Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

தொலைக்காட்சி ..!

        -அப்துல்லாஹ்

தொலைக்காட்சி என்பது பயனுள்ள ஊடகமாக இருப்பினும்

தொலைக்காட்சி என்பது பயனுள்ள ஊடகமாக இருப்பினும்

தொலைக்காட்சி தொலைக்காட்சி ..!என்பது பயனுள்ள ஊடகமாக இருப்பினும் அதனைப் பயன்படுத்தும் விதத்தில்தான் அதன் உண்மைப் பயன் இருக்கின்றது. இன்றைய தீமை வளர்ப்பில் முதன்மையாக இருப்பது தொலைக்காட்சி என்பதும் மறுக்க முடியாத உண்மை..!

(மேலும், லுக்மான் கூறினார்:) “என் அருமை மகனே! ஏதேனும் ஒரு பொருள் கடுகளவு இருந்தாலும் சரி, மேலும் அது ஏதேனும் ஒரு பாறையில் அல்லது வானங்களில் அல்லது பூமியில் எங்கு மறைந்திருப்பினும் சரி, அல்லாஹ் அதனை வெளிப்படுத்துவான். அவன் நுண்மையானவனும் எல்லாம் தெரிந்தவனுமாவான்.என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு. மேலும், நன்மை புரியும்படி ஏவு; தீமையைத் தடு! மேலும், எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதனைப் பொறுத்துக்கொள்! நிச்சயம் இவையெல்லாம் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள விஷயங்களாகும்.

தொலைக்காட்சி வீட்டின் எஜமானாகி பலரின் வழிகாட்டியாகவும் மாறியுள்ளது. ஆக்கிரமிப்பால் சமூக ஒழுக்க மாண்புகள் உலகெங்கும் வெகுவாகச் சீரழிந்து வருகின்றது. முஸ்லிம்களைப் பொருத்தவரை இஸ்லாத்திற்கு முரணான பல்வேறு ஓழுக்கக் கேடகளிலும் மூழ்குவது இந்த கேடுகெட்ட தொலைக்காட்சி மூலமாகத்தான் நமது இளைஞர்களை சிந்தனை அடிமைத்துவத்திற்கும், ஒழுக்கச் சீரழிவிக்கும் அழைத்துச் செல்லும் இந்தத் தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களின் கோரப் பிடியிலிருந்து நாம் பாதுகாப்புப் பெற வேண்டும்.

இன்று சமுதாயம் எந்த அளவிற்குச் சீர் கேடுகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளது! நடிகர், நடிகைகள் அணிந்த உடைகளைப் போன்று உடுத்துவதிலும், அவர்களைப் போன்று சிகை அலங்காரம் செய்து கொள்வதிலும் இன்னும் புசைட கசநைனெ ரூ டீழல கசநைனெ கலாச்சாரம், ராக்கிங், ஈவ்-டீசிங், டேட்டிங் (னுயவiபெ) என்ற பெயரில் ஹோட்டல்களில் இளம் ஆணும், பெண்ணும் சந்தித்துக் கொள்ளுதல் போன்ற மானக்கேடான செயல்பாடுகளை மேற்கத்திய கலாச்சாரம் என்ற போர்வையில் நமது இளைஞர்களை மூளைச் சலவை செய்யப்பட்டு திணித்து சமூகச் சீர் கேடுகளுக்கு காரணமாக இருப்பது இந்த தொலைக்காட்சி மற்றும் சினிமாத் துறை அல்லவா? கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் அரைகுறை ஆடைகள் அணிவதற்கு அடிகோலியவை இந்த சின்னத் திரையில் வரும் ஆவுஏ – ஏ ஊhயnநெட போன்ற மட்ட ரக சானல்கள் அல்லவா? மேற்கத்திய மட்டமான நாகரீகத்தை(?) கற்றுக் கொடுக்கும் இந்த கேடுகெட்ட ஊடகங்களினால் எத்தனையோ பள்ளி மாணவிகள் கருத்தரிப்புக்கும், கருக்கலைப்புக்கும் உள்ளாகின்றனறே!

Related Post