பலாத்காரப் பேயாட்டம்..! பரிதவிப்பில் பாரதம்…!

ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு (கற்பழிப்பு எனும் சொல்லாடலுடன் எமக்கு உடன்பாடு இல்லை,கற்பு என்பதை வெறும் பெண்ணுக்குரியதாய் அது உணர்த்துவதால்..!)

ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு (கற்பழிப்பு எனும் சொல்லாடலுடன் எமக்கு உடன்பாடு இல்லை,கற்பு என்பதை வெறும் பெண்ணுக்குரியதாய் அது உணர்த்துவதால்..!)

ந்தியத் தலைநகர்,தில்ல்லியில், பாராமெடிக்கல் கல்லூரியில் உடற்பிணி நீக்கு (பிஸியோதெரபி) அறிவியல் பயிலும் 23 வயது மாணவி ரீமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு (கற்பழிப்பு எனும் சொல்லாடலுடன் எமக்கு உடன்பாடு இல்லை,கற்பு என்பதை வெறும் பெண்ணுக்குரியதாய் அது உணர்த்துவதால்..!) ஆளாக் கப்பட்ட சம்பவம், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்களின் உச்சகட்டம்..!இதைச் சமூகமும் உச்சபட்சமாக உணர்ந்ததன் விளைவே தலைநகரே ஸ்தம்பிக்க நடந்த போராட்டம்..!!அதன் தொடராக நாட்டின் பல இடங்களிலும் கிளர்ந்தெழுந்த கிளர்ச்சிக்களம்..!
சுமார் 30 கி.மீ தூரம் வரை பயணப்பட்ட அந்தப் பேருந்தில் ஓட்டுநர் உட்பட ஐவர் மாறி மாறி அந்த வனிதையுடன் வல்லுறவு கொண்டு அரங்கேற்றிய கொடூரத்தின் உச்சமாக,அவரையும் அவருடன் பயணப்பட்ட நண்பரையும் ஓடும் பேருந்திலிருந்து தூக்கி எறிந்தனர்.அவள் மரணத்தை எதிர்கொண்டாள்.,!
பின்னர், தில்லியின் கல்லூரி மாணவ -மாணவிகளும், பொதுமக்களும் கைகோர்க்க… போராட்டக்களமாக மாறியது இந்தியா கேட். நாடாளுமன்றத்திலும் விஷயம் எதிரொலிக்க… ‘குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை’ என்கிற குரல் உரக்க ஒலிக்கிறது.
இதில் மனதை நெருடும் மற்றொரு விஷயம் என்ன தெரியுமா..?பஸ்ஸிலிருந்து தூக்கி எறியப்பட்ட மாணவி, காயங்களுடன் நிர்வாணமாக நடுரோட்டில் கிடந்துள்ளார். போலீசார் வரும்வரை ஒரு துணியை அவர் மீது போர்த்தக்கூட யாரும் முன்வரவில்லை என்பதுதான்.,!சம்பவத்தின் கோரம், இந்திய மங்கையை குறிப்பாக, பதின்பருவ பாவையரை கோபக்கார குமரியாக கொதித்தெழ வைத்தது.ஆம்..!அவர்களையே, 2012-இன் செய்தி நாயகியாக வசந்தம் முன்வைக்கின்றது..
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி பிரதீபா சர்மா-வின் ஆவேசம் கோபக்கார இந்திய குமரி ஒவ்வnhருவரின் குரலாக எதிரொலிக்கின்றது, பரந்து விரிந்த பாரதம் முழுவதும்:- ‘நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் குற்றங்களில் இந்தச் சம்பவமே கடைசியாக இருக்க வேண்டும். இதற்கு ஒரு முடிவு கட்டாமல் எங்கள் போராட்டம் ஓயாது..!’
குமரியர் மட்டுமல்ல, அவர்களைப் பெற்றவர்களும் கொதிக்கின்றார்கள்:-”பாலியல் வல்லுறவு வழக்குகள் பலவும், பத்து வருடங்களுக்கு மேலாக, முடிவடையாமல் நிலுவையில் உள்ளதாக செய்திகள் வருகின்றன. இவர்கள் விஷயத்தில் மனித உரிமைகளைப் பார்ப்பது பாவமாகிவிடும். குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், குற்றவாளிகளுக்கு துணைபோகாமலிருக்கவும் போலீஸார் உறுதி எடுக்க வேண்டும். அப்போதுதான் என் மகள் மற்றும் பேரக் குழந்தைகள் இந்த நகரத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும்” எனச் சீறினார் போராட்டத்திலிருந்தவர்களில் ஒருவரான முதியவர் சாய்ராம் ராத்தோட்.
இப்பொழுது, மங்கையர் சார்ந்த பிரச்னைகளின் ஆழத்திற்குப் போவோம்..!சற்று சிந்தியுங்கள்!
மாபெரும் இதிகாசமென பாரத நாடு கொண்டாடும் அந்த ‘மகாபாரத’த்தில் மனைவியை வைத்து சூதாடுகிறார்கள் பாண்டவர்கள்.அறிவிற் சிறந்த பெரியோரும்,மூத்தோரும் கூடியிருக்கும் அந்த சபையில் துகிலுரியப்படும் போது ஐந்து கணவர்களோ, அல்லது வீரத்திலும்,அறிவிலும் சிறந்த பெரியோர்களோ காப்பாற்றும் திறனை இழந்து விட்டு.., கிருஷ்ணனை அழைக்கின்றார்கள்..!இந்தியப் பெண்களை பாஞ்சாலியின் நிலையில் வைத்துப் பார்த்தால், இரண்டு காட்சிகளுக்கும் வித்தியாசங்களைக் காண முடிகின்றதா..?

