தேவை தெளிந்த தொலைநோக்கு..!

 

பொதுவாக இன்றைய மனித உலகு, படாடோபங்களில் உழன்று, ஆளுமையின் உன்னத கீற்றுக்களை அடையாமல் மலிந்து.., வாழ்க்கை மட்டுமே பிரதானம்.., அதன் மதிப்பு துச்சம் என நினைந்து வாழ்கின்றது.

பொதுவாக இன்றைய மனித உலகு, வாழ்க்கை மட்டுமே பிரதானம்.., அதன் மதிப்பு துச்சம் என நினைந்து வாழ்கின்றது.

– மு.அ.அப்துல் முஸவ்விர்

ருமுறை வாசித்த நினைவு.,! நீ செய்தது தவறு.., இப்படி இனி செய்யாதே என நம் நன்மைக்காக நமது பெற்றோர்சொல்லும் வார்த்தை.., அந்த வயதில் நமக்கு அலட்சியத்தின் பொருளுக்குத் தள்ளப்படுகின்றது. ஆம்..! நம் பெற்றோர்
சொன்னது சரிதான் என நாம் உணர ஆரம்பிக்கும் வேளை…, ‘ நீ செய்றது எல்லாம் தப்பு..! இந்த வயசுல உனக்கு,து தேவையா?’ என நம்மை சாடும் மகனோ.., மகளோ பிறந்துவிடுகின்றார்கள்..!
ஆம்.,! இது மனித வாழ்வின் நிதர்சனம்…!
பொதுவாக இன்றைய மனித உலகு, படாடோபங்களில் உழன்று, ஆளுமையின் உன்னத கீற்றுக்களை அடையாமல் மலிந்து.., வாழ்க்கை மட்டுமே பிரதானம்.., அதன் மதிப்பு துச்சம் என நினைந்து வாழ்கின்றது.
அன்பெனும் போர்வையில்.., மதிப்பின்றி.., கவைக்குதவாத அம்சங்களை நம்முடன் பகிரும் அல்லது சார்ந்துகொள்ளும் நபர்களைவிட நட்பெனும் உண்மைப் பூரிகையுடன் நம்மைத் திட்டும் மாந்தர்கள் எத்துணையோ மேல்
என்பதை நம் அறிவு ஏற்க மறுக்கின்றது. இதனால் பிரச்னைகள் வெடித்துக் கிளம்புகின்றன.
விரிந்த அறிவுப் போர்வையுடன் கூடிய தொலைநோக்கு சிந்தனைகளை, எமது தனிப்பட்ட வாழ்விலும்,சமூக வாழ்விலும் நிலைநிறுத்த நாம் மறந்துவிடுகின்றோம்..!
விதவிதமான கைங்கர்யங்களில் விழைந்து கிடக்கும் நமது மனம்.., பிற உள்ளங்களை கொள்ளை
கொள்வது என்பது இலேசுபட்ட லிஷயம் அல்ல..!
அல்லாஹ்வுக்காக ஒரு மனம் இன்னொருவருடன் நட்பு பாராட்டும்போது.., அந்த உண்மை எண்ணத்தில்
பழக்கப்படும் செயல்கள் மற்றவருக்கு வரம்பு மீறுதலாகவோ அல்லது புறக்கணிப்பாகவோ தோன்றிவிடுகின்றது.
கண்ணிய நடத்தையும், நளினப் போக்கும், மென்மையான வாக்கும், விருந்தோம்பலும் பரஸ்பர உறவு முறைக்கு
பலம் சேர்க்கும் பாலங்கள்..!
புறக்கணிக்கப்பட்ட எமது குரல்களின் வேதனைகளையும், அலட்சியப்படுத்தப்பட்ட மகிழ்வுகளின்
குமுறல்களையும் நாம் அதிகம் நேசிப்பவர்களிடம் காட்ட இயலாதபட்சத்தில்,அவை நம்மைவிட பலவீனமானவர்களிடம்
கொப்பளித்து வெளிப்படுகின்றன அல்லது, நவீன யுகத்தில் முகநூல் பக்க முறங்களாக வெடித்துக் கிளம்புகின்றன.!
பல்வகை மீன்கள் நீந்தும் இன்றைய உலகக் குளம் கலங்கிப் போகும்போது, மீன்கள் வெளியே தெரியாமற்
போகின்றன.இதனை சிலர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று நினைக்கின்றார்கள். ,ன்னும் சிலர் அங்கு
மீன்கள் இல்லை என ஒதுங்கிவிடுகின்றார்கள்.
மனித உள்ளங்களை சம்பாதிப்பது என்பது ஒரு அரிய கலை.ஒரு சிலருக்கு கை வந்த கலை..! இன்னும்
சிலருக்கு கை வெந்த கலை..! பொய்யுரைக்கும் உலக உறவுகள் நீடிக்கலாம்..!ஆனால் நிலைத்து நிற்க முடியாது..!
எனவே, ஒரு புதிய ஆண்டு பிறக்கும்போது, எமது வாழ்வாண்டு ஒன்று குறைகின்றது என்பதை நினைவில்
கொள்வது அவசியம். ஆகவே, எத்துணை புத்தாண்டுகளில் நாம் இருந்தோம் என்பதைவிட.., இருந்தோம்,
என்ன செய்துகொண்டிருந்தோம் என்பது குறித்து கவலைப்பட வேண்டியது முக்கியம்! எவ்வளவு சம்பாதித்தோம்
என்பதைவிட எப்படி சம்பாதித்தோம்.., சந்ததிகளுக்கும் எம் சம்பாத்தியத்தில் உரிமை உள்ளவர்களுக்கும் என்ன
செய்தோம் என சிந்திக்க வேண்டும். இவ்வாறாக ஒவ்வொரு துறைகள் சார்ந்தும் சொல்லிக் கொண்டே போக
முடியும்..!
எனவே, இனிவரும் காலங்களிலாவது, எமது பாதையை சீர்படுத்திக்கொள்வோம்..! நிரந்தரமற்ற உலக
வாழ்வின் அற்பங்களுக்காக எமது நிலைத்த மறுமை வாழ்வை காவு கொடுப்பதிலிருந்து விலகி நிற்போம்..!
உதவாக்கரை பிரச்னைகளை உதாசீனப்படுத்திவிட்டு, தேவையாகிப் போன பிரச்னைகளுக்கு தெளிந்த தீர்வு
காண்போம்..! எமது ஏக இறைவன், அதற்கான முன்மாதிரியை.., தனது இறுதித் தூதர், முஹம்மத் (ஸல்) என்பவர்
மூலமாகக் காட்டிவிட்டான். அவரையே முன்மாதிரியாகக் கொள்வோம்..! இறைகொடையை போற்றுவோம்..!

Related Post