முஸ்அப் பின் ஹூமைர் (ரலி)..!

–  நூருத்தீன்

திக்குத் தெரியாத காட்டில் திசைமாறித் திரியும் இளைய சமூகத்தின் இனிய மாதிரியாய் இருந்தார் அந்த இளைஞர்..! செல்வக் குவியலில் புரண்டாலும்… இறைநியதிக்கு முன்பாக அதனை துச்சமென மதித்து தூக்கி எறிந்தர்..! ஏகத்துவத்தின் நிழலில் இன்பம் கண்டார்..!

ஏகத்துவத்தின் நிழலில் இன்பம் கண்டார்..!

ஏகத்துவத்தின் நிழலில் இன்பம் கண்டார்..!

கோபத்தின் உச்சியில் தாய் கத்தினார், ‘போ… இத்துடன் நம் உறவு முறிந்தது. இனி நான் உனக்கு அம்மாவே இல்லை’
நிதானமாய்த் தாயை நோக்கித் திரும்பி வந்த மகன், ‘ஆனால் மனதார நான் உங்கள்மீது அளவில்லாத பாசம் கொண்டுள்ளேன். நான் சொல்வதைக் கேளுங்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை. முஹம்மது அவனுடைய இறுதித் தூதர். இதை நீங்களும் ஏற்றுக் கொள்ளுங்கள். அதுபோதும்’
அந்த பதில் தாயின் கோபத்தை உக்கிரப்படுத்தியது. ‘ஒரே இறைவனாமே?’
‘அந்த நட்சத்திரங்களின் மீது ஆணையாகக் கூறுகிறேன். உன் மதத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கெல்லாம் என் புத்தி கெட்டுப்போகவில்லை, என் தராதரமும் குறைந்துவிடவில்லை. எக்கேடோ கெட்டு்ப் போ. நான் உனக்கு அம்மாவும் இல்லை, நீ எனக்கு மகனும் இல்லை’

அதற்குமேல் என்ன பேசுவது? வெளியேறினார் மகன்.
அம்மாவுக்கும் மகனுக்கும் அப்படி என்ன பெரிய பிரச்சனை? பெரிதாக ஒன்றுமில்லை.
நம்பிக்கை! ஒரே இறைவன் மீது நம்பிக்கை! அவனுக்கு இணை துணையில்லை என்ற நம்பிக்கை! அதுமட்டுமே பிரச்சனை.
ழழுழ
ஒருநாள் ஹிரா குகையிலிருந்து இறங்கி வந்த முஹம்மது நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம், மக்காவில் ஏகத்துவம் சொல்ல ஆரம்பித்தார்களா, தெளிவான மனங்களில் ‘நச்’சென்று அச்செய்தி சென்று பதிந்து கொண்டது. மெதுமெதுவே மக்காவில் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கியது. ஏழைகள், அடிமைகள், வெகுசில பிரபலங்கள், முஹம்மது நபியின் சில உறவினர்கள் என்று சிறிய இஸ்லாமியக் குழு ஒன்று உருவாக அந்தச் சின்னஞ்சிறு குழுவுக்கெதிராய்க் குரைஷிகளின் பென்னம்பெருங்கோத்திரமே தொடை தட்டிப் பூதாகரமாய் எழுந்து நின்றது.
செய்தி அப்படி. பன்னெடுங்காலமாக கஅபாவில் வைத்துப் பூஜிக்கப்பட்ட 360 கடவுளர்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்த ஒற்றைச் செய்தி!
சிறிது சிறிதாய் அந்த இஸ்லாமியச் செய்தி மக்காவில் பரவப்பரவ, நாளும் பொழுதும் அந்நகரில் இதுவே பேச்சு. ‘புதிதாய் இது என்ன மதம்?’ என்று இரவு உறங்கும்வரை கோபத்துடன் பேசிவிட்டு, தூங்கியெழுந்து காலையில் மீண்டும் அதையே தொடர்ந்தார்கள். கூட்டங் கூட்டமாய்க் குரைஷிகள் இஸ்லாத்தை எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்ததை அக்கூட்டங்களில் ஓர் இளைஞர் மிக ஆர்வமாய்க் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் முஸ்அப் இப்னு உமைர்!
மக்காவில் மிக அழகிய இளைஞர்களில் ஒருவர் அவர். நல்ல வசீகரத் தோற்றம். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த கொழுந்து. வறுமையென்றால், ‘கிலோ என்ன விலை?’ என்ற அளவிற்கு சொகுசும் ஆடம்பரமும் வசதியுமாய் அமைந்த வாழ்க்கை. குணாஸ் பின்த் மாலிக் என்பவர் அவரின் தாயார். கரடுமுரடான சுபாவம்; மக்களைப் பயமுறுத்தும் அளவிற்கு ‘அகன்ற வாய்’. ஆனால் மகன் மீது அளவற்ற பாசம். ‘அனுபவிடா மகனே! என் செல்லம்!’ என்று தங்குதடையில்லாமல் சுகபோகத்தில் மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். விலையுயர்ந்த ஆடைகள், சிறந்த கால்நடைகள், வேளா வேளைக்கு அருமையான உணவு, மிகச் சிறந்த நறுமணப் பொருட்கள் என்று எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி செல்வ சுகத்தில் திளைத்துக் கொண்டிருந்தார் மகன். முஸ்அப் கடந்து சென்ற தெருவில் நுழைபவர், ‘{ஹம்! முஸ்அப் இப்னு உமைர் இந்தத் தெருவில் உலாத்திவிட்டுப் போயிருக்கிறார் போலிருக்கிறதே’ என்று எளிதாய் மோப்பமிட்டுச் சொல்லிவிடுமளவிற்கு அவர் பூசிக்கொள்ளும் நறுமணம் மிதந்து கொண்டிருக்கும்.
சுருக்கமாய் இக்கால உவமை சொல்வதென்றால், பணக்கார வீட்டின் உல்லாசப் பிள்ளைகள் என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்ளாத குறையாய் ‘லேட்டஸ்ட் ஸ்டைலின்’ அத்தனை அம்சங்களையும் சுமந்து கொண்டு, ஷாப்பிங் மால்கள், கடற்கரை என்று சுற்றிக்கொண்டிருக்கிறதே இன்றைய வாலிபக் கூட்டம், அப்படி மக்காவில் வலம் வந்து கொண்டிருந்தார் முஸ்அப்.
அக்காலத்தில் குரைஷிகள் கூடும் பொதுஇடங்களில் தவறாமல் முஸ்அப் உண்டு. முஹம்மது நபி, அவர் உரைக்கும் மார்க்கம், அதைப் பற்றி குரைஷிகளின் கோபம், ஆத்திரம், எதிர்ப்பு என்பதெல்லாம் அவர் காதில் விழுந்து கொண்டிருந்தது. கேட்கக் கேட்க ஆர்வம் தொற்றியது. ‘யார் அவர்? என்னதான் அது?’