அனைத்துக்கும் என்ன காரணம்..?

ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு (கற்பழிப்பு எனும் சொல்லாடலுடன் எமக்கு உடன்பாடு இல்லை,கற்பு என்பதை வெறும் பெண்ணுக்குரியதாய் அது உணர்த்துவதால்..!)

ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு (கற்பழிப்பு எனும் சொல்லாடலுடன் எமக்கு உடன்பாடு இல்லை,கற்பு என்பதை வெறும் பெண்ணுக்குரியதாய் அது உணர்த்துவதால்..!)

ஆம்..! பண்பாட்டு சிறப்பு பேசும் நம் நாட்டில் பெண்களின் பெயரால் நதிகளும்,மலைகளும் ஏன் பூமியே தாய் என்று போற்றப்படுவதும் மறுப்பதற்கில்லை.ஆனால், இங்கு பெண் என்பவள் ஆணின் உடமை,அவள் ஒரு நுகர்பொருள்.., அவ்வளவுதான்!அப்படித்தான் இந்த கலாச்சாரம் சொல்லிக் கொடுத்திருக்கிறது..,பழக்கிக் கொடுத்திருக்கின்றது.இங்கு பெண் தெய்வங்கள் வணங்கப்படுவதும், நிஜத்தில் பெண்ணுக்கு இழைக்கும் கொடுமைகள் ஏற்படுத்தும் குற்ற உணர்வினால் மட்டுமே தவிர வேறு காரணம் என்ன இருக்கும்..?
ஒரு வன்மம் நடந்தால் மட்டுமே அது பற்றி அலசுகின்றோமே தவிர, அதன் காரண காரியங்களையும் தீர்வையும் முன்வைக்கின்றோமா..?பாலியல் வல்லுறவு என்பது கடைந்தெடுக்கப்பட்ட வன்முறை மட்டுமல்ல, மனிதத் தன்மையற்ற செய்கையின் கொடூரத்தனம்..!இந்தக் கொடுமையை செய்த அந்த இளைஞர்கள் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள தூண்டியது எது..? அத்தகைய ‘தைரியத்தை’ தந்தது எது..? என்பதை சிந்தித்தோமா..?
பார் போற்றும் என் பாரத மண்தேசத்து ஆண்கள் மனதில் சகபெண்களின் மீது இவ்வளவு வன்மமா?இதை வெறுமனே பாலியல் இச்சை என்று நாம் நோக்கினால், எமது சிந்தனைப் பாங்கு குறுகிய வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றது என்பதே பொருள்..!

