நுஐம் பின் மஸ்ஊத் அல் அஷ்ஜஈ
(نُعَيْمِ بْنِ مَسْعُودٍ الْأَشْجَعِيِّ)
– நூருத்தீன்
முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இருந்து, அவர்தம் செயல்முறைகளைக் கண்டு, அழகிய முறை
யில் தம் வாழ்வில் பின்பற்றி இஸ்லாத்தின் வடிவை செயல்படுத்திக் காட்டிய தோழர்கள் பலர்..!
நுஐம் வலை விரித்தார். “இந்த பனூ குரைளா இருக்கிறார்களே, முஹம்மதிற்கு எதிராகத் தாங்கள் திரும்பி விட்டதை நினைத்துப் பயந்து கவலைப்பட ஆரம்பித்து விட்டார்கள். நீங்கள் ஏதாவது சந்தர்ப்பத்தில் அவர்களைக் கைவிட்டுத் திரும்பி விடுவீர்களோ என்று அச்சப்பட ஆரம்பித்து விட்டார்கள். ஆகையினால் முஹம்மதுக்குத் தூது அனுப்பி விட்டார்கள்.
எப்படியென்றால் ‘நாங்கள் செய்ததெல்லாம் மகாத் தப்பு. எங்களை மன்னியுங்கள். மீண்டும் உங்களுடன் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு அமைதியாய் வாழ முடிவெடுத்து விட்டோம். எங்கள் தவறுக்குப் பகரமாய் குரைஷ் மற்றும் கத்தஃபான் முக்கியஸ்தர்கள் பலரைப் பிடித்து உங்களிடம் ஒப்படைத்தால் திருப்தியுறுவீர்களா? பிறகு நாங்களும் உங்களுடன் சேர்ந்து கொண்டு குரைஷ் மற்றும் கத்தஃபான் படைகளை துவம்சம் செய்வோம்’ என்று.
எனவே அந்த யூதர்கள் உங்களிடம் ஏதும் பிணையாளிகள் வேண்டும் எனத் தகவல் அனுப்பினால் உங்களில் ஒருவரைக்கூட ஒப்படைத்து விடாதீர்கள். அப்புறம் முக்கியம், இந்தச் செய்தியை நான்தான் உங்களுக்குத் தெரிவித்தேன் என்று சொல்லி விடாதீர்கள்.”
“ஆஹா! நீயன்றோ உற்றத் தோழன். உனக்குத் தக்க சன்மானம் கிடைக்கட்டுமாக” என்று புளகாங்கிதமடைந்தார் அபூஸுஃப்யான்.
பிறகு தன் கத்தஃபான் கூட்டத்தாரிடம் சென்ற நுஐம் அதே செய்தியைத் தெரிவித்து, “பனூ குரைளாக்கள் சூழ்ச்சி வலை விரித்துள்ளார்கள், ஜாக்கிரதை” என்று எச்சரித்து வந்து விட்டார். அவர் வேலை முடிந்தது.
கூட்டணிப் படைத் தலைவர்களுக்கு இரத்தம் கொதித்தது. கோபம் தலைக்கேறியது. சோதித்துப் பார்க்கத் தோன்றியது அபூஸுஃப்யானுக்கு.
தன் மகனை பனூ குரைளாவிடம் அனுப்பி வைக்க, “என் தந்தை தங்களுக்கெல்லாம் முகமன் கூறினார். நாம் முஹம்மது மேல் நிகழ்த்தி வரும் முற்றுகை இழுத்துக் கொண்டே செல்கிறது. வீரர்கள் சலிப்பும் சோர்வும் கொண்டுள்ளார்கள். சண்டையை ஆரம்பித்து அந்த முஹம்மதை ஒழிக்க முடிவெடுத்து விட்டோம். என் தந்தை நாளைக்குத் தொடங்கவுள்ள யுத்தத்தில் தங்களையும் சேர்ந்து கொள்ளச் சொன்னார்.”
அது என்னவோ மறுநாள் சனிக்கிழமை என்பது அபூஸுஃப்யானுக்கு மறந்து தொலைத்து விட்டது. சனிக்கிழமை யூதர்களுக்கு முழு ஓய்வு நாள். ஒன்றும் அசையாது.
“நாளை சனிக்கிழமை. அன்று நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. அது ஒருபுறமிருக்க நீங்கள் உங்கள் முக்கியஸ்தர்கள் எழுபது பேரை எங்களிடம் பிணையாளிகளாக ஒப்படைக்க வேண்டும். சண்டை துவங்கி மூர்க்கமடையும்போது நீங்களெல்லலாம் உங்கள் ஊரைப் பார்க்க ஓடி, நாங்கள் தனியாய் முஹம்மதிடம் மாட்டினால் அதோ கதிதான். எனவே எங்களுக்கு உங்கள் பிணயாளிகள் வேண்டும். அப்பொழுதுதான் சண்டைக்கு வருவோம்.” என்றனர் பனூ குரைளாத் தலைவர்கள்.
