ஹஜ் ஒரு விளக்கம் 1

ஹஜ் ஒரு விளக்கம் 1
– இஸ்மாயில் ஸலஃபி
எப்பொருளையும் என்னோடு இணையாக்காதீர்; மேலும் தவாஃப் சுற்றி வருவோர்க்காகவும் நின்றும் குனிந்தும் தரையில் சிரம் வைத்தும் வணங்குவோர்க்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!

எப்பொருளையும் என்னோடு இணையாக்காதீர்; மேலும் தவாஃப் சுற்றி வருவோர்க்காகவும் நின்றும் குனிந்தும் தரையில் சிரம் வைத்தும் வணங்குவோர்க்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!

நாம் இப்ராஹீமுக்கு (கஅபா எனும்) இந்த ஆலயத்தின் இடத்தை பின்வரும் கட்டளையுடன் நிர்ணயம் செய்து கொடுத்த சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள்: ‘எப்பொருளையும் என்னோடு இணையாக்காதீர்; மேலும் தவாஃப் சுற்றி வருவோர்க்காகவும் நின்றும் குனிந்தும் தரையில் சிரம் வைத்தும் வணங்குவோர்க்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக! ஹஜ் செய்திட மக்களுக்குப் பொது அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் வெகு தூரமான இடங்களில் இருந்தெல்லாம் நடந்தும் ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வரட்டும்;  அவர்களுக்காக அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நன்மைகளை அவர்கள் காணட்டும் மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய கால்நடைகளை சில குறிப்பிட்ட நாட்களில் அவனது பெயர் கூறி(அறுத்தி)ட வேண்டும்; அவற்றிலிருந்து அவர்களும் உண்ண வேண்டும்; வறியவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் அளிக்க வேண்டும்;  பிறகு தங்களுடைய அழுக்குகளை நீக்க வேண்டும்; இன்னும் தங்களுடைய நேர்ச்சைகளை நிறைவேற்ற வேண்டும்! மேலும், தொன்மையான ஆலயத்தைச் சுற்றி வரவேண்டும்!  இதுதான் (கஅபா ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதன் நோக்கமாகும்!) மேலும், எவரேனும் அல்லாஹ்வினால் ‘புனித மானவை’ என்று நிர்ணயிக்கப்பட்டவைக்கு கண்ணியம் அளித்தால், அது அவருடைய அதிபதியிடத்தில் அவருக்கே பலனளிக்கத் தக்கதாகும். மேலும், உங்களுக்கு (கூடாதெனச்) சொல்லப்பட்டவற்றைத் தவிர, இதர கால்நடைகள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. எனவே, விக்கிரஹங்கள் எனும் அசுத்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். பொய்யான பேச்சுகளிலிருந்து விலகியிருங்கள்.  அல்லாஹ்வுக்கு ஒருமனப்பட்ட அடிமைகளாகத் திகழுங்கள். அவனோடு எதனையும் இணை வைக்காதீர்கள்! யாரேனும் அல்லாஹ்வுக்கு இணை வைப்பாராயின் அவர் வானத்திலிருந்து விழுந்து விட்டவரைப் போன்று ஆகிவிடுகின்றார். இனி அவரைப் பறவைகள் இறாஞ்சிக் கொண்டு செல்லும் அல்லது காற்று அவரைத் தூக்கிச் சென்று ஏதேனும் அதலபாதாளத்தில் எறிந்துவிடும்; அங்கு அவர் சின்னாபின்னமாகி விடுவார். உண்மை நிலவரம் இதுதான். (இதனைப் புரிந்து கொள்ளுங்கள்) மேலும், யாரேனும் அல்லாஹ் ஏற்படுத்திய புனிதச் சின்னங்களுக்கு கண்ணியம் அளிப்பாராயின் திண்ணமாக, அது இதயங்களில் உள்ள இறையச்சத்தால் விளைவதாகும்.  (பலிப் பிராணிகளாகிய) அவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் பயன் பெற உங்களுக்கு அனுமதியுண்டு. பின்னர், அவற்றி(னைப் பலியிடுவத)ற்கான இடம் தொன்மையான ஆலயத்தின் அருகிலாகும்!
ஹஜ் என்பது வன்முறைகளற்ற அல்லது வரம்புகளை மீறவியலாத அல்லாஹ்வின் வீடாகிய மக்கமா நகரில் அமைந்துள்ள கஃபாவைத் தரிசிப்பதும், இன்னும் சில கடமைகளையும், இவற்றை ஷவ்வால், துல்காயிதா மற்றும் துல்ஹஜ் முதல் பத்து நாட்கள் வரை நிறைவேற்றுவதையும் குறிக்கும். இந்த ஹஜ் என்னும் கடமை இஸ்லாமிய வரலாற்றில், ஹிஜ்ரத்திற்குப் பின் 9 ம் வருடத்திலிருந்து கடமையாக்கப்பட்டது.  வயது வந்த, புத்தியுள்ள, இவற்றை நிறைவேற்றச் சக்தி உள்ள ஒவ்வொரு முஸ்லிமின் மீதும், அவரது வாழ்நாளில் ஒரு முறையேனும் நிறைவேற்ற வேண்டும் என்று கடமையாக்கப்பட்டுள்ளது.
இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் : 
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. (ஏனெனில்) – நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான். (3:96-97)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், செயல்களிலேயே மிகச் சிறந்த செயல் எது? என்று கேட்ட பொழுது, அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் நம்பிக்கை கொள்வது எனக் கூறினார்கள். பின் மீண்டும், அதனை அடுத்து மிகச் சிறந்த செயல் எது என்று கேட்ட பொழுது, இறைவனுக்காக ஜிஹாதில் கலந்து கொள்வது எனக் கூறினார்கள். அடுத்து, மீண்டும் மிகச் சிறந்த செயல் எது? எனக் கேட்ட பொழுது, குறைகள் ஏதுமற்ற வகையில் ஹஜ் செய்வது எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், இன்னும் பலர்).
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஹஜ்ஜுக் கடமையை யார் வரம்புகளை மீறாமலும், உடலுறவுகளில் ஈடுபடாமலும் அல்லது இறைவனுக்கு கீழ்படியாமை போன்ற தன்மைகளில் இருந்து விலகிய நிலையில் அந்தக் கடமையை நிறைவேற்றுவார்களெனில் அவர்கள், அன்று பிறந்த பாலகர்களாக பாவங்களற்ற நிலையில் தங்களது இல்லங்களுக்குத் திரும்புவார்கள். (புகாரி, முஸ்லிம், இன்னும் பலர்).