இதுபோன்ற சம்பவங்களுக்கு என்ன காரணம்..?

முதலில், தனிமனித ஒழுக்கம் தான்தோன்றித்தனத்தின் புதைகுழிக்குள் அமுங்கிவிட்டது.!கவர்ச்சியையும் ஆபாசத்தையும் கடைச்சரக்காக்கி தனிமனித ஒழுக்கவுணர்வை புதைக்கும் மனோபவத்துக்கு எதிர்ப்பு வெறும் பெயரளவில் நின்றுவிட்டது.மாறாக, அதனைக் காசாக்கும் அதே மக்கள் இன்று குட்டைப் பாவாடையுடன் தில்லி சம்பவத்தைக் கண்டித்து கடைபரப்பி நின்றார்கள்..!
தரையுலகம் சார்ந்த ஊடகம் முழுவதுமே இந்த வன்நிகழ்வுகளுக்கு காரணம் என்று சொல்ல முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, இதுபோன்ற நிகழ்வுகளின் உந்துதல்களுக்கு முழுமுதல் ஆத்திச்சூடி பயிலப்படுவது திரையுலக சார் ஊடகங்களிலிருந்துதான் என்பதும் அதனைவிட பலமான உண்மை..!
ஆடைக்குறைப்பை குறை சொல்வோரை நோக்கி., பெண்ணியவாதிகள் விரல் நீட்டுவதும்,பெண்ணியத்தின் பெயரால்.., இயக்கங்கள் தம்சார்பு நிலையை முன்வைப்பதும்தான் மாறி மாறி நடக்கின்றதே தவிர முடிவின் உன்னத நிலைக்கு பாரதப் பண்பாட்டை நிலைநிறுத்த எவருக்கும் திராணி இல்லை..!
90-களில் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த நடிகை குஷ்பூ (கல்யாணம் இன்றி உறவு கொள்ளலாம் என்று தத்துவம் பேசிய அதே குஷ்பூதான்) அன்றைய பிரபல தமிழ் வாரஇதழ் ஒன்றில் பேட்டியளிக்கும்போது இவ்வாறு கூறினார்:-இந்த அழகான உடலை வைச்சுகிட்டு ரசிகர்களோட உணர்ச்சிகளைத் தூண்டனும்.அதுதான் சினிமா தயாரிப்பாளர்கள் எங்ககிட்ட எதிர்பார்க்கிற முதல் தகுதி.அப்புறம்தான் நடிப்புக்கே முக்கியத்துவம்!’ (ஆனந்த விகடன்:14.07.1991)
பாருங்கள்!இவர் தூண்டிவிட்ட உணர்ச்சிகளுக்கு வடிகாலை இளைய சமூகம் எங்கு போய் தேடுகின்றது..?அதே நடிகையரின் இனமாகிய பெண்ணினத்திடம்தானே..!கேட்டால் றுந யசந னழiபெ கழச றாயவ றந pயனை என்பார்கள்..!
எனவே.., திறந்தவெளியாய் அல்லது இலைமறை காயாய்.., அந்தரங்கங்களை அதகளப்படுத்திவிட்டு ஏற்படும் விளைவுகளுக்கு பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தால் முடிவுதான் என்ன..?அதற்கு பரஸ்பரம் கூறிக்கொள்வதெல்லாம் சரிப்பட்டு வராது என்பதுதான் உலகம் கண்டு வருகின்ற உண்மை..!
யதார்த்தத்தின் அடிப்படையில்,உண்மையின் வெளிச்சத்தில் ஒரு தீர்வைக் கண்டால்தான் இதுபோன்ற நிகழ்வுகளைக் களைய முடியும்..!என்னவென்றாலும் செய்யலாம் எனும் மனோபாவத்துக்குக் காரணம்…, அந்த செயல்களுக்கு உரிய தண்டனை பற்றிய தூரநோக்கு உலக சட்டங்களின் இ.பி.கோ-க்களில் தேட முடியாது.மாறாக, அவற்றை சரியான., உரிய சட்டங்களாக மாற்றினால்தான் உண்டு..!
அதனால்தான், அடிப்படைவாத, வகுப்புசார் பிரிவினரும் தண்டனைகளைக் கடுமையாக்குவது சரியென்கின்றார்கள். பாலியல் பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை அளிப்பதற்கு ஏற்ற வகையில் தற்போதைய சட்டத்தை திருத்துவது பற்றி விவாதிக்க, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தில்லி சம்பவத்துக்குப் பிறகு தனது ட்விட்டரில் செய்தி தந்தார் வலதுசாரி வகுப்புவாத கட்சியான பா.ஜ.க.-வின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ்..!
மதுரை ஆதீனமும் பெண்கள் பர்தா-வை பேண வேண்டும் என்றார்.
தன்னை மறைக்க சொல்லும் பர்தா முறையை எதிர்க்கும் பெண்ணியவாதிகளும்கூட, பர்தா-வுக்கு எதிர்ப்பு காட்டவே முடியாது.அதனால்தான் மாதர் சங்கத் தலைவி வாசுகியும் நாங்கள் பர்தாவை எதிர்க்கவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்..!
வல்லுறவுக்கு ஆட்பட்டவர்கள் அனைவரும் ஆடைக்குறைப்பில் வலம் வந்தவர்கள் அல்ல என்று பெண்ணியவாதிகளின் வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், அதனை மீறிய பிரச்னைகளுக்கு கடுந்தண்டனை அவசியம் என்பதை அவர்களும் ஒப்புக்கொள்கின்றார்கள்.பாதிக்கப்பட்ட பெண் ஆடைக்குறைப்பில் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக இருக்க முடியாது.ஆனால்,காமக் கொடூரனின் சிந்தனையை வேறுவிதமான வினையூக்கிகள் கிளர்ந்தெழச் செய்திருக்கலாமே..!ஊடகங்களில்கட்டுரையின் மேலே ஒரு நடிகை சொன்னதுபோல் ‘உணர்ச்சிகளைத் தூண்டனும்’ என்கின்ற அந்த செய்முறைப் பாடத்துக்கு எந்த பெண்ணும் இலக்காகலாமே..!
மறுபுறம்,ஆணாதிக்க மனோபவம் மட்டுமே ஆடைக்குறைப்பை மகளிர் வல்லுறவுக்கான காரணமாகக் காட்டினாலும் அதுதான் பிரச்னையின் ஆணிவேர் என்பதையும் மறுக்க முடியாது.
அதேபோல்,

