சுவனப் பிரியன்
மே 23, 1934 ஆம் ஆண்டு அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் உள்ள ஒரு யூத குடும்பத்தில் பிறந்த மார்கரெட் மார்கெஸ் எனும் இயற்பெயர் கொண்ட மரியம் ஜமீலா தன்னுடைய 19வது வயதிலிருந்து மதங்களை குறித்து ஆராய தொடங்கினார். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குரானும் யூதராக இருந்து இஸ்லாத்தை தழுவிய முஹம்மது அஸதின் புத்தகங்களும் மரியம் ஜமீலாவை இஸ்லாத்தை நோக்கி ஈர்த்தன.
மே 24, 1961ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்று கொண்ட மரியம் ஜமீலா தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியாகும் முஸ்லீம் டைஜஸ்டில் எழுத தொடங்கினார். அதே பத்திரிகைக்கு எழுதி கொண்டிருந்த ஜமாத்தே இஸ்லாமியின் நிறுவனர் மவுலானா சையது அலா மெளதூதியின் எழுத்துகளில் தன்னை பறி கொடுத்தார் மரியம் ஜமீலா.
மெளதூதியின் அறிவுரையின் பேரில் பாகிஸ்தானுக்கு 1962ல் சென்று மெளலானாவின் வீட்டோடு தன்னை இணைத்து கோண்டார். பின்பு முஹமது யூசுப் கான் என்பவருக்கு இரண்டாம் தாரமாக தானே முன் வந்து மணமுடித்து கொண்டார். யூசுஃப் கான் ஜமாஅத்தே இஸ்லாமியின் ஒரு முழு நேர ஊழியர் – இவரே பின்னர், மரியமின் நூல்கள் அனைத்திற்கும் வெளியீட்டாளரானார். அதைத் தொடர்ந்து மரியம் நான்கு குழந்தைகளுக்குத் தாயாகி தனது மக்களுடனும், சக மனைவியுடனும் (சக்காளத்தியாருடனும்) மாமனாரது ஒரு பெரிய, கூட்டுக் குடும்ப வீட்டில் வசித்து வந்தார்.
மரியம் நாத்திகம் மற்றும் பொருளாதாரத்தின் அனைத்து வித பழைய, புதிய வெளிப்பாடுகளின் மீதும் ஆழ்ந்த வெறுப்புக் கொண்டிருந்தார். சம்பூரணமான, நிலையான, பரலோக அறங்களின் பால் தனக்குள்ள தீராத் தேடுதலிற்கு விடையாக இஸ்லாத்தை கண்டார். அதுவே, வாழ்வுக்கு மற்றும் சாவுக்கு அர்த்தமும் திசையும் நோக்கமும் மதிப்பும் வழங்கும் இறுதி வழி என்பதில் உறுதியாக இருந்தார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் இவரது இறப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். லாகூரில் உள்ள சன்னத் நகர் மையவாடியில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. முஹம்மது அஸ்லம், டாக்டர் ஃபரீத் அஹ்மத், மியான் மக்சூத் போன்ற பிரபலங்கள் பிரார்த்தனை தொழுகையில் கலந்து கொண்டனர்.
மிகச் சிறந்த சிந்தனையாளரான மரியம் ஜமீலா எழுதிய புத்தகங்களில் சில பின்வருமாறு :
§ Islam and modernism
§ Islam versus the west
§ Islam in theory and practice
§ Islam versus ahl al kitab past and present
§ Ahmad khalil
§ Islam and orientalism
§ Western civilization condemned by itself
§ Correspondence between maulana maudoodi and maryum jameelah
§ Islam and western society
§ A manifesto of the Islamic movement
§ Is western civilization universal
§ Who is Maudoodi ?
§ Why I embraced Islam?
§ Islam and the Muslim woman today
§ Islam and social habits
§ Islamic culture in theory and practice
§ Three great Islamic movements in the Arab world of the recent past
§ Shaikh hasan al banna and ikhwan al muslimun
§ A great Islamic movement in turkey
§ Two mujahidin of the recent past and their struggle for freedom against foreign rule
§ The generation gap its causes and consequences
§ Westernization versus Muslims
§ Westernization and human welfare
§ Modern technology and the dehumanization of man
§ Islam and modern man
எல்லாம் வல்ல இறைவன் அறியாத காலங்களில் செய்த இவரின் பாவங்களை மன்னித்து சொர்க்கத்தில் பிரவேசிக்க வைப்பானாக!