ஊக்கம் வேண்டும் முஸ்லிம்களே..
ஹஜ்ஜுக் கடமையானது அதனை நிறைவேற்றத் தகுதிபடைத்த ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையானதொன்றாக இருந்த போதிலும், இந்தக் கடமையை தன்னுடைய உம்மத்தவர்கள் நிறைவேற்றுவதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதிக ஊக்கப்படுத்தியுள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், செயல்களிலேயே மிகச் சிறந்த செயல் எது? என்று கேட்ட பொழுது, அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் நம்பிக்கை கொள்வது எனக் கூறினார்கள். பின் மீண்டும், அதனை அடுத்து மிகச் சிறந்த செயல் எது என்று கேட்ட பொழுது, இறைவனுக்காக ஜிஹாதில் கலந்து கொள்வது எனக் கூறினார்கள். அடுத்து, மீண்டும் மிகச் சிறந்த செயல் எது? எனக் கேட்ட பொழுது, பாவங்கள் ஏதுமற்ற வகையில் ஹஜ் செய்வது எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 
எவரொருவர் கெட்ட பேச்சுக்கள், காம இச்சையைத் தூண்டக் கூடிய பேச்சுக்கள், அல்லது பெண்களுடன் உடலுறவு போன்றவற்றில் (ரஃபாத்) ஈடுபடாமல் அல்லது பாவமான காரியங்களில் ஈடுபடாமல் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றி முடிக்கின்றாரோ, அவரது பாவங்களிலிருந்து அவர் தூய்மையாக்கப்பட்டு அன்று பிறந்த பாலகன் போன்று ஆகி விடுவார். (புகாரி, முஸ்லிம்).
எப்பொருளையும் என்னோடு இணையாக்காதீர்; மேலும் தவாஃப் சுற்றி வருவோர்க்காகவும் நின்றும் குனிந்தும் தரையில் சிரம் வைத்தும் வணங்குவோர்க்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!

எப்பொருளையும் என்னோடு இணையாக்காதீர்; மேலும் தவாஃப் சுற்றி வருவோர்க்காகவும் நின்றும் குனிந்தும் தரையில் சிரம் வைத்தும் வணங்குவோர்க்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!

மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பாவங்களற்ற ஹஜ்ஜுக்குரிய கூலியானது, சொர்க்கத்தைத் தவிர்த்து வேரொன்றுமில்லை.(மாலிக், புகாரி, முஸ்லிம், இன்னும் பல).
இப்னு ஷிமாஸா என்பவர் கூறினார்: 
நாங்கள் அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்கள் மரண தருவாயில் இருந்து கொண்டிருக்கும் பொழுது, அவரது இருப்பிடத்திற்குச் சென்றோம். அவர் மிக நீண்ட நேரம் அழுது கொண்டு, அல்லாஹ் இஸ்லாத்தை என்னுடைய இதயத்திலே வைத்தான், நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, இறைத்தூதர் (ஸல்) அவர்களே தங்களது கைகளைக் கொடுங்கள், நான் எனது சத்தியத்தை தங்களிடம் வழங்க வேண்டும் என்றவுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய கரங்களை நீட்ட, நான் என்னுடைய கைகளைத் திரும்ப எடுத்துக் கொண்டேன். அப்பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அம்ரே! உனக்கு என்ன நேர்ந்தது? எனக் கேட்டார்கள். நான், உங்களிடம் ஒரு நிபந்தனையை வைக்க விரும்புகின்றேன் எனக் கூறினேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களோ, நிபந்தனையா எதற்கு? என்றார்கள். பாவ மன்னிப்பிற்காக! என நான் கூறினேன். அம்ரே! உனக்குத் தெரியாதா? எனக் கூறி விட்டு, இஸ்லாத்தில் இணைவதானது அதற்கு முன் உள்ள பாவங்களைப் போக்கி விடுகின்றது, ஹிஜ்ரத் செய்வதும் அதற்கு முன் ஒருவர் செய்த பாவங்களைப் போக்கி விடுகின்றது, ஹஜ்ஜுச் செய்வதும் ஒருவரது முந்தைய பாவங்களை மன்னித்து விடுகின்றது! என்று கூறினார்கள்.(இப்னு ஹுஸைமா)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ஜிஹாத் என்பது மிகச் சிறந்த செயலாக இருக்கின்றதே அதில் நாங்கள் கலந்து கொள்ளலாமா? எனக் கேட்ட பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஜிஹாதிலேயே மிகச் சிறந்தது, பாவங்களற்ற(நிலையில்) ஹஜ் (செய்து முடிப்பது) ஆகும். (புகாரி இன்னும் பலர்..).
உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நான் ஒரு முறை உட்கார்ந்திருந்த பொழுது, அன்ஸார்களில் இருந்து ஒரு மனிதரும், தகீஃப் குலத்தில் இருந்து ஒருவரும், ஸலாம் கூறி விட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களே! உங்களிடம் நாங்கள் ஒரு கேள்வியைக் கேட்க வந்திருக்கின்றோம் எனக் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களோ நீங்கள் விரும்பினால் நீங்கள் எதைப் பற்றிக் கேட்க வந்திருக்கின்றீர்கள் என்பதைப் பற்றி உங்களுக்கு நான் தெரிவிக்கின்றேன், இல்லையேல் (உங்களைக் கூற விட்டு) நான் மௌனமாக இருக்கின்றேன் எனக் கூறினார்கள். தகீப் குலத்தவரோ தன்னுடன் வந்த அன்ஸாரித் தோழரைப் பார்த்து நீயே கேளும் எனக் கூறினார்கள். ஆனால் அந்த அன்ஸாரித் தோழரே இறைத்தூதர் (ஸல்) அவர்களே நீங்களே கூறுங்கள் எனக் கூறினார்.

வரம்புகளை மீறவியலாத அந்த வீட்டிற்கு (கஃபாவிற்கு) எவ்வாறு பயணப்படுவது என்பது குறித்தும், தவாஃபிற்குப் பின் உள்ள இரண்டு ரக்அத் துக்கள் குறித்தும், நீங்கள் ஸஃபா மற்றும் மர்வாவிற்கு இடையில் ஸயீ செய்வது குறித்தும், அரஃபாவில் தங்குவது குறித்தும், (ஷைத்தானிற்கு) கல்லெறிவது குறித்தும், குர்பானிப் பிராணிகளை எவ்வாறு பலியிடுவது என்பது குறித்தும், பயண தவாஃப் செய்வது குறித்தும் நீங்கள் என்னிடம் கேள்வி கேட்க வந்திருக்கின்றீர்கள் என்று கூறி முடித்தார்கள்.

கள்வி கேட்க வந்த அந்த அன்ஸாரித் தோழர் கூறினார், சத்தியத்தைக் கொண்டு உங்களை எவன் அனுப்பி வைத்தானோ அவன் மீது சத்தியமாக, இதனைத் தான் உங்களிடம் நான் கேட்க வந்தேன் எனக் கூறினார்.