பாலியல் வல்லுறவு ஏன் நடக்கிறது

ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு (கற்பழிப்பு எனும் சொல்லாடலுடன் எமக்கு உடன்பாடு இல்லை,கற்பு என்பதை வெறும் பெண்ணுக்குரியதாய் அது உணர்த்துவதால்..!)

ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு (கற்பழிப்பு எனும் சொல்லாடலுடன் எமக்கு உடன்பாடு இல்லை,கற்பு என்பதை வெறும் பெண்ணுக்குரியதாய் அது உணர்த்துவதால்..!)

என்று ஆராய்ந்து பார்த்தால் பல தவறுகள் நம்மிடமே இருக்கின்றது.நம் முன்னோர்கள் தாங்கள் பருவ வயதை எட்டியவுடன் திருமணம் செய்து கொண்டார்கள்.அதனால் 12-14 வயதிலேயே பெற்றோர் ஆனார்கள்.பாலுறவில் அன்பு சேர்ந்த ஒரு அனுபவம் ஏற்பட்டது.இன்றைய சூழ்நிலை அவ்வாறு இல்லை பெண்ணுக்கு 20-25 வயதிலும் ஆணுக்கு 25-30 வயதிலும் திருமணம் நடக்கிறது. மேலும் இன்றைய இளைஞர்களோ நேர காலம் பாராமல் உழைக்கிறார்கள்.அன்றைய காலத்தில் உடல் உளைச்சல் அதிகம் இருந்தது, காரணம் இயந்திரப் பயன்பாடு குறைவு.ஆனால், இன்றைய கால கட்டத்திலோ மன உளைச்சல் அதிகமாக இருக்கின்றது. காரணம் அனைத்தும் இயந்திரமயம்.உடலுழைப்பு குறைவு.மேலும் பணம் மற்றும் வேலைக்காக பெற்றோரை விட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதற்க்கு மேல் தொலைகாட்சிகள், திரைப்படங்கள் செக்ஸ் மற்றும் காதலையே மையமாக கொண்டு உள்ளது. தொட்ட இடமெல்லாம் செக்ஸ், நிர்வாண படங்கள், காட்சிகள!அவன் மனதிற்கு வலு கொடுப்பதோ மது மற்றும் தனிமை.இது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் பொருந்தும்..!

இனி வாருங்கள்..!
பாதிக்கப்பட்டவர் – பாதிப்படையச் செய்தவர்! இவ்விரு நிலைகளில் பாதுகாப்பு-தண்டனை குறித்து அலசினால் முடிவு கிடைக்கும்.காமுகர்களின் இயல்பு நிலை தம்மை பாதிக்காது இருக்க பாதுகாப்பது மங்கையரின் பொறுப்பு.என் வீட்டை நான் திறந்துதான் வைப்பேன் திருடன் வந்து திருடக்கூடாது என்பது நியாயமான வாதமே..!ஆனால், அறிவுப்பூர்வமான செயல் அல்லவே..!அதேபோல், பூட்டி வைத்திருந்தும் திருடன் இப்படி செய்துட்டானே என்றால், சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்.அந்த கடமை தண்டனையின் வடிவில், மற்ற திருடர்களுக்குப் பாடமாக இருந்தால்தானே.., மற்ற திருடர்கள் உருவாகமாட்டார்கள்..!
திருடர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்ற உரிமையாளரின் வாதம்; எத்துனை நியாயமானதோ அதனைவிட சற்றும் குறைந்ததல்ல, வீட்டைப் பூட்டி வைக்க வேண்டும் எனும் நமது பொறுப்புணர்வும்..!
