தொழுகையாளிகளே உங்களுக்காக காத்திருக்கும் நற்பாக்கியங்கள்! -2

தொழுகையின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற நன்மாரயம்:P200908220941515399224231

ஒருவர் தொழுகைக்காக நல்ல முறையில் வுழூச் செய்து, கடமையான தொழுகையை மக்களுடன் மஸ்ஜிதில் கூட்டாக நிறைவேற்றினால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) . ‘உங்களில் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் ஒரு ஆறு பெறுக்கெடுத்து ஓடுகின்றது, அவர் அதில் ஒரு நாளைக்கு ஐந்து தடவை குளிக்கின்றார் அவரது உடளில் அழுக்குகள் ஏதும் தங்கி இருக்குமா? என அல்லாஹ்வின் தூதர் தனது தோழர்களிடம் கேட்டபோது, அவர்கள் தங்கியிருக்காது என பதிலளித்தனர். இதே போன்று தான் ஐவேலை தொழுகையும் பாவங்கள் அனைத்தையும் கழுவி விடும்’ என கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

தொழுகையாளிக்கு சுவர்க்கத்தில் உயர் பதவிகள் கிடைக்குமென்ற நன்மாராயம்:

‘எவர் மஸ்ஜிதுக்கு எட்டுகளை வைத்துச் செல்கின்றாரோ (அல்லது மஸ்ஜிதுக்கு போய் திரும்புகின்றாரோ) அவர் செல்லும் பேதும், திரும்பும் போதும் வைக்கின்ற ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்கத்தில் அவரது பதவிகள் உயர்தப்படும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

தொழுகையாளியின் ஒவ்வொரு எட்டுக்கும் பாவங்கள மன்னிக்கப்படும், பதவிகள் உயரும் என்ற சுபச்செய்தி:   ‘ஒருவர் தனது வீட்டிலிருந்து வுழூச் செய்து, அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளில் ஏதாவது ஒரு மஸ்ஜிதுக்கு கடமையான தொழுகையை நிறைவேற்றும் என்னத்தில் எட்டுகளை எடுத்து வைப்பாரானால், அவர் வைக்கும் ஒரு எட்டுக்கு பாவங்கள் மன்னிக்கப்படும், மற்ற எட்டுக்கு அவரது பதவிகள் (சுவர்கத்தில்) உயரும்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).

தொழுகைக்கு நேரகாலத்துடன் செலபவர்களுக்கு கிடைக்கும் நன்மாராயம்:

‘மக்கள் பாங்கின் மற்றும் முன் வரிசையின் சிறப்பை அறிந்துகொள்வார்களானால், சீட்டுக் குழுக்கி பார்பதன் மூலமே தவிர அந்த சந்தர்பத்தை மற்றவர்களுக்கு வழங்கமாட்டார்கள், தொழுகை;கு நேரகாலத்துடன் வருவதன் சிறப்பை அறிந்துகொளவார்களானால் அதற்கும் நேரகாலத்துடன் வந்திருப்பார்கள்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பவரும் தொழுகையாளி தான் என்ற நன்மாராயம்:

‘உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பாரென்றால், அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுவார். அவன் தனது குடும்பத்தின் பக்கம் செல்வதை தொழுகையைத் தவிர வேறெதுவும் தடுக்கவில்லை’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

எவர் கூறும் ஆமீன் மலக்குகளின் ஆமினுடன் நேர்பட்டுவிடுகின்றதோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன என்ற நற்செய்தி:

‘நீங்கள் ஆமீன் கூறும் போது வானிலுள்ள மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர், அவர்களது ஆமீனுடன் உங்கள் ஆமீனும் நேர்பட்டு விடும்போது நீங்கள் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

ஸுரதுல் பாஃதிஹாவின் இறுதியில் இமாம் ஆமீன் கூறுவார், அத்துடன் பின்னாலுள்ளவர்களும் ஆமீன் கூறுவார்கள் இந்த ஆமீனுடன் நேர் படுவதை தான் மேல் உள்ள ஹதீஸ் குறிப்பிடுகின்றது.

தொழுகையாளி அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார் என்ற நற்செய்தி:

‘எவர் ஸுபஹ் தொழுகையை நிறைவேற்றுவாரோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).   தொழுகையாளிக்கு மறுமையில் முழுமைiயான பிரகாசம் என்ற நற்செய்தி:

‘இருள் நேரங்களில் மஸ்ஜிதை நோக்கி நடைபோட்டவர்களுக்கு நாளை மறுமையில் முழுமையான பிரகாசம் இருக்கின்றது என்று நன்மாராயம் பெற்றுக்கொள்ளுங்கள்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (அபூதாவுத், திர்மிதி).

பஃஜ்ர்அஸர் தொழுகைகளை நிறைவேற்றுபவருக்கு சுவர்க்கத்தைக்கொண்டு சுபச்செய்தி:

‘எவர் ஸுபஹ் மற்றும அஸர் தொழுகையை நிறைவேற்றி வருவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

எழுதியவர்:மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

தொடர்புடைய ஆக்கங்கள்:

1. தொழுகையாளிகளே உங்களுக்காக காத்திருக்கும் நற்பாக்கியங்கள்!  -1        

2. தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்!

3. திருக் குர்ஆனின் பார்வையில் தொழுகை பகுதி – 1          

 

Related Post