் ஆகிய இரண்டுக்குமிடையிலான, எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையிலான பயன்பாட்டு சித்தாந்த நிலையே நடுநிலை எனப்படுகின்றது. வேறு வார்த்தைகளில் கூறினால், நடுநிலை என்பது, அதிகபட்சமான மற்றும் அசட்டையான நிலை ஆகிய இரண்டுக்குமான ஆக்கபூர்வ நிலையே நடுநிலை ஆகும். மேலதிகமான மற்றும் குறையுடன் கூடிய நிலைகளுக்கிடைப்பட்ட நிலை ஆகும். “நடுநிலை” என்பதன் வரையறை! சாதாரணமான மற்றும் அசாதாரணமான நிலைகளுக்கிடைப்பட்ட நிலை ஆகும்.
இத்தகைய இருவேறுபட்ட மீப்பெரு அற்றும் மீச்சிறு நிலைகளுக்கடையிலான, எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியதொரு ஒரு பொருத்தமான நடுநிலை வாழ்க்கை முறையை வழங்குவதே இஸ்லாமிய கோட்பாட்டின் உன்னத தாத்பர்ய அம்சமாகும். அது வாழ்க்கையின் உறவுமுறைகள், வணக்க வழிபாடுகள், பழக்கவழக்கங்கள், கொடுக்கல்-வாங்கல்கள், சமூகம், அரசியல் மற்றும் அனைத்துவித தனிப்பட்ட மற்றும் கூட்டு நிலைகள் என அனைத்து பரிமாணங்களிலும் எதிரெலிக்கின்றது எனில் அது மிகையல்ல.
நடுநிலையே நம் நிலை..!
“எங்கள் அதிபதியே! உன்னையே நாங்கள் முழுமையாகச் சார்ந்திருக்கின்றோம். உன் பக்கமே நாங்கள் மீண்டுவிட்டோம். உனது திருச்சமூகத்திற்கே நாங்கள் திரும்பிவரவேண்டி இருக்கின்றது. எங்கள் அதிபதியே! நிராகரிப்பாளர்களுக்கு எங்களை ஒரு சோதனையாய் ஆக்கிவிடாதே! எங்கள் அதிபதியே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருள்! ஐயமின்றி நீயே வல்லமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றாய்.” அதே மக்களுடைய நடத்தையில் உங்களுக்கும், அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்ற ஒவ்வொருவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. எவரேனும் இதனைப் புறக்கணித்தால், அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான். உங்களுக்கும், நீங்கள் (இன்று) யாருடன் பகைமை கொண்டிருக்கின்றீர்களோ அவர்களுக்குமிடையே அல்லாஹ் என்றைக்கேனும் அன்பை ஏற்படுத்தக்கூடும். அல்லாஹ் பேராற்றலுடையவன்; மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான். தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான். அவன் தடுப்பதெல்லாம் எவர்கள் தீன் தொடர்பாக உங்களுடன் போர் புரிந்தார்களோ, உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றினார்களோ மேலும், உங்களை வெளியேற்றுவதில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டார்களோ அவர்களுடன் நீங்கள் நட்பு கொள்வதைத்தான்! அவர்களுடன் எவரேனும் நட்பு கொண்டால் அவர்களே கொடுமையாளர்கள் ஆவர்.திருக் குர்ஆன்