அபூஸுஃப்யானின் மகன் வேகமாகத் திரும்பி வந்து, நடந்த செய்தி கூறினான். கூட்டணித் தலைவர்கள் கோபத்தில் கன்னாபின்னாவென்று கத்த ஆரம்பித்து விட்டர்கள். “குரங்குப் பயல்கள், பன்றி மகன்கள்! இறைவன்மேல் சத்தியமாகச் சொல்கிறேன்! ஓர் ஆட்டைப் பணயமாகக் கேட்டால்கூட அவன்களுக்குக் கொடுக்க முடியாது”
நுஐமின் தந்திரம் முழுக்க முழுக்கப் பலித்தது. கத்தியில்லை, சொட்டு இரத்தமில்லை. கூட்டணிப் படை கலகலத்துப் போனது.
அதைத் தொடர்ந்து இரவில் மற்றொரு புயல் அடித்தது. அது நிஜப் புயல். பேய்க்காற்று அடித்தது. கொடிய, கடுமையான குளிர்க்காற்று, கூட்டணிப் படையினரின் கூடாரத்தையும் அவர்களது பண்ட பாத்திரங்களையும் அடித்துச் சென்று, இரவில் அவர்கள் மூட்டிவைத்திருந்த நெருப்பை அணைத்து, அவர்களின் முகங்களிலும் கண்களிலும் மணல் வாரி இறைத்தது. அதற்குமேல் தாக்குப் பிடிக்க இயலாமல் இரவோடு இரவாக அனைவரும் அனைத்தையும் காலி செய்து கொண்டு ஓடிவிட்டார்கள். எழுதியதை ரப்பர் கொண்டு அழித்ததுபோல் காலி. அது ஓர் அற்புதம்! இறைவன் நிகழ்த்திக் காட்டிய அற்புதம்!!
முஸ்லிம்கள் ஆனந்தத்தில் திக்கு முக்காடிப் போனார்கள். நம்பவியலாத வெற்றி அது. மிகப் பெரும் கொண்டாட்டத் தருணம் அது.
ஆனால் நன்றி மிதக்க, அடக்கம் தவழ உரக்க உச்சரித்தனர் –
லா இலாஹா இல்லல்லாஹு வஹ்தஹ்!
ஸதக்க வஅதஹ்!
வ நஸர அப்தஹ்!
வ அஅஸ்ஸ ஜுன்தஹ்!
வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்!
வணங்குதற்கு உரிய தனித்தவன் ஒருவனே, அல்லாஹ் ஒருவனே!
வாக்கை நிறைவேற்றியவன்!
வளமான உதவியைத் தன் அடியார்க்கு வழங்கியவன்!
தன்னுடைய படையைக் கண்ணியப் படுத்தியவன்!
தனித்தவன்; கூட்டணிக் கூட்டத்தினரை வேரறுத்தவன்!
நுஐம் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு) ஒற்றையாளாக மாபெரும் பங்கு வகித்துப் புரிந்த அந்தச் சாதனை, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெரிதும் கவர்ந்து, அதன்பின் பல விஷயங்களில் முக்கியப் பங்கு வகிக்க அவர் நியமிக்கப் பெற்றார்.
அகழி யுத்ததம் நடைபெற்று மூன்று வருடங்களுக்குப் பின் மக்கா முஸ்லிம்கள் வசமானபோது முஸ்லிம்களின் வெற்றி அணிவகுப்பு மக்காவிற்குள் நுழைந்தது. அபூஸுஃப்யான் பார்த்துக் கொண்டிருந்தார். இஸ்லாத்திற்கும் நபிகளாருக்கும் எதிராகப் பல போர்கள் புரிந்து, கெட்ட எதிரியாகத் திகழ்ந்த அதே அபூஸுஃப்யான், இறுதியில் இஸ்லாத்தை ஏற்றது அவரது வாழ்வின் உச்சகட்ட திருப்புமுனை.
மக்காவிற்குள் அணிவகுப்பு நடத்திக் கொண்டிருந்த ஒரு பிரிவில் கத்தஃபான் கொடியை ஒருவர் ஏந்திச் செல்வதைக் கண்டு, “யார் அது?” என்று அபூஸுஃப்யான் விசாரிக்க, “அவர்தான் நுஐம் பின் மஸ்ஊத்” என்று பதில் வந்தது.
“ஹா….! அன்று அகழி யுத்தத்தில் நமக்கு எதிராகப் பயங்கர செயல் புரிந்த நுஐம், அன்று முஹம்மதின் கொடிய எதிரி. இன்று அதே நுஐம் முஸ்லிம்களின் கொடியை ஏந்திக் கொண்டு முஹம்மதின் படையுடன், அவரது தலைமையில் மக்காவிற்கே படையெடுத்து வந்திருக்கிறாரா?”
உதடுகளால் மட்டும் இஸ்லாத்தை உச்சரிக்காத தோழர்கள் அவர்கள்.
ரலியல்லாஹு அன்ஹு!
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.