எனவே, பெண் எனும் உன்னத படைப்பை, நாம் மதிக்கின்றோம் எனில் அந்த மதிப்புக்கு மதிப்பு தர அந்த பெண் தன்னை முதலில் மதித்துக் கொள்ள வேண்டும்.அதனைத்தான் பர்தா எனும் மதிப்பு தருகின்றது.அதனையும் மீறி செல்லும் காமுகர்களுக்குத் தண்டனை எனும் பயங்கரம் முன்னெடுக்கின்றது.
இன்று தலைநகரின் ஆடம்பரம் இந்த பாதிப்பை வெளிச்சம் போட்டிருக்கின்றதே..!இதே ஒரு குக்கிராம அல்லது வயல்வெளி அல்லது கட்டட வேலை அல்லது வீட்டுப்பணி ரீமாக்களுக்கு நேர்ந்திருந்தால் நாம் வீதிக்கு வந்திருப்போமா என்பதும் புறந்தள்ளிவிட முடியாத நியாயமான வருத்தம்தானே..!இந்த சம்பவத்துக்குப் பின்னர் எத்தனை சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றனவே..!அதுமட்டுமல்ல, இந்த சம்பவத்தை காசாக்க திரைப்பட துறையினரும் முயல்வதாக செய்திகள் உலவுகின்றன.
ஆம்..!
எத்தைகைய நிலை என்றாலும், இந்த தேசம் ஒரு முழுமையான மாற்றத்துக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ள, தான் மதிக்கும் பெண்ணினத்தை கண்ணியப்படுத்த, அதற்குரிய சட்டங்களைப் பேண வேண்டிய தருணம் வந்துவிட்டது.அவர்கள் சொல்லும் ஆலோசனைகளும், கேட்கும் தண்டனைகளும் அனைவராலும் நியாயப்படுத்தப்படுகின்றன.ஆனால், அந்தோ..! அதே நலம்பயக்கும் முடிவுகளை இஸ்லாம் 1400 வருடங்களாக வலியுறுத்துவதை மட்டும் அடிப்படைவாதம் என்று சொல்லி அலைக்கழிக்க நினைக்கின்றார்கள்..!
அனைத்துக்கும் மேலாக, தன் சகதோழியை இழந்ததால் வெடித்துக்கிளம்பிய மாணவ அலைகள் வெறும் நுரையாய் அமுங்காமல் ஒரு சில அம்சங்களையும் தம் ஆளுமைக் கடலுக்குள் அழுக்கி அழிக்க வேண்டி உள்ளது.ஆம், நட்பின் பெயரால் தோழiமையை விலை பேசுவதைக் களையுங்கள்!குடிப்பது பாவம் என்று போல் சமூக அந்தஸ்தாய் மாறிவிட்டதை விட்டொழியுங்கள்..!மாற்றான் தோட்டத்து மல்லிகையைப் பார்ப்பதே பாவம் என்று போய்.., அது சின்ன வீடாய்., பரிணாம வளர்ச்சி அடைந்து.., நட்சத்திர ஹோட்டல்களில் மனை-மாற்று கலாச்சாரமாய் முன்னேறி.., இன்று லிவிங்-டுகெதர் என்று கவர்ச்சியான பெயரால் புனித உறவு பாழ்படுத்தப்படுவதற்கு எதிராய் குரல் கொடுங்கள்..!ஒருபால் உறவுக்கு சமூக உரிமை கோரும் காமக் கிறுக்கர்களின் பசிக்கு சாவுமணி அடியுங்கள்.,! மாணவ- இளைய சமுதாயம், தனது ஒழுக்க,தார்மீக,பண்பாட்டு மற்றும் கண்ணிய செயல்முறைத் தளங்களிலிருந்து உங்கள் பாரதத்தை என்றும் நடைபிறழ அனுமதிக்காதீர்கள்..!

