ஸஅததுல்லாஹ் உஸைனி
தமிழில்: லுத்ஃபுல்லாஹ்
தொகுப்பு: மு.அ.அப்துல் முஸவ்விர்
உலகமயமாக்கல்.. !
நவீன பிரபஞ்சத்தின்பொருளாதார மயக்கு தத்துவம்…இதன் விரிவாக்க தாக்கம் வெற்றியைத் தந்ததா… இல்லையா.. என்பதுஇன்றுவரை உலகப் பொருளாதாரப் புலிகள்கூட மண்டை பிய்த்துக் கொண்டிருக்கின்ற குழப்பம்.. உலகம் இதன் ஆபத்தை இன்னும் உணராமல் குறிப்பாக இளைய சமூகம் இதன்புறத்து கொண்டுள்ளது காதல் மயக்கம்.. அதன் உண்மை சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட இன்னும் ஏன் தயக்கம்…
அதன் தாக்கம் அதனை குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நம்முடைய ஆள்வளம்,திறமைகள் மற்றும் ஆற்றல்களின் துணையுடன்தான் உலகமயமாக்கல் வெற்றி பெறுகின்றது.
ஆனால்,நம்முடைய ஆள்வளமும்,திறமைகளும் ஆற்றல்களும் பெரிய நிறுவனங்களின் சேவைக்காக மட்டுமே பயன்படுவதுதான் வேதனை.நம்முடைய சமூக வாழ்வின் மிக உயர்வான தேவைகளை நிறைவேற்றுவதற்குத்தான் ஆட்கள் இல்லை.ஆள் பற்றறாக்குறை பெரும் அளவில் நம்மை வாட்டுகின்றது.பெரிய தலைவர்கள் ஆக வேண்டியவ வல்லமை படைத்தவர்களும் சிறிய வேலைகளுடன் திருப்தி அடைந்தே தீர வேண்டிய கட்டாயம். இது ஆள் பற்றாக்குறையின் மிக மோசமான வடிவமாகும்.
நம்முடைய செழிப்பான நடுத்தர மக்களுடைய நிலையும் எப்படி உள்ளது தெரியுமா.. படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டு டீரளiநௌ Pசழஉநளள ழுரவளழரசஉiபெ-இல் மிகமிக சாதாரணமான வேலையில் சேர்ந்திருப்பதைப் பெருமையாக நினைக்கின்றார்கள்.
அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.அந்தப் பணத்துக்காக.., இதுவரை கேவலமாக நினைத்து ஒதுக்கி வந்த கடைநிலை வேலைகளையும் நம்மவர்கள் செய்வதற்கு உடன்பட்டுவிடுகின்றார்கள்.இப்போது அத்தகைய வேலைகளில் ஈடுபடுவதை சமூக அந்தஸ்துக்குரிய செயல்களாகப் பார்க்கின்றார்கள்.கண்ணியம்,அந்தஸ்து மற்றும் சமூக மதிப்புக்கான அளவுகோல்களே மாறிவிட்டன.இதன் விளைவாக உயர்கல்விக்கான ஆர்வம் குறையத் தொடங்கிவிட்டது.
ஒரு எம்.சி.ஏ. பட்டதாரியால் அல்லது மென்பொருள் புலமை பெற்ற இளங்கலை பட்டதாரியால் அல்லது ஆங்கிலப் புலமை பெற்ற பத்தாவது வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞரால் மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்க முடிந்தது.அதேவேளை முனைவர் பட்டம் (பி.ஹெச்டி.) பெற்றவரோ இரண்டாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தில் பணியாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றார். (இந்த தொகை பொருளாதார ஏற்ற-இறக்கத்துக்குத் தகுந்தவாறு மாறுபடலாமே தவிர, இரண்டிற்குமிடைப்பட்ட வேறுபாட்டு விகிதத்தில் மாற்றமில்லை. ஆ-ர்)
இதன் விளைவு பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் எதிரொலிக்கின்றது.கலை,இலக்கியம் மற்றும் அறிவியல் துறைகளில் மாணவர்கள் சேர்வதில்லை.
பள்ளி மாணவர்களிடையே விஞ்ஞானி ஆக வேண்டும், எழுத்தாளர் ஆக வேண்டும் போன்ற பெரிய கனவுகள் இல்லை.அவர்களுடைய கனவுகள் அவர்களுடைய பெரியண்ணன் பணியாற்றும் கால் சென்டரோடு-எல்லா வசதிகளையும் சொகுசுகளையும் அள்ளிக் கொடுக்கின்ற கால் சென்டரோடு-முடங்கிப் போய்விட்டது.
