வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப் படுத்துதல்!-2

டைக்கப்பட்டதன் நோக்கத்தை முழுமையாக அறிந்து கொள்வது மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டதாகும். மனிதன் என்பவன் குறிப்பிட்ட வரையறைக்குள் படைக்கப்பட்டவன். ஆகையால் நிகரில்லா படைத்தவனின் செயல்களை முழுவதும் அறிந்துகொள்ள முடியாதவனாக உள்ளான். ஆகையால் இறைவன் அவனை வணங்குவதை மனிதனின் ஒரு பகுதியாக ஆக்கினான். மேலும் படைக்கப்பட்டதன் நோக்கத்தை விளக்குவதற்காக நபிமார்களையும் வேதங்களையும் அனுப்பினான். இவற்றின் நோக்கமெல்லாம் முன்பே விளக்கியதுபோல வணக்க வழிபாடுகளில் இறைவன் ஒருவனையே முன்னிறுத்த வேண்டும் என்பது தான். இதற்கு மாறு செய்பவர்கள் மிகப் பெரும்பாவமான இறைவனுக்கு இணை கற்பிக்கிறார்கள். சூரா பாதிஹாவில் இறைவன் கூறுவது போல ஒவ்வொரு முஸ்லிமும் (தொழுகையில்) குறைந்தது 17 முறை கூறுகிறான்: –

“(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்”  (அல்-குர்ஆன் 1:5)

முஹம்மது நபி (ஸல்) அவர்களும் வணக்க வழிபாடுகளில் ஒருமை தத்துவத்தை உறுதி செய்கிறார்கள்.  “தொழுகையில் கேட்டால் அல்லாஹ்விடமே கேளுங்கள். உதவி தேடினால் அல்லாஹ்விடமே தேடுங்கள்” (திர்மிதி)

இறைவன் மனிதனுக்கு மிக அருகில் இருக்கிறான். ஆகையால் எந்தஒரு இடைதரகரும் தேவையில்லை உதாரணாமாக: –

“(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால் ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக”  (அல்-குர்ஆன் 2:186)

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்-குர்ஆன் 50:16)

வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துதல் என்பது அனைத்து வகையான இறைவனுக்கு இணை வைத்தலையும் நிராகரிக்கிறது. யாராவது ஒருவர் இறந்தவர்களிடம் பிரார்த்தித்து உதவி தெடினால்  அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களாவார்கள். ஏனெனில் வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய படைபினங்களுக்குமிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

“பிராத்தனையும் வணக்கமாகும்” (அபூதாவூத்)

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்: –

‘(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்’ என்று கேட்டார். (அல்-குர்ஆன் 21:66)

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (அல்-குர்ஆன் 7:194)

யாராவது ஒருவர், நபிமார்களிடமோ, மதகுருமார்களிடமோ, ஜின்களிடமோ அல்லது மலக்குகளிடமோ உதவி கேட்டால் அல்லது அல்லாஹ்விடம் எங்களுக்காக உதவி கேட்குமாறு பிராத்தனை அல்லது வேண்டுதல் அல்லது முறையிடுதல் செய்தாலோ அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களாவார்கள். அறியாதவர்களாய் அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கு ஆபத்தில் இருப்பவற்களுக்கு அபயம் அளிப்பவர் என்று அளிக்கப்பட்ட பட்டம் கூட இறைவனுக்கு இணை வைக்கக்கூடிய செயலாகும்.

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் “வணக்கங்கள்” என்பது நோன்பு, ஜகாத், ஹஜ் மற்றும் குர்பானி கொடுத்தல் போன்றவற்றை விட அதிகமானதாகும். ்வணக்கம்் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடான அன்பு, நம்பிக்கை மற்றும் பேரச்சம், பயம் ஆகியவையும் உள்ளடங்கும். அல்லாஹ் இவைகளைப் பற்றி விளக்கி இவை அதிகமானால் வரக்கூடிய பாதிப்புகளையும் பற்றி எச்சரித்துள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான்: –

அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள். ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள். இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள். அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்). (அல்-குர்ஆன் 2:165)

தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர். நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான். (அல்-குர்ஆன் 9:13)

(அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான். அவர்கள், (மற்றவர்களை நோக்கி:) ‘அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்’ என்று கூறினர். (அல்-குர்ஆன் 5:23)

வணக்க வழிபாடுகள் என்பது தன்னை முழுவதுமாக கீழ்படிவதாலும் மேலும் அல்லாஹ் என்பவன் சட்டதிட்டங்களை முழுமையாக கொடுக்கக்கூடியவன் என்பதாலும் ஷரீஅத் அடிப்படையிலான சட்டங்கள் இல்லாமல் மற்ற சட்டதிட்டங்களை அமலாக்குவது ஒருவகையான இறை நிராகரிப்பாகும். மேலும் இது போன்ற சட்டங்களை நம்புவது அல்லாஹ் அல்லாதவர்களை வழிபடுவது போன்றதாகும்.

சகோதரர் M. அன்வர்தீன்

Related Post