ஆம், இன்றைய கோபக்கார இந்தியக் குமரியே..! குமாரரே..!

இத்தகைய பாரத்தின் பாரம்பர்யம் காக்க உங்கள் கோபத்தை ஆக்கபூர்வ முறையில் செயலாற்றச் செய்யுங்கள்..!அந்த நேர்ப்பாதைக்குள் உங்கள் மனத்தையும் அறிவையும் உடைமையாக்குங்கள்..! அதற்கு இறையருள் என்றும் துணை நிற்கட்டும்.
இன்னொரு அம்சமும் இங்கு வெளி;ச்சம் போடுகின்றது.அலைகடலென அமெரிக்கர்கள் இஸ்லாத்தின்பால் திரும்புவதற்கு அவர்கள் வார்த்தைகளில் சொன்னால் வளர்ந்து வரும் இஸ்லாமோஃபோபியா-வும் காரணமாக இருப்பதுபோல், தில்லி சம்பவம் முன்னெடுத்து சென்றிருக்கும் பாதை உண்மையான இஸ்லாத்தை நோக்கி இளைய சமூகத்தை இட்டுச் செல்லட்டும். அதற்கு இறையருள் என்றும் துணை நிற்கட்டும். பூக்கள் புயலாகின்றன! புயலில் வக்கிர சருகுகள் வெருண்டோடட்டும். பெண்மையை போகமாக்கி கசக்கி எரியும் கயமைகள் கட்டோடு பொசுங்கட்டும்!கோபக்கார குமரியாய் வெகுண்டெழுந்த நம் இந்திய சகோதரிகள் இஸ்லாத்தின் இந்த உன்னத கொள்கைக்கு சாரை சாரையாய் செவி சாய்ப்பார்கள் என நம்புவோம்.!

Related Post