இளைய சமூகத்தின் இனிய மாதிரியாய் இருந்தார் அந்த இளைஞர்..!

இளைய சமூகத்தின் இனிய மாதிரியாய் இருந்தார் அந்த இளைஞர்..!

க்காவில் அல்-அர்கம் எனும் தோழர் ஒருவர் இருந்தார். அவருக்கு அப்பொழுது இருபது வயதிருக்கும். அல்-மக்ஸும் கோத்திரத்தைச் சேர்ந்தவர். இஸ்லாத்திற்கு மிக முக்கிய எதிரியாய் உருவானானே அபூஜஹ்லு, அவனுடைய அதே கோத்திரம். இந்த அல்-அர்கமிற்கு ஸஃபா குன்றுக்கு அருகே வீடு ஒன்று இருந்தது.
ஆரம்பத் தருணங்களில் முஸ்லிம்கள் ஓரிடத்தில் குழுமுவதே மிகப் பெரும் பிரச்சினையாக இருந்ததா, எத்தகைய தற்காப்பு வசதியும் இன்றி, நலிந்த நிலையில் இருந்த அவர்களை இந்த அர்கமின் வீட்டில்தான் ஒன்றுகூட்டினார்கள் நபியவர்கள். அது ஒரு முதலாவது இஸ்லாமியப் பாடசாலையாக உருவெடுத்தது. நபியவர்கள் தமக்கு அருளப்பெறும் இறை வசனங்களை அம்மக்களுக்கு அறிவிக்கவும் உபதேசம் புரியவும் முஸ்லிம்கள் கூடி இறைவழிபாடு செய்யவும் அளவளாவிக் கொள்ளவும் என்று அல்அர்கமுடைய அந்த வீடு – தாருல் அர்கம் – முதல் பல்கலையாகப் பரிணமித்தது.
சதா காலமும் முஸ்லிம்களை நோட்டமிட்டு, அவர்களுக்குத் துன்பம் இழைக்கவும் இடையூறு விளைவிக்கவும் என்னென்ன சாத்தியமோ அத்தனையும் செய்து திரிந்து கொண்டிருந்த குரைஷிகள், தங்களது மூக்கிற்கு அருகிலேயே ஸஃபா குன்றின் அடிவாரத்திலுள்ள அர்கமின் வீட்டில் முஸ்லிம்கள் ரகசியமாய்க் கூடி, தங்களது கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்ததை கவனிக்கத் தவறியது ஓர் ஆச்சரியம். அத்தகைய திட்டத்தை நபியவர்கள் நிறைவேற்றியது அதைவிட ஆச்சரியம்!
‘என்னதான் அது?’ என்று ஆர்வம் ஏற்பட்டதும் முஸ்அப் இப்னு உமைர் விசாரிக்க ஆரம்பித்தார். தேடி விசாரித்துக் கொண்டு ஒருநாள் இரவு அர்கமின் அந்த வீட்டை அடைந்து – கதவு தட்டப்பட்டது. அங்கு குர்ஆன் வசனங்களை நபியவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவிப்பதும் பிறகு அனைவரும் சேர்ந்து ஏக இறைவனை வழிபடுவதுமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. முஸ்அபின் காதில் அவை விழுந்தன. எவை? குர்ஆன் வசனங்கள். அவை நேராய்ச் சென்று தாக்கியது அவரது இதயத்தை. அடுத்து அந்த மாற்றம் சடுதியில் நிகழ்ந்தது.
‘இது அற்புதம்! இது உண்மை! இதுவே ஈருலகிற்கும் வழிகாட்டி’ என்று இஸ்லாத்தினுள் நுழைந்தார் இளைஞர் முஸ்அப் இப்னு உமைர், ரலியல்லா{ஹ அன்{ஹ!

Related Post