Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

ரமளான் பாடம் – 2

 

இவை அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட வரம்புகளாகும்.

இவை அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட வரம்புகளாகும்.

– K. L. M. இப்ராஹீம் மதனீ 

வை அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட வரம்புகளாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப் படிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் அவன் நுழையவைப்பான். அவற்றில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். மேலும், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிய மறுத்து அவனுடைய வரம்புகளை மீறுகின்றார்களோ, அவர்களை அல்லாஹ் நரகத்தில் தள்ளுவான்! அதில் அவர்கள் நிலையாக விழுந்து கிடப்பார்கள். அவர்களுக்கு (அங்கு) இழிவுபடுத்தும் தண்டனையும் இருக்கிறது.

1) பஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும், சூரியன் மறைந்தவுடனேயே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும்.

2) பேரீத்தம்பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.

3) நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால். நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டும். பிறகு வாய்ப்பு கிடைக்கும்போது சாப்பிட்டுக் கொண்டால் போதுமானது.

4) ஸஹர் நேரத்தில் தாமதமாக எழுந்து பஜ்ருடைய நேரம் வந்துவிட்டது எனத் தெரிந்தும் கூட, விடி ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பது தவறாகும். பஜ்ர் நேரம் வந்து விட்டால் எதையும் உண்ணக்கூடாது. இதுபோன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும்.

5) ஹலாலான உணவையே உட்கொள்ள வேண்டும். இதை எல்லாக் காலங்களிலும் கடைபிடிக்க வேண்டும்.

6) நோன்பாளி அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும், அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாக தவிர்ந்து கொள்ளவேண்டும். பொய், புறம், கோள் சொல்லுதல், ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருள் ஈட்டல் போன்ற தவறான அனைத்து சொல், செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாயக் கடமையாகும்.

7) கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஒற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவைத்தேடி, பெற்றுக் கொள்ளவேண்டும்.

8) பெருநாள் தொழுகைக்கு முன்பு (ஸதகத்துல் ஃபித்ர்) எனும் பெருநாள் தர்மத்தை முறையாக கொடுக்க வேண்டும்.

Related Post