வரம்புகளை மீறவியலாத அந்த வீட்டிற்கு (கஃபாவிற்கு) நீங்கள் உங்கள் இல்லங்களை விட்டுக் கிளம்பும் பொழுது, உங்களது ஒட்டகம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு காலடிக்கும், அது தன் காலைத் தரையில் வைக்கின்ற ஒவ்வொரு அடிக்கும் அல்லாஹ் உங்களது ஒவ்வொரு பாவத்தையும் மன்னித்து, அதற்குப் பதிலாக நற்கூலியையும் வழங்குகின்றான். தவாஃபிற்கு அடுத்து நீங்கள் தொழக் கூடிய இரண்டு ரக்அத்திற்குப் பகரமாக, இஸ்மாயீல் (அலை) அவர்களது சந்ததியினரில் ஒருவரை அடிமைத் தளையிலிருந்து விடுவித்த நன்மையை உங்களுக்கு இறைவன் தருகின்றான். சஃபா மற்றும் மர்வா ஆகியவற்றிற்கு இடையே நீங்கள் செய்கின்ற ஸயீக்குப் பதிலாக, 70 அடிமைகளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்த நன்மையை வழங்குகின்றான். நீங்கள் அரஃபா-வில் தங்கியிருப்பதைப் பொறுத்தவரை,
முதல் வானத்திற்கு இறைவன் இறங்கி வந்து, தன்னுடைய பெருமைகளைப் பற்றி வானவர்களுக்கு எடுத்துரைத்து வானவர்களைப் பார்த்து, என்னுடைய கருணையின் மீது வேண்டுதல் உடையவர்களாகவும் (அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக) உலகின் பல்வேறு மூலைளிலிருந்தும் என்னுடைய அடிமைகள் என்னிடத்திலே தலைவிரி கோலமாக வந்திருக்கின்றார்கள். அவர்களுடைய பாவங்கள் பூமியில் பரந்து கிடக்கும் மண் துகள்களின் அளவுக்கு இருந்தாலும், அல்லது மழை நீர்த்துளியினைப் போல அதிகமாக இருந்தாலும், அல்லது கடலின் நுரையைப் போன்ற அளவு இருந்தாலும், நான் அவர்களை மன்னித்து விடுவேன். என்னுடைய அடிமைகளை என்னை நோக்கி வர விடுங்கள். உங்களில் யார் அவர்களுக்காக பரிந்துரை செய்கின்றீர்களோ அவர்களது பாவங்களையும் நான் மன்னிக்கின்றேன்.
எப்பொருளையும் என்னோடு இணையாக்காதீர்; மேலும் தவாஃப் சுற்றி வருவோர்க்காகவும் நின்றும் குனிந்தும் தரையில் சிரம் வைத்தும் வணங்குவோர்க்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!

எப்பொருளையும் என்னோடு இணையாக்காதீர்; மேலும் தவாஃப் சுற்றி வருவோர்க்காகவும் நின்றும் குனிந்தும் தரையில் சிரம் வைத்தும் வணங்குவோர்க்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!

அடுத்து கல்லெறிதலைப் பொறுத்தவரை, நீங்கள் எறியக் கூடிய ஒவ்வொரு கல்லுக்குப் பகரமாக உங்களது மிகப் பெரிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. நீங்கள் கொடுக்கவிருக்கின்ற குர்பானிகளுக்குப் பதிலாக, உங்களது ரப்பின் தண்டனையிலிமிருந்து உங்களைப் பாதுகாக்கும். நீங்கள் தலைமுடியை மழிப்பதைப் பொறுத்தவரை, நற்கொடைகளைப் பெற்றுக் கொள்கின்றீர்கள் மேலும் உங்களது பாவங்கள் உங்களிடமிருந்து நீக்கப்படுகின்றன. உங்களது தவாஃபைப் (கஃபாவைச் வலம் வருவது) பொறுத்தவரை, உங்களைப் பாவங்களற்றவர்களாக ஆக்குகின்றது. ஒரு வானவர் உங்களிடம் வந்து உங்களது தோல் புஜங்களுக்கிடையே தங்களது கைகளை வைத்து, உங்களது வருங்காலத்திற்காகப் பாடுபட ஆரம்பித்து விடுங்கள், உங்களது கடந்த காலப் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன எனக் கூறுவார்கள். (அத்தபரானி, அல் பஸ்ஸார்).
மேலும், ஒவ்வொரு சமூகத்தார்க்கும் பலியிடும் ஒரு நெறிமுறையை நாம் வகுத்துக் கொடுத்துள்ளோம் அந்த(ந்தச் சமூக) மக்கள் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரை உச்சரி(த்து அறு)க்க வேண்டும் என்பதற்காக! (பல்வேறுபட்ட இவ்வழிமுறைகளின் நோக்கம் ஒன்றுதான்:) எனவே, உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்! அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள். மேலும் (நபியே!) பணிவான நடத்தையை மேற்கொள்வோர்க்கு நீர் நற்செய்தி அறிவிப்பீராக!
 – தொடரும் 2

Related Post