– மஸிய்யா
ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும், அல்லாஹ்வின் முன்னிலையில் பணிபவர்களாகவும், தானதர்மம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவர்களாகவும் இருக்கின்றார்களோ, திண்ணமாக, அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான். 33:35
¨ தாமதமாக வந்தவர்கள், இமாம் முழுமையாக ஸலாம் கூறி முடிப்பதற்கு முன்பே விடுபட்ட தொழுகையை நிறைவேற்ற எழுந்திருப்பது.
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பதே அவர் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான். எனவே அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ருகூஃ செய்தால் நீங்களும் ருகூஃ செய்யுங்கள். (ஆதார நூல்: புகாரி)
எனவே இமாம் முழுமையாக ஸலாம் கூறி முடிக்கும்வரை தாமதித்திருந்து, பிறகு தமக்கு விடுபட்ட தொழுகையை நிறைவேற்ற எழுந்திருக்க வேண்டும்.
¨ இமாமை முந்திச் செல்வது, அல்லது அவருடன் சேர்ந்தே செல்வது, அல்லது அவரை விட்டும் மிகத் தாமதமாகச் செல்வது.
உதாரணமாக, ருகூஃ செய்தல், ஸுஜூது செய்தல், எழுந்திருத்தல் போன்றவற்றில் இமாம் அதனை செய்வதற்கு முன்னால் செய்வது. அல்லது அவருடன் இணைந்தே செய்வது. அல்லது அவரை விட்டும் மிகத் தாமதமாக செய்துகொண்டிருப்பது. இவை அனைத்தும் தவறான செயல்களாகும். இமாமுக்குப் பின் நின்று தொழுபவர் இமாமைப் பின்பற்றித் தொழுவது அவசியமாகும். இமாம் ருகூஃ செய்த பிறகே அவரைப் பின்பற்றுபவர் ருகூஃ செய்ய வேண்டும். இமாம் ஸுஜூது செய்த பிறகே ஸுஜூது செய்ய வேண்டும். அனைத்து செயர்களிலும் இவ்வாறே பின்பற்ற வேண்டும்.
¨ தாமதமாக வருபவர்கள், தொழுபவர் ருகூஃவில் இருப்பதைக் கண்டால் அந்த ரகஅத்தை அடைவதற்காக வேகமாகச் செல்வது.
இது தடுக்கப்பட்ட செயல்களில் ஒன்றாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் – வேகமாக – ஓடியவாறு வராதீர்கள். நடந்தே வாருங்கள். அமைதியைக் கடைப்பிடியுங்கள். கிடைத்த – ரகஅத்-தை தொழுது கொள்ளுங்கள். விடுபட்ட – ரகஅத்-தை பிறகு பூர்த்திசெய்து கொள்ளுங்கள். (ஆதார நூல்: புகாரி)
¨ தொழுகையில் பார்வையை சுற்றவிடுவது.
இரண்டு பாதங்களுக்கும் இடையிலுள்ள இடத்தைப் பார்ப்பது, முன்னால் பார்ப்பது, அருகிலுள்ளதை பார்ப்பது. தலையை உயர்த்தி மேலே பார்ப்பது. இவைகள் நபிவழிக்கு மாற்றமான செயல்களாகும். தொழும்போது ஸுஜூத செய்யும் இடத்தைப் பார்ப்பதுதான் நபிவழியாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ஸுஜூது செய்யும் இடத்தைத்தான் பார்ப்பார்கள். தஷஹ்{ஹத் (அத்தஹிய்யாத்து) இருப்பின்போது ஆள்காட்டி விரல் அல்லது ஸுஜூதுடைய இடத்தைப் பார்க்க வேன்டும்.