டீPழு ஆகட்டும்.., கால் சென்டர் ஆகட்டும். இவற்றில் நடக்கும் பணிகள் யாவும் உண்மையில் உலகமயமாக்கலை நடைமுறைப் படுத்துவதற்குத் தேவைப்படுகின்ற துணை அலுவலகப் பணிகளே, எடுபிடி வேலைகளே.இது எல்லாருக்கும் தெரிந்த உண்மை.இவையெல்லாமே குமாஸ்தா அளவிலான,எழுத்தர் பாணியிலான பணிகளே.. இவற்றில் சேர்வதற்காகத்தான் நம்முடைய இளைஞர்கள் வரிசையில் நிற்கின்றார்கள்.
இவர்களுடைய முந்தைய தலைமுறையினர்தான் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், விஞ்ஞானி, கலெக்டர், நீதிபதி ஆகவேண்டும் என்றெல்லாம் பெரிய பெரிய கனவு கண்டு வந்தார்கள்.
உலகமயமாக்கலின் விளைவாக நாம் எத்தகைய சமூகத்தை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கின்றோம் தெரியுமா.. அது வெறுமனே கால் அட்டெண்டர்ஸ்,குமாஸ்தாக்கள்,டெக்னீஷியன்கள் போன்றோரைக் கொண்டதாக இருக்கும்.உச்சியில் இருக்கக்கூடிய நிர்வாகப் பொறுப்புக்கள்,முடிவு எடுக்கின்ற அதிகாரம் கொண்ட பதவிகள் எல்லாமே பூமி உருண்டையின் அந்தப் பக்கத்தில் இருக்கும்.(எவராவது வளர்ந்து முன்னேறினாலும் ‘அந்தப் பக்கம் போய்விடுவார்.
உலகமயமாக்கலின் இந்தப் பரிமாணம்தான் மிக மோசமானது.இது இளைஞர்களிடமிருந்து அவர்களின் இளமையை உறிஞ்சிவிடுகின்றது.அவர்களின் ஆசைகளை மடக்கி வளைத்து, அவர்களின் இலக்குகளைத் தரைமட்டமாக்கிவிடுகின்றது.போராட்ட உணர்வே கிஞ்சிற்றும் இல்லாதவர்களாய் ஆக்கிவிடுகின்றது.
மாற்றத்தின் அறிகுறியாக, மாற்றத்திற்கான அடையாளமாக இளைஞன் காலங்காலமாக விளிக்கப்பட்டு..,புரிந்துகொள்ளப்பட்டு வந்துள்ளளான்.புதிய உலகம் பற்றிய நம்பிக்கைகளும் கனவுகளும் ஆசைகளும் அதிகமாக வைத்திருப்பவன்தான் இளைஞன்.அவன் என்றென்றும் நிகழ்காலச் சூழலை – ளுவயவரள ஞரழ-வை எதிர்ப்பவனாகவே இருந்து வந்துள்ளான்.
ஆனால், உலகமயமாக்கல்
இளைஞனிடமிருந்து அவனுடைய இந்த அடையாளத்தையே பறித்துவிட்டது.கல்லூரியில் படிக்கும்போதே அவன் சம்பாதிக்கத் தொடங்கிவிடுகின்றான்.பன்னிரண்டு மணிநேரம் வேலை,பணப்பையில் பிளாஸ்டிக் பணம்,வார இறுதியில் இருபத்தி நான்கு மணிநேர கேளிக்கைகள் என அவனுடைய வாழ்க்கை முடங்கிப் போய்விட்டது.இப்போது அவன் தன்னைச் சுற்றி இருக்கும் நிலைமைகளை மாற்ற வேண்டுமே என கவலைப்படுவது இருக்கட்டும்., நிலைமைகள் எப்படி இருக்கின்றன என யோசிப்பதற்கும் அவனிடம் நேரம் இல்லை.பிறகு, இந்த நிலைமை கண்டு அவன் எங்கே பொங்கி எழப் போகின்றான்.. கலகக் குரல் எழுப்ப அவனுக்கு ஏது திராணி…
ஆடம்பர அலுவலகங்கள்,குளுகுளு இணைய கேப்கள்,டிஸ்கோ பப்கள்,மதுக்கூடங்கள்,உணவுச் சந்திப்புக்கள்,ஷாப்பிங் மால்கள்,ஷோரூம்கள் என அவனுடைய கவனத்தை ஈர்க்க எத்தனையோ…
ஏதாவது படிக்க நாடினாலும் எடுத்துப் புரட்டுவதும் ஆங்கிலப் பத்திரிகைகளைத்தான்.அவற்றில் தொழில்நுட்பம்,வணிகம் போன்ற சமாச்சாரங்கள் இருக்கும் அல்லது முழுக்க முழுக்க கேளிக்கை அம்சங்களே மிகைத்து இருக்கும்..ஆழமான அரசியல் விவாதங்களோ,ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாறல்களோ… ஊஹூம்.. மருந்துக்கும் இருக்காது.இந்த இளைஞர்களின் மனப்பான்மை என்ன தெரியுமா… ழே Pழடவைiஉள Pடநயளந.ழே டிபை கரனெயள.றுயnயெ ழடெல உழடட வாiபௌ.(அரசியல் வேண்டாம்,பெரிய சர்ச்சைகள்,தத்துவங்கள் எல்லாம் வேண்டாம், மச்சி.. ஜாலியாக பொழுது போக வேண்டும்.அதற்கு வழி சொல்லு, போதும். என்பதுதான் இன்றைய இளைஞர்களின் மனப்பான்மை.எதனைப் பற்றியும் கவலைப்படாத, அலட்டிக் கொள்ளாத போக்கு இது..
இன்றைய இளைஞர்களுக்கு இத்தகைய ஜாலியான சமாச்சாரங்களே (ஊழழட வாiபௌ) தேவை.களைத்துப் போன உள்ளங்களுக்குச் சுமையேற்படுத்தாத சிந்தனைகளே தேவை.வெங்காய பக்கோடா,வாழைக்காய் பஜ்ஜி மட்டும் போதும்பிரியாணி வேண்டாம் என்கின்ற மனப்பான்மை இது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில் ஊறுகாயை மட்டுமே உணவாக ஆக்கிக் கொள்ளும் போக்கு இது.. பின்னே, அரசியல்,சமூக மேம்பாடு,பொருளாதார கொள்கைகள் என கனமான விஷயங்களைப் படித்தால்,பேசினால், அலசினால் மனம் களைத்துப் போகும்.இரவில் கால் சென்டரில் மேலை எஜமான்களுக்குச் சேவையாற்றக்கூட தெம்பு இல்லாமல் போகுமே..
எதிலும் எளிய வழியை விரும்பி மேற்கொள்ளும் இந்த நோய் காரணமாகத்தான் இன்று மாணவப் போராளிகளைக் காண்பதே அரிதாகிவிட்டது.இன்றைய நாட்டு நடப்புக்களிலும் சமூகநிலைமைகளிலும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் திருப்தி உண்டாகிவிட்டதெனில்…, அவர்தம் மாணவப் போர்க்குணம் மடிந்துவிடுகின்ற சூழலில் யார்தான் போராடுவதற்கு முன்வருவார்கள்…
தன் மீது இழைக்கப்படும் அநீதியையும் தவறுகளையும் குறித்து சிந்திக்கவும் துணிவு இல்லாத,சிந்தனை அடிமைகளைக் கொண்ட சமூகத்தைத்தான் உலகமயமாக்கல் உருவாக்குகின்றது.. அதுதானே உண்மை…
உலகமயமாக்கலின் இன்னொரு கோரவிளைவு என்ன தெரியுமா.. அது நம்முடைய இளைஞர்களை அவர்களின் வேர்களைவிட்டுத் துண்டித்து விடுவதுதான்.இந்த முறிவின் ஒரு பரிமாணம் தலைமுறை இடைவெளி (புநநெசயவழைn புயி) ஆகும்.
இந்த இளைஞர்களின் உலகமே தனி உலகம்தான்.
முற்றிலும் மாறுபட்ட புதிய உலகம்.இதனால்,நன்கு படித்த பட்டதாரிப் பெற்றோராலும் கூட தம்முடைய பிள்ளைகளுக்கு,தொழில்நுட்பப் பைத்தியங்களுக்கு எந்தவித உதவியோ வழிகாட்டுதலோ தர இயல்வதில்லை.
வுழிகாட்டுவதை விடுங்கள்.இவர்களின் பிள்ளைகளும் என்னதான் செய்கின்றார்கள் என்பதைக்கூட இவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.அந்தப் பிள்ளைகள் பயன்படுத்துகின்ற வார்த்தைப் பிரயோகங்கள்,அவர்களின் விந்தையான சொல்லாடல்கள்,பொழுதுபோக்குகள் எதனையும் இவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.
கால் சென்டர் என்பது என்ன மென்பொருள் இன்டஸ்ட்ரியில் எதனைத்தான் உற்பத்தி செய்கின்றார்கள்.. பி.பி.ஓ. அலுவலகங்களில் இரவில் பணிகள் நடப்பதேன்… எதுவுமே தெரியாது..
இவர்கள் கிளாஸ் ஒன் அல்லது சூப்பர் கிளாஸ் ஒன் அதிகாரியாகப் பணியாற்றி இருப்பார்கள்.கடின உழைப்பு,காலந் தவறாமை என அக்கறையுடன் உழைத்து நீண்ட காலம் ஓயாமல் ஒழியாமல்,விடுப்புக்கூட எடுக்காமல் விசுவாசத்துடன் பணியாற்றிய பிறகு இவர்களுக்கு இந்தப் பதவி கிடைத்திருக்கும்.ஆனால்,இந்தப் பொடியன்களோ, வேலையில் சேர்ந்த முதல்நாளே நம்மைவிட அதிகமாக சம்பளம் வாங்கத் தொடங்கிவிடுகின்றார்களே.., எப்படி என விதவிதமான கேள்விகள் இவர்களுக்குள் அலைமோதும்.
ஆனால் விடைதான் கிடைக்காது.இதனால், யோசிக்கவும் தலையிடவும் விரும்பாமல் ஒதுங்கிவிடுவார்கள்.நம் பையன் கணிணி தொடர்புள்ள ஏதோவொரு வேலை செய்கின்றான்.பை நிறைய சம்பாதிக்கின்றான். என்கின்ற அளவில் இவர்கள் திருப்தி அடைந்துவிடுகிறார்கள்.
பையனின் வேலை பிரமாதமான வேலைதான் எனத் தீர்மானிப்பதற்கு நல்ல சம்பளம் கிடைப்பது ஒன்றே இவர்களுக்குப் போதுமானது. அதை வைத்தே பையன் வெற்றிகரமான தொழில் நேர்த்p மிக்க நிர்வாகி என்று முடிவு கட்டிவிடுகின்றார்கள்.
இவன் என்தான் செய்கின்றான்.. இவனுடைய எதிர்காலம் என்னவாகும்… என்றெல்லாம் யோசிப்பது இவர்களால் இயலாதவொன்றாகும்.
இவர்கள் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பிறகு ஓய்வு பெறுகின்ற நேரத்தில் வீடு கட்டுவார்கள். ஆனால் இவனோ பணியில் சேர்ந்த சில மாதங்களுக்குள்ளாகவே வீடு கட்டத் தொடங்கிவிடுகின்றான்.
இவர்கள் அரசு ஊர்தியான அம்பாஸிடர் மகிழுந்தோடு மகிழ்ந்து போவார்கள்.மகனோ ஆடம்பரமான லக்ஸஸ் மகிழுந்தை உருட்டிக் கொண்டு வந்துவிடுகின்றான்.எல்லாமே நல்ல விஷயங்கள்தானே.. இந்நிலையில் அவனுடைய பணியின் தன்மை குறித்தும் எதிர்காலம் பற்றியும் எதற்கு அலட்டிக் கொள்ள வேண்டும்…
1970களிலும் 1980களிலும் மக்கள் வேலை வாய்ப்புத் தேடி வளைகுடா நாடுகளுக்குப் போவார்கள்.அங்கு ஏதோ கிடைக்கின்ற பணிகளில் சேர்ந்துவிடுவார்கள்.ஆனால், இங்கு அவர்களுடைய பெற்றோரோ மிகவும் பூரித்துப் போய்விடுவார்கள்.மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கின்றான்.இப்போதும் இதே மனநிலைதான்.மிகவும் பாரம்பர்யமான,உயர்கல்வி பெற்ற குடும்பத்தின் தவப்புதல்வன் கால் சென்டரிலும்,பி.பி.ஓ.விலும் எழுத்தர் வேலை பார்க்கின்றான்.பெற்றோரோ அவனுடைய அலுவலகத்து அழகையும்,கம்பீரத்தையும் மினுமினுப்பையும் பார்த்து மகிழ்ந்து திருப்தியடைந்துவிடுகின்றார்கள்.
இந்தத் தலைமுறை இடைவெளி
குடும்பங்களில் மட்டுமா காணப்படுகின்றது.. பணியிடங்களில் நரைமுடிகளின் சுவடுகளைக்கூடப் பார்க்க முடியாது.ஒரு மூத்த நிர்வாகியின் கூற்றுப்படி இன்றைய நிறுவனங்களில் 35 வயது நிரம்பியவர் பழமையான ஆளாகப் பார்க்கப்படுகின்றார்.ஐம்பது வயதுக்கு மேற்பட்டவரோ டைனோஜராகவே கருதப்படுகின்றார்.
இந்த நிலையில் இந்த உலகம் வெறுமனே பணக்காரர்களின் உலகமாக மட்டும் ஆகிவிடவில்லை. இளைஞர்களின் உலகமாகவும் சுருங்கிவிட்டது.அந்த உலகில் முதியவர்களுக்கு இடமில்லை.
பண்பாட்டு மதிப்பீடுகள் நிலைத்திருக்க வேண்டுமெனில், மாண்புகளும் விழுமங்களும் உயிர்த்துடிப்புடன் நீடிக்க வேண்டுமெனில் தலைமுறைகளுக்கிடையே தொடர்பும் உறவும் (ஐவெநசபநநெசயவழையெட iவெநசகயஉந) இருக்க வேண்டும்.அந்த உறவும் தொடர்பும் அறுபட்டு போய்க் கொண்டிருப்பதுதான